இந்தியாவிலேயே மிகப்பெரிய ஊழல் முதல்வராக, ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் உள்ளார்,’ என மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பேசினார்.
இந்தாண்டு இறுதியில், ஜார்க்கண்ட் மாநில சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளதையடுத்து, அதற்கு தயாராகும் வகையில், இன்று பா.ஜ., பரிவர்தன் யாத்ரா ஊர்வலம் அந்த மாநிலத்தில் நடந்தது. இந்நிகழ்ச்சியில், ராஜ்நாத்சிங் கலந்து கொண்டு கட்சி கொடியேற்றினார்.
பின்னர் ராஜ்நாத் சிங் பேசியதாவது: ஹேமந்த் சோரன், மிகப்பெரிய ஊழல் முதல்வர். அவர், இந்தியாவின் சக்திவாய்ந்த ஜனநாயகத்தை, ஊழலால் கறைபடிய வைக்கிறார். இந்தியா, இது போன்ற மனிதர்களை ஏற்றுக்கொள்ளாது. இதனால், மாநிலத்தில் பா.ஜ., தலைமையிலான அரசை அமைக்க வேண்டும். ஹேமந்த் சோரன் அரசு மாற்றப்பட வேண்டும்.
ஆளும் ஜார்க்கண்ட் முக்தி மோர்சா (ஜே.எம்.எம்) காங்கிரஸ் மற்றும் ராஷ்டீரிய ஜனதா தளம் ஆகிய மூன்று கட்சிகளும் மாநில வளர்ச்சிக்கு முட்டுக்கட்டை போட்டு வருகின்றன. ரோஹிங்யா, வங்கதேச முஸ்லிம்கள் குறித்து, பா.ஜ.க., எடுத்து வரும் நடவடிக்கைகளை ஏற்றுக்கொள்ளாமல் மாநில அரசு குற்றம் செய்து வருகிறது. காங்கிரஸ் தலைவர் ராகுல், அமெரிக்கா சென்று இந்தியாவை குறை கூறி பேசினார். இந்தியாவில், சீக்கிய சமூகத்தினருக்கு, பாதுகாப்பு இல்லை என பேசினார். வெளிநாடுகளில், இந்தியாவின் செல்வாக்கை குறைத்து மதிப்பிட்டு பேசுகிறார். இவ்வாறு ராஜ்நாத் சிங் பேசினார்.
கருத்தரிப்பு என்பது வியாதியில்லை. அது ஒரு உடல் ரீதியான மாற்றம். இதைச் ... |
சிலந்திப்பூச்சி விஷம், கருங்குஷ்டம், கரப்பான், ரோகம் இவை ஆடுதீண்டாப்பாளை மூலம் குணமாகும். உடல்பலம் ... |
டீ குடிப்பதினால் சில வகை புற்று நோய்களும், இதய நோய்களும் ஏற்படுவதற்க்கான வாய்ப்புகள் ... |