உலகில் உள்ள சாமர்த்தியமான தலைவர்களில் பிரதமர் மோடியும் ஒருவர் என்று குவைத் வெளியுறவுத்துறை அமைச்சர் அப்துல்லா அலி அல் யாஹ்யா தெரிவித்துள்ளார்.
இந்தியா – குவைத் நாடுகளுக்கு இடையிலான உறவை பலப்படுத்தும் விதமாக, கடந்த 3ம் தேதி குவைத் வெளியுறவுத்துறை அமைச்சர் அப்துல்லா அலி அல் யாஹ்யா இந்தியா வந்தார். பின்னர், பிரதமர் மோடியை சந்தித்து பேசினார்.
இவருடனான சந்திப்பு குறித்து பிரதமர் மோடி விடுத்த எக்ஸ் தளப்பதிவில், ‘குவைத் வெளியுறவுத்துறை அமைச்சர் அப்துல்லா அலியை வரவேற்பதில் பெரும் மகிழ்ச்சியடைகிறேன். குவைத்தில் இந்தியர்களின் நலனுக்காக, ஆழமான மற்றும் வரலாற்று உறவுகளை மேம்படுத்த இந்தியா உறுதிபூண்டுள்ளது,’ எனக் குறிப்பிட்டிருந்தார்.
நேற்று வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் மற்றும் அமைச்சர்களை அப்துல்லா அலி சந்தித்து பேசினார். அதன்பிறகு அப்துல்லா அலி செய்தியாளர்களிடம் பேசியதாவது: உலகளவில் சாமர்த்தியமான தலைவர்களில் ஒருவரான பிரதமர் மோடியை சந்திக்க வாய்ப்பு கொடுத்ததற்கு முதலில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். பிரதமர் மோடியால் இந்தியா சிறந்த நிலையை அடையும் என்பதை உறுதியாக சொல்கிறேன். இந்தியா எங்களின் சிறந்த நட்பு நாடு. இந்தியா – குவைத் நாடுகளுக்கு இடையே உள்ள சிக்கல்களுக்கு கூட்டுக்குழு மூலம் தீர்வு காணப்படும் என்று நம்புகிறேன், எனக் கூறினார்.
மகிழம் பூ குடி தண்ணீர் மகிழம் பூவைச் சுத்தம் பார்த்து எந்தக் கிருமியும் இல்லாமல் ... |
நல்ல சூழ்நிலை தியானம் குறித்த நூல்களைப் படித்தல் மகான்களின் வரலாறுகளைப் படித்தல் தியாகத்திற்கான பொருள் தியானம் மந்திரம் குறியீடு (அடையாளம்) குரு.தியானம் ... |
1. கண்பார்வைத்திறன் குன்றியிருத்தல் 2. கண்நோய் 3. மாலைக்கண் நோய் 4. கண்ணில் சதை வளருதல் 5. கண்ணின் ... |