செந்தில் பாலாஜி அமைச்சராக தொடர்வதில் மீண்டும் உச்ச நீதிமன்றம் கேள்வி

செந்தில் பாலாஜி அமைச்சராக எப்படி தொடர்கிறார் என்று சுப்ரீம் கோர்ட் மீண்டும் கேள்வி எழுப்பியுள்ளது.

சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட செந்தில் பாலாஜி, 471 நாள் சிறைவாசத்திற்குப் பிறகு ஜாமினில் வெளியே வந்தார். பிறகு, மறுநாளே அவர் அமைச்சராகப் பொறுப்பேற்றுக் கொண்டார்.

அமைச்சராக அவர் பொறுப்பேற்றதை எதிர்த்து சென்னையைச் சேர்ந்த வித்யாகுமார் என்பவர் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். அமைச்சர் பதவியில் இல்லை எனக் காரணம் காட்டி ஜாமினை பெற்ற அவர், மறுநாளே மீண்டும் அமைச்சராக பதவியேற்றுள்ளதாகவும், கீழமை நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்ற வருவதால், விசாரணை பாதிக்கப்படுவதாக குறிப்பிட்டிருந்தார். எனவே, அவரது ஜாமினை ரத்து செய்யக்கோரி மனுதாரர் வலியுறுத்தியிருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், ‘ஜாமின் பெற்ற மறுநாளே அமைச்சராகி உள்ளீர்கள். இதன்மூலம், இந்த வழக்கில் தொடர்புள்ள சாட்சிகளுக்கு அழுத்தம் உண்டாகாதா? வழக்கின் விசாரணை பாதிக்கப்பட்டால், அமலாக்கத்துறை கோர்ட்டை நாடுவார்கள்,’ எனக் கூறி விசாரணையை ஒத்தி வைத்தனர்.

இந்த நிலையில், இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது, செந்தில் பாலாஜி அமைச்சராக எப்படி தொடருகிறார்? என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர். மேலும் இது தொடர்பாக உரிய பதிலை வரும் 18ம் தேதிக்குள் தெரிவிக்க வேண்டும் என்று உத்தரவிட்டனர். இந்த வழக்கில் அமலாக்கத்துறை தங்களின் வாதங்களை எழுத்துப்பூர்வமாக தாக்கல் செய்ய சுப்ரீம் கோர்ட் அனுமதியளித்துள்ளது.

அமைச்சர் பதவி விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட் தொடர்ந்து கேள்வி எழுப்பி வருவதால், செந்தில் பாலாஜிக்கு பெரும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

அரசு பள்ளிகளில் இலவசமாக 3 மொழி க ...

அரசு பள்ளிகளில் இலவசமாக 3 மொழி கற்கும் வாய்ப்பை ஏன் தடுக்கிறீர்கள் – அண்ணாமலை கேள்வி அரசுப் பள்ளிகளில் இலவசமாக மூன்று மொழிகள் கற்கும் வாய்ப்பை ...

தாய் மொழிக்கு முக்கியத்துவம் அ ...

தாய் மொழிக்கு முக்கியத்துவம் அளிக்கும் புதிய தஸ்ய கல்வி கொள்கை – மத்திய கல்வி  அமைச்சர் 'புதிய கல்விக் கொள்கை தாய்மொழிக்கு முக்கியத்துவம் அளிக்கிறது. அனைத்து ...

முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை ...

முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்றுவோம் – பிரதமர் மோடி அறிவுரை டில்லியில் இன்று (பிப்.,17) அதிகாலை நில அதிர்வு உணரப்பட்ட ...

ஜவுளித் துறை ஏற்றுமதி வரும் 2030ம ...

ஜவுளித் துறை ஏற்றுமதி வரும் 2030ம் ஆண்டுக்குள் ரூ 9 லட்சம் கோடி ஏலக்காய் எட்டும் – பிரதமர் மோடி உறுதி 'ஜவுளித் துறை ஏற்றுமதி வரும் 2030ம் ஆண்டுக்குள் ரூ.9 ...

யாரையும் புண்படுத்த மாட்டோம் R ...

யாரையும் புண்படுத்த மாட்டோம் – ஆர் எஸ் எஸ் தலைவர் மோகன் பகவத் 'யாரையும் புண்படுத்தும் விஷயங்களை நாங்கள் செய்ய மாட்டோம்' என ...

வாரணாசியில் தமிழ்ச் சங்கம் நடப ...

வாரணாசியில் தமிழ்ச் சங்கம் நடப்பது மகிழ்ச்சி – பிரதமர் மோடி உத்தர பிரதேச மாநிலம் வாரணாசியில் தமிழ்ச் சங்கமம் நடப்பது ...

மருத்துவ செய்திகள்

பட்டினிச் சிகிச்சை

இயற்கையின் மிகச் சிறந்த ஆயுதம் பட்டினி. நோயை எதிர்க்கவும், குணமாக்கவும் இயற்கையாகவே உடல் ...

வயிற்றுப்புண் குணமாக

நன்கு முற்றிய வெண்பூசணிகாயை தோல் பகுதிகளை நீக்கி விட்டு, சதைப்பற்றை மட்டும் எடுத்து ...

மாதுளையின் மருத்துவ குணம்

புளிப்பு மாதுளை, இனிப்பு மாதுளை, இனிப்பும், புளிப்பும் கலந்த மாதுளை என்று மொத்தம் ...