உ.பி., மாநிலம் பிரயாக்ராஜ் மகா கும்பமேளாவில் இன்று (பிப்.,05) காலை 11 மணிக்கு பிரதமர் மோடி புனித நீராடுகிறார்.
அதிகாரிகள் வெளியிட்டுள்ள அட்டவணையின்படி, பிரதமர் மோடி காலை 10:00 மணிக்கு பிரயாக்ராஜ் விமான நிலையத்தில் தரையிறங்குவார், அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் நைனியில் உள்ள டில்லி பப்ளிக் பள்ளி மைதானத்தை அடைவார்.
காலை 10:45 மணிக்கு, அவர் அரேல் காட் சென்றடைவார், பின்னர் சங்கமத்திற்கு படகு சவாரி செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. காலை 11:00 மணி முதல் 11:30 மணி வரை, மோடி சுமார் அரை மணி நேரம் கும்பமேளா நிகழ்வில் கலந்து கொள்வார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
144 ஆண்டுக்கு ஒரு முறை நடைபெறும் மஹா கும்ப மேளா, ஏற்கனவே நாட்டின் பல பகுதிகளிலிருந்தும் மற்றும் உலகம் முழுவதிலிருந்து கோடிக்கணக்கான பக்தர்களை ஈர்த்துள்ளது குறிப்பிடத்தக்கது.
சிலருக்கு மூலம் வெளியே வரும் உள்ளே போகும். இப்படிப்பட்டவர்கள் அத்தி இலையில் ... |
வியர்வை பெருக்கியாகவும், கோழையகற்றியாகவும், காய்ச்சல் தணிக்கும் மருந்தாகும் செயல்படுகிறது. |
கொடிமுந்திரியோ பழத்திற்குச் சுரம், அருசி, அதிக தாகம், உடல்புண்கள், இரைப்பு, கஷாயம், இரத்த ... |