தேசிய வாத காங்கிரஸ்- சரத் சந்திரபவார் கட்சி தலைவர் சரத்பவார் இன்று பிரதமர் மோடியை சந்தித்து பேசினார்.
மஹாராஷ்டிராவில் சமீபத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் மஹா விகாஷ் அகாடி கூட்டணி படுதோல்வி அடைந்தது. இக்கூட்டணியில் இடம் பெற்றிருந்த பிரதான கட்சியான தேசியவாத காங்கிரஸ்-சரத்சந்திரபவார் கட்சியின் தலைவர் சரத்பவார் இன்று (டிச.18) டில்லி பார்லிமென்ட் வளாகத்தில் உள்ள பிரதமர் அலுவலகம் சென்று மோடியை சந்தித்து பேசினார். இவரும் தற்போதைய அரசியல் சூழல் உள்ளிட்ட முக்கிய விஷயங்கள் குறித்து பேசியதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த சந்திப்புக்கு பின் சரத்பவார் கூறியது, மரியாதை நிமித்தமாக சந்தித்தேன். அரசியல் குறித்து பேசவில்லை என்றார். முன்னதாக சரத்பவார் பிரதமர் மோடிக்கு மாதுளை பழங்கள் வழங்கினார். அப்போது சரத்பவார் மஹாராஷ்டிராவின் மேற்கு மாவட்டமான பஹல்தான் பகுதியில் விளைந்தவை இம்மாதுளை பழங்கள் என பிரதமர் மோடியிடம் தெரிவித்தார்.
30 வயதிற்குட்பட்ட தம்பதியினர் முறையே தாம்பத்திய உறவு வைத்திருந்தால், 6 மாதம் முதல் ... |
கரிசலாங்கண்ணியானது பித்தநீர்ப் பெருக்கியாகவும் மலமகற்றியாகவும் செயல்படுகிறது. |
குடல் வாயு அகற்றியாகவும், பசி தூண்டியாகவும் நுண்புழுக் கொல்லியாகவும் செயல்படுகிறது. |