ஜார்க்கண்ட் ஜனநாயக தேர்தல் திருவிழாவில் மக்கள் ஆர்வத்துடன் வாக்களிக்க வேண்டும் என்று பிரதமர் மோடி கூறி உள்ளார்.
ஜார்க்கண்ட் மாநில சட்டசபை தேர்தல் ஒட்டுப்பதிவு அறிவித்தபடி இன்று காலை 7 மணிக்குத் தொடங்கியது. இந்த தேர்தலில் மாஜி முதல்வர் சம்பாயி சோரன், மாஜி எம்.பி., கீதா கோரா என மொத்தம் 683 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.
ஓட்டுப்பதிவு தொடங்கியவுடன் நீண்ட வரிசையில் ஆர்வத்துடன் காத்திருந்த மக்கள் தங்கள் ஜனநாயக கடமையை ஆற்றினர். இந் நிலையில் பிரதமர் மோடி ஜார்க்கண்ட் வாக்காளர்களுக்காக பதிவு ஒன்றை தமது எக்ஸ்வலை தளத்தில் பதிவிட்டு உள்ளார். அதில் அவர் கூறி உள்ளதாவது;
ஜார்க்கண்ட் ஓட்டுப்பதிவு இன்று நடக்கிறது. இந்த ஜனநாயக திருவிழாவில் மக்கள் முழு ஆர்வத்துடன் ஓட்டளிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். முதல்முறை ஓட்டு போடும் அனைவருக்கும் எனது வாழ்த்துகள்.
இவ்வாறு பிரதமர் மோடி பதிவிட்டுள்ளார்.
வயிறு எரிச்சல், அடிவயிற்றுக் கோளாறுகளை உடனடியாகச் சரி செய்யும். சிறுநீரகக் கோளாறுகளையும், சிறுநீர்ப்பைக் ... |
அகன்ற இலைகளையும், புனல் போன்ற நீண்ட மலர்களையும், முள் நிறைந்த காயையும் உடைய ... |
Rh சோதனை செய்வது நல்லது. Rh ல் இருவகை உள்ளது. ஒன்று +ve (positive) ... |