கறிவேப்பிலை | கறிவேப்பிலையின் மருத்துவ குணம்

கொத்துமல்லி, புதினா, போன்று கறிவேப்பிலையையும் நாம் வாசனைக்காக பல நூறு ஆண்டுகளாக பயன்படுத்தி வருகின்றோம், ஆனால் கறிவேப்பிலை பல அறிய மருத்துவ தன்மைகளை தன்னகத்தே கொண்டுள்ளது என்பது நம்மில் பலருக்கு தெரிவதில்லை,

கறிவேப்பிலை கீரை வகையை சேர்ந்தது இல்லை என்ற போதிலும் கீரைகளில் இருக்கும் அனைத்து சத்துக்களும் இதில் அடங்கியுள்ளது.

கறிவேப்பிலையி னில் வைட்டமின் பி, பி2, ஏ, சி, சுண்ணாம்பு சத்து, இரும்பு சத்து ஆகிய சத்துக்கள் அதிகம் உள்ளது.

கறிவேப்பிலையை நிழலில் நன்றாக உலர்த்தி காயவைத்து பொடி பொடியாக ஆக்கி கஷாயம் செய்து காலை மற்றும் மாலை அருந்தி வந்தால் உடலில் சர்க்கரையின் அளவை சீராக வைத்திருக்கலாம் .

கறிவேப்பிலையை நன்றாக சுத்தம் செய்துவிட்டு நீரில் அலசி அதனுடன் சிறிதளவு சின்ன வெங்காயம், இஞ்சி, சீரகம், 2 பூண்டு பல், புதினா அல்லது கொத்தமல்லியை கலந்து நன்றாக அரைத்து அதனுடன் எலுமிச்சம் பழத்தை பிழிந்து நன்கு-கலக்கி மதியஉணவில் சாதத்தோடு கலந்து உண்டு வந்தால் மன உளைச்சல்,மன இறுக்கம், மன அழுத்தம் குறைந்து மனநிலை சீராகும் மாறும். உடல் புத்துணர்வு பெரும்

கறிவேப்பிலையை தினமும் உணவில் சேர்த்து வந்தாலோ அல்லது தலையில் தேய்க்கும் எண்ணெயில் போட்டு நன்றாக காய்ச்சி ஆறவைத்து அதை தினமும் தலையில் தேய்த்து வந்தாலோ இளநரை மாறும்,

ஒரு லிட்டர் எண்ணெயில் பத்து கறிவேப்பிலையை போட்டு காய்ச்சி வடிகட்டினால் எண்ணெயில் இருக்கும் கொழுப்பு சத்து நீங்கும்,

கறிவேப்பிலை குடலில் இருக்கும் கிருமிகளை அழிக்கும்.

· கண் பார்வையை தெளிவடைய செய்யும்

· இரத்தத்தை சுத்தம் செய்யும் .

· மதுபோதையில் தள்ளாடுபவர்களுக்கு கறிவேப்பிலையின் சாரை கொடுத்தால் போதை உடனே குறையும்.

 

கறிவேப்பிலையின் மருத்துவ குணம் பற்றிய வீடியோ

{qtube vid:=x-N2I7jvlKs}

கருவேப்பிலை, கறிவேப்பிலையை, கறிவேப்பிலையாக

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

போர் விமானங்களை விரைவு சாலைகளி� ...

போர் விமானங்களை விரைவு சாலைகளில் தரையிறக்கி ஒத்திகை பஹல்காம் தாக்குதலுக்குபிறகு, இந்திய விமானப்படையினர், போர் விமானங்களை விரைவு ...

துறைமுக நகரங்கள் முக்கியவளர்ச� ...

துறைமுக நகரங்கள் முக்கியவளர்ச்சி மையமாக மாறும் கேரளாவின் திருவனந்தபுரத்தில் விழிஞ்சம் துறைமுகத்தை அதானிநிறுவனம் பொதுத்துறை மற்றும் ...

தமிழக விவசாயிகளை ஏமாற்றும் தி.ம ...

தமிழக விவசாயிகளை ஏமாற்றும் தி.மு.க., அரசு: அண்ணாமலை குற்றச்சாட்டு பொய்யான வாக்குறுதிகள் கொடுத்துத் விவசாயிகளை ஏமாற்றி வரும் தி.மு.க., ...

மோடி வேண்டும் என சொல்லும் பாகிஸ ...

மோடி வேண்டும் என சொல்லும் பாகிஸ்தானியர் அ.தி.மு.க., - பா.ஜ., கூட்டணியை சுமூகமான சூழலில் கொண்டுசெல்ல ...

எந்த ஒரு சவாலையும் சந்திக்கும் ...

எந்த ஒரு சவாலையும் சந்திக்கும் போராளி பிரதமர் மோடி – நடிகர் ரஜினிகாந்த் 'பஹல்காம் தாக்குதல் காட்டுமிராண்டித்தனமானது; மோடி ஜம்மு-காஷ்மீருக்கு அமைதியைக் கொண்டுவருவார்,' ...

சினிமா தயாரிப்பில் உலகின் மையம� ...

சினிமா தயாரிப்பில் உலகின் மையமாக மாறி வரும் இந்தியா: பிரதமர் மோடி பெருமிதம் ''சினிமா தயாரிப்பில் உலகளாவிய மையமாக இந்தியா வளர்ந்து வருகிறது'' ...

மருத்துவ செய்திகள்

டீ யின் மருத்துவ குணம்

டீ குடிப்பதினால் சில வகை புற்று நோய்களும், இதய நோய்களும் ஏற்படுவதற்க்கான வாய்ப்புகள் ...

கரிசலாங்கண்ணி இலையின் மருத்துவக் குணம்

கரிசலாங்கண்ணியானது பித்தநீர்ப் பெருக்கியாகவும் மலமகற்றியாகவும் செயல்படுகிறது.

கர்ப்பிணிகளுக்கு DHA கூடிய பால் மாவு அவசியமா?

அதற்கு எந்த விதமான ஆதாரமும் இல்லை. நான் எந்த ஒரு ஊட்டச்சத்து மாவையும் ...