அபுதாபி, “உலகின் பிற பகுதிகளை சென்றடையக்கூடிய மிக முக்கியமான வழித்தடமாக மத்திய கிழக்கை இந்தியா கருதுகிறது,” என, நம் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்தார்.
மேற்காசிய நாடான, ஐக்கிய அரபு எமிரேட்சின் அபுதாபியில், ரைசினா மாநாட்டு துவக்க விழாவில், நம் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் பேசியதாவது:
நாங்கள் மேற்காசியா என்றழைக்கும் மத்திய கிழக்கு பகுதி இந்தியாவின் நலனில் முக்கிய பங்கு வகிக்கிறது. வளைகுடாவில் இந்தியாவின் வர்த்தக மதிப்பு 13 லட்சம் கோடி ரூபாயிலிருந்து, 15 லட்சம் கோடி ரூபாய் வரை உள்ளது.
வளைகுடாவில், எங்கள் இருப்பு பரவலாகவும், மிக முக்கியமானதாகவும் உள்ளது. இங்கு, 90 லட்சம் இந்தியர்கள் தங்கி வேலை பார்த்து வருகின்றனர்.
மத்திய கிழக்கு மற்றும் வட ஆப்ரிக்கா மட்டுமின்றி, மத்திய தரைக்கடல் பகுதிக்குமான நுழைவாயிலாகவும் வளைகுடா உள்ளது.
மத்திய தரைக்கடல் பகுதியில், 7 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு இந்தியா வர்த்தகம் செய்கிறது. இங்கு, ஐந்து லட்சத்துக்கும் மேற்பட்ட இந்தியர்கள் பணியாற்றுகின்றனர்.
விமான நிலையங்கள், துறைமுகங்கள், ரயில்வே, பசுமை ஹைட்ரஜன் உள்ளிட்ட பணிகளை, இந்தியா இங்கு நிறைவேற்றி வருகிறது.
இந்தியாவின் நீட்டிக்கப்பட்ட அண்டை நாடாக விளக்கும் மத்திய கிழக்குடன் நீண்ட நெடிய உறவு உள்ளது. அதை, மேலும் ஆழப்படுத்த நாங்கள் விரும்புகிறோம்.
உலகின் பிற பகுதிகளை சென்றடையக்கூடிய மிக முக்கியமான வழித்தடமாக மத்திய கிழக்கை நாங்கள் கருதுகிறோம்.
இவ்வாறு அவர் பேசினார்.
உலகம் எங்கும் நீரிழிவு நோய் மக்களை பெரிய அளவில் வாட்டி வதக்கி வருகிறது ... |
1.வாய் , நாக்கு. தொண்டை ரணம் தீர:-பப்பாளிப் பாலைத் தடவி வரத் தீரும். 2.நாக்குப் ... |
வாரம் ஒருமுறை மருதாணி இலையை அரைத்து தலையில்தேய்த்து குளித்து வந்தால், கூந்தல் பளபளப்பாகவும், ... |