நீரிழிவு நோய் குறித்த விழிப்புணர்வை அனைவரும் பெறவேண்டும்.
ஒருவருக்கு அதிக தாகம்… அதிக பசி… அதிக சோர்வு… அதிகமாகச் சிறுநீர் போதல்… அதிக உடல் பருமன்… இருப்பின் அவருக்கு நீரிழிவு நோய் இருக்க வாய்ப்புண்டு. எனவே, அவர் தமது இரத்தத்தில் (உடலில்) சர்க்கரையின் அளவைத் தெரிந்து கொள்ள உடனே பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.
'நீரிழிவு நோய் விழிப்புணர்வில்' இச் செய்தியே முதல் விழிப்புணர்வுச் செய்தி. இதனை அனைவருக்கும் கூறி நீரிழிவு நோய் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.
தொற்றுநோய்க்குத் தடுப்பூசி உண்டு (Communicable Disease Immunisation)
காசநோயக்குத் தடுப்பூசி பி.சி.ஜி (B.C.G. Vaccination) என்று உண்டு.
இளம்பிள்ளைவாதம் என்று சொல்லப்படும் போலியோ நோய்க்குத் தடுப்பூசி, போலியோ சொட்டு மருந்து (Polio Drops)என்று உண்டு.
ஆனால் பாரவாத நோய்கள் எனப்படும் (Non – Communicable Disease) நீரிழிவுநோய்க்குத் தடுப்பூசி எதுவும் இல்லை.
நீரிழிவு நோய் உள்ளவர்கள் போட்டு கொள்ளும் 'இன்சுலின் ஊசி' என்பது, நீரிழிவுநோயைக் கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ள மட்டுமே உதவும்; இந்நோயைக் குணப்படுத்தாது.
நீரிழிவுநோய் வாழ்நாள் முழுவதும் தொடரக்கூடியது.
மருத்துவச் செலவின்றி நீரிழிவுநோயைக் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ள முடியும். அதற்கு,
1. நீரிழிவுநோய் குறித்து அறிந்து கொள்ள வேண்டிய அடிப்படைச் செய்திகளை அறிந்துகொள்ள வேண்டும்.
2. சரியான, அளவான உணவுமுரைப் பழக்கத்தைக் கடைபிடிக்க வேண்டும்.
3. அவசியமான உடற்பயிற்சிகள் செய்து வர வேண்டும்.
4. மனப்பதட்டதைப் போக்க யோகாசனம், தியானம் போன்றப் பயிற்சிகளைச் செய்து வர வேண்டும்.
ஆரம்ப நிலையிலேயே நீரிழிவுநோயை அறிந்து கொண்டு செயல்பட்டால், அடுத்தடுத்துஏஎற்படக்கூடிய பாதிப்புகள் வராமல் காத்துக் கொள்ள முடியும். எனவே நீரிழிவுநோய் உள்ளவைகள்.
கண் பாதுகாப்பு, இதய நோய் வராமல் பாதுகாத்துக் கொள்வது, சிறுநீரகப் பாதுகாப்பு, கால்கள் பாதுகாப்பு போன்றன குறித்து அறிந்து கொள்ள வேண்டும்.
நன்றி : டாக்டர் வேணு புருஷோத்தமன்
முருங்கை இலை காம்புகளை சிறிது சிறிதாக நறுக்கி அதனுடன் சீரகம்,கறிவேப்பிலை,பூண்டு, சோம்பு, சின்ன ... |
ரோஜாப் பூ வாய்ப்புண், சிறுநீர், வயிற்றுப் புண், தொண்டைப் புண், மார்புச்சளி, காது ... |
சரியான நேரத்தில் தடுப்பூசி போடாப்படாத குழந்தைகள், வெயில் காலங்களில் அம்மை தொற்றுக்கு உள்ளாகிறார்கள் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.