மொரீஷியஸில் புனித ஏரியான கங்கா தலாவில், திரிவேணி சங்கமத்தில் இருந்து எடுத்துச் செல்லப்பட்ட புனித நீரை ஊற்றி பிரதமர் மோடி வழிபாடு நடத்தினார்.
கிழக்கு ஆப்ரிக்க நாடான மொரீஷியஸ் நாட்டின் தேசிய தினம் மற்றும் சுதந்திர தினத்தில் சிறப்பு விருந்தினராக பங்கேற்பதற்காக, பிரதமர் நரேந்திர மோடி இரண்டு நாள் பயணமாக சென்றுள்ளார். அங்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் அவர் பங்கேற்று வருகிறார்.
மொரீஷியஸ் நாட்டின் மிக உயரிய, ‘த கிராண்ட் கமாண்டர் ஆப் த ஆர்டர் ஆப் த ஸ்டார் அண்ட் கீ ஆப் த இந்தியன் ஓஷன்’ என்ற விருதை, பிரதமர் மோடிக்கு அந்த நாட்டின் பிரதமர் நவின் ராமகூலம் வழங்கி கவுரவித்தார்.
இது குறித்து எக்ஸ் தளத்தில் பிரதமர் வெளியிட்டுள்ள பதிவில், ‘இந்த நிறுவனம் கற்றல், ஆராய்ச்சி மற்றும் பொது சேவைகளை வழங்கும் மையமாக திகழ்வதுடன், புதிய யோசனைகள் மற்றும் தலைமைத்துவத்தை வளர்க்கும்,’ எனக் குறிப்பிட்டிருந்தார்.
தொடர்ந்து, உத்தரபிரதேசம் பிரயாக்ராஜ் நகரில் நடந்த கும்பமேளாவில் இருந்து எடுத்துச் செல்லப்பட்ட புனித கங்கை நதியின் தீர்த்தத்தை, மொரீஷியஸின் போர்ட் லூயிஸில் உள்ள கங்கா தலாவ் ஏரியில் ஊற்றி வழிபாடு செய்தார். இது இருநாடுகளிடையேயான கலாசாரம் மற்றும் ஆன்மீகம் இணைப்பின் சான்றாக பார்க்கப்படுகிறது.
கங்கா தலாவ் மொரீஷியசில் உள்ள புனித ஏரியாகவும், இது ஹிந்துக்களின் ஆன்மீக ஸ்தலமாகவும் கருதப்படுகிறது.
தியானம் பழகுவதற்கு பிரானயாமப் பயிற்சியும், நாடி சுத்தி பயிற்சியும் அவசியமாகும். நாடிகளில் உள்ள ... |
மனித உடலின் இடுப்புக்கு மேலே இருபுறமும் விலா எழும்புக் கூண்டுக்குள் மறைந்து இருப்பவை ... |
இதைப் புதினா என்றும் கூறுவர். மணமுள்ள இது கொடியாகத் தரையில் படரும். சாம்பார், ... |