இந்திய ராணுவத்திற்கு தரமற்ற 600 வாகனங்களை வாங்குவதற்கு அனுமதி தந்ததால் ரூ.14 கோடி லஞ்சம்தர ஓய்வுபெற்ற ஒரு ராணுவ அதிகாரி முன்வந்ததாக ராணுவ தலைமை தளபதி விகே.சிங் கடந்த மாதம் பரபரப்பு புகாரை வெளியிட்டார்.
இந்நிலையில் ராணுவ தலைமை தளபதி விகே. சிங்கிடம்,
லஞ்சம் தொடர்பாக புகார் தருமாறு சி.பி.ஐ. அதிகாரிகள்_கேட்டனர். அதை ஏற்று விகே.சிங் சிபிஐ.யிடம் அதிகாரப்பூர்வ புகார்மனு கொடுத்துள்ளார். அந்தமனுவில் அவர், ஓய்வுபெற்ற லெப்டினன்ட் ஜெனரல் தேஜிந்தர் சிங் தனக்கு லஞ்சம் தர முன்வந்தார் என கூறி இருப்பதாக தெரிகிறது.
இதற்கிடையே இந்திய ராணுவத்துகு வெக்ட்ரா நிறுவனத்திடமிருந்து 1997ம் ஆண்டு முதல் வாகனங்கள் வாங்குவது தொடர்பாக சிபிஐ.தீவிர விசாரணையை மேற்கொண்டது. அப்போது வெக்ட்ரா நிறுவன தலைவர் ரவீந்தர் ரிஷி, ராணுவத்துக்கு வாகனங்களை தயாரித்து கொடுத்ததில் முறைகேடாக பணம் சம்பாதித்து இருப்பதை உறுதிபடுத்தியது.
2010-ம் ஆண்டு மதிப்பீட்டின் படி ராணுவத்துக்கு ஒரு_டிரக் ரூ.72 லட்சம் தந்து வாங்கப்பட்டது. அந்தவகையில் ஒவ்வொரு டிரக்குக்கும் ரவீந்தர்ரிஷி தலா ரூ.5 லட்சம் முறை கேடாக பெற்றுள்ளார். அவர் ராணுவ வாகன விற்பனையின் மூலம் இது வரை ரூ.250 கோடிக்கும் மேல் முறை கேடாக சம்பாதித்திருப்பதை சிபிஐ. உறுதிசெய்துள்ளது .
பால் தரும் தாய்மார்கள் நல்ல ஆரோக்கியமாகவும், உடல் நலத்துடனும் இருந்தால்தான் 'பால்' நன்றாகச் ... |
பிறந்த குழந்தைக்கு தலையில் நல்லெண்ணை தேய்க்கக் கூடாது. தேங்காயெண்ணையைக் காய்ச்சித்; தேய்க்கணும். குழந்தை ... |
உடல்சூடு தணிக்கவும், பசித்தூண்டியாகவும் செயல்படுகிறது. பழச்சாறு, கரிசலாங்கண்ணிச்சாறு, பால் வகைக்கு அரைலிட்டர் வீதம் எடுத்து ... |
Leave a Reply
You must be logged in to post a comment.