மகிழம் பூ குடி தண்ணீர்
மகிழம் பூவைச் சுத்தம் பார்த்து எந்தக் கிருமியும் இல்லாமல் பார்த்து, தண்ணீரில் போட்டுச் சிறிது சூடுபடுத்திக் குடி தண்ணீராகப் பயன்படுத்தினால் உடல் பலம் பெரும், சதைபிடிப்பும் ஏற்படும்.
ஆண்மை வீரியம் திகழ
தேவையான மகிழம் பூவை எடுத்து சுத்தம் பார்த்து அளவாக நீர் விட்டுக் காய்ச்சி அந்த நீரை வடிகட்டி ஒரு டம்ளர் பாலுடன் சேர்த்து அருந்த நாளடைவில் ஆண்மை வீரியம் உணர்வு உண்டாகும்.
தேக அனல் நீங்க
தேவையான மகிழம் பூவைக் குடிநீர், தயாரித்து காலை, மாலை அருந்தி வர உடல் உஷ்ணம் குணமாகும்.
ஆறாத ரணங்களுக்கு
தேவையான உலர்ந்த மகிழம் பூவுடன், கருவேலம்பட்டை, காய்ச்சு இவை இரண்டையும் சேர்த்து கஷாயம் செய்து ஆறாத ரணங்களுக்கு விட்டு அலம்பி வர நாளடைவில் இரணங்கள் ஆறும்.
இப்பூவை நிழலில் காயவைத்துத் தூள் செய்து அதை முகர்ந்து பார்த்தால் ஒற்றைத்தலைவலி நீங்கும்.
நன்றி : டாக்டர் ஏ.ஆர்.என்.துரைராஜ்
மாங்காய், மாம்பழம் இவை போன்று மாம்பூவும் மருத்துவத்திற்கு மிகச் சிறந்தது. |
எட்டிமரம் - புங்க மரம் போல் தோற்றமளிக்கும். ஆனால் இதில் ஆரஞ்சுப்பழ நிறத்தில் ... |
அதிகமாக உணவை உண்ணுதல், காலம்தவறி உண்ணுதல் ஆகியவற்றை தவிர்க்கவேண்டும் சரியான விருந்தை சாப்பிட்டால், குளிர்ந்த ... |
Leave a Reply
You must be logged in to post a comment.