கும்பமேளாவின் மூலம் படகு உரிமையாளர் குடும்பம் ரூ.30 கோடி வருமானம் ஈட்டியுள்ளதாக உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் கூறி உள்ளார்.
உ.பி.யில் மஹா கும்பமேளா நிகழ்வு ஜன.13ம் தேதி தொடங்கி பிப்.26ம் தேதி நிறைவு பெற்றது. எதிர்பார்ப்புக்கும் மேலாக 65 கோடிக்கும் அதிகமான பக்தர்கள் மேளாவில் பங்கேற்று புனித நீராடினர். இந்நிலையில், சட்டசபையில் கும்பமேளா விழாவால் படகு ஓட்டுபவர்கள் பாதிக்கப்பட்டதாக சமாஜ்வாதி கடும் குற்றச்சாட்டை முன் வைத்தது. இதற்கு சட்டசபையில் முதல்வர் யோகி ஆதித்யநாத் பதிலளித்து கூறியதாவது;
கும்பமேளாவில் நிகழ்ந்த வெற்றிக்கதை ஒன்றை நான் கூறுகிறேன். பிரயாக்ராஜில் 130 படகுகளை வைத்து ஒரு குடும்பம் தொழில் செய்து வருகிறது. ஒவ்வொரு படகு மூலம் அவர்கள் ரூ.50,000 முதல் ரூ.52,000 வரை வருமானம் ஈட்டினர்.
கும்பமேளா நடந்த 45 நாட்களில் அவர்கள் ரூ.30 கோடி சம்பாதித்துள்ளனர். ஒவ்வொரு படகு மூலம் அவர்களுக்கு ரூ,30 லட்சம் வருமானம் கிடைத்துள்ளது.
மகா கும்பமேளா விழாவுக்காக ரூ.7500 கோடி முதலீடு செய்யப்பட்டு, ரூ,3 லட்ம் கோடி வர்த்தகம் நடைபெற்றுள்ளது. முதலீடு என்பது கும்பமேளாவுக்கு என்று மட்டும் அல்லாமல் அதன் மூலம் பெறும் உபரி வருமானம், வளர்ச்சி ஆகியவற்றுக்காகவும் செலவிடப்பட்டது.
இந்த விழா மூலமாக ஓட்டல் தொழிலில் ரூ.40,000 கோடி, போக்குவரத்துக்கு ரூ.1.5 லட்சம் கோடி, சுங்கச்சாவடிகள் மூலம் ரூ.300 கோடி வர்த்தகம் நடைபெற்று இருக்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
சூரியகாந்திப் பூக்களிலிலுருந்து பெறப்படும் எண்ணெய் ஆரோக்கியத்திற்கும், நரம்புத் தளர்ச்சி நீங்குவதற்கும் மிகச் சிறந்ததாகப் ... |
இது துவர்ப்பாக இருப்பதால் உடலை உரமாக்கிப் பலப்படுத்தும். சிறுநீர் பெருக்கும். முறைவெப்பமகற்றி நன்மை ... |
குடிமயக்கத்தைத் தெளிய வைக்க அவர்கள் வாயில் தாராளமாகத் தேனை ஊற்றலாம். சிறிது சிறிதாக ... |