சொகுசு மாளிகைகட்ட மக்களின் பணத்தை பயன்படுத்த வில்லை

ஏழைகள் வேதனையை எதிர்க் கட்சிகளால் புரிந்துகொள்ள முடியாது. சொகுசு மாளிகைகளில் வசிக்கும்சிலர் ஏழைகளின் வீடுகளில் புகைபடம் எடுத்துக் கொள்வதை வழக்கமாக வைத்துளளனர்,

பாராட்டுகள், விமர்சனங்கள் முன்வைப்பது நமது ஜனநாயகத்தின் பாரம் பரியமாக திகழ்கிறது.சில எதிர்மறை கருத்துகள் இந்த கூட்டத் தொடரில் முன்வைக்கப் பட்டுள்ளது. 25 கோடி மக்கள் வறுமையில் இருந்து மீட்டெடுக்கப் பட்டு பணக்காரர்களாக மாறி உள்ளனர். வளர்ச்சிஅடைந்த பாரதத்தை உருவாக்க அடுத்த 24 ஆண்டுகள் மிகவும் முக்கியமானது. 21ம் நூற்றாண்டில் நமது சாதனைகளை வரலாறுதீர்மானிக்கும்.

நடுத்தர மக்களின் எதிர்பார்ப் புகளை சரி செய்ய அனுபவம் தேவை. சாமானிய, நடுத்தர மக்களை பா.ஜ., அரசு முன்னேற்றி உள்ளது. ஏழைகளின் நிலையை நாங்கள் புரிந்துகொண்டுள்ளோம். வீடு இல்லாதவர்களுக்கு 4 கோடி வீடுகள் கட்டிக் கொடுத்துள்ளோம். அவர்களுக்காக 12 கோடி கழிப்பறைகள் கட்டி கொடுத்துள்ளோம். மற்றவர்கள் ஏழைகளிடம் பொய்வாக்குறுதிகளை மட்டுமே வழங்கினர். மக்களுக்கு நாங்கள் ஒருபோதும் வெற்று முழக்கங்களை கொடுப்பதில்லை. நல்ல பலதிட்டங்களை பா.ஜ., அரசு கொடுத்துள்ளது.

ஏழைகளுக்கு உண்மையான வளர்ச்சியை வழங்கிஉள்ளோம். ஏழைகளின் நிலைகளை புரிந்துகொள்ள சிலருக்கு கடினமாக உள்ளது. மழைக் காலத்தில் ஏழைகள் வீடில்லாமல் அவதிப்படுவதை உணர்ந்துள்ளோம். இதுபோன்று சிலரால் உணரமுடியாது. சில அரசியல் தலைவர்கள் சொகுசு குளியல் தொட்டி ஷவர்களில் கவனம்செலுத்தி வருகின்றனர். சொகுசு மாளிகைகளில் வசிக்க முக்கியத்துவம் தருகிறார்கள். சொகுசு மாளிகைகளில் வசிப்பவர்களுக்கு ஏழைகளின்வேதனை கேட்க பிடிக்காது. பொழுதுபோக்கிற்காக ஏழைகள் வீட்டில்சென்று புகைப்படம் எடுப்பவர்களுக்கு, ஜனாதிபதி உரையில் ஏழைகள் என குறிப்பிடுவது சுவாரஸ்யமாக இருக்காது.

ஏழைகளுக்காக அரசு தீவிரமாக பணியாற்றிவருகிறது. ஒவ்வொரு ஐந்தாண்டுகளிலும் வறுமை ஒழிந்துள்ளது. வறுமையை ஒழித்துள்ளோம். மக்களுக்கான வளர்ச்சிதிட்டங்களை கொண்டு சேர்ப்பதே அரசியல் கட்சிகளின் வேலை. கடந்த 10 ஆண்டுகளில் பலநல்ல திட்டங்களை பா.ஜ., அரசு மக்களிடம் கொண்டுசேர்த்து உள்ளது.

மக்களுக்கு நலத்திட்டங்கள் சென்றடைய ஏழைகளுக்கு வங்கிக்கணக்கு துவக்கப் பட்டுள்ளது. ரூ.40 லட்சம் கோடி பணம் அவர்களின் வங்கிக்கணக்கில் செலுத்தப்பட்டு உள்ளது. கடந்த 50 ஆண்டுகளில் ஏழ்மையை ஒழிப்போம் என்ற கோஷத்தை மட்டுமே கேட்டோம்.தவறான வர்களின் கைகளுக்கு செல்லாமல் 3 லட்சம் கோடி ரூபாயை தடுத்துள்ளோம். தூய்மை இந்தியாதிட்டத்தை சிலர் கேலிசெய்தார்கள். இத்திட்டத்தில் கிடைத்த பழையபொருட்களை விற்றதில் ரூ.2,300 கோடி கிடைத்தது.

முன்பு பிரதமர் ஆக இருந்த ஒருவர், டில்லியில் இருந்து ஒருரூபாயை அனுப்பினால் அடிமட்டமக்களிடம் 15 பைசா மட்டுமே செல்கிறது என்ற ஒரு பிரச்னையை கண்டுபிடித்தார். அப்போது மத்தியிலும், மாநிலத்திலும், பஞ்சாயத்துகளிலும் ஒருகட்சி மட்டுமே ஆட்சி செய்தது. அந்த பிரச்னைக்கான தீர்வை நாங்கள்தான் கண்டுபிடித்தோம்.

இப்போது வெளிப்படைத்தன்மையை கொண்டுவர டிஜிட்டல் பயன்படுத்தப்படுகிறது. அரசியல் லாபநோக்கங்களை கருத்தில் கொள்ளாமல், அரசு திட்டங்களில் இருந்து 10 கோடி போலி பயனர்கள் நீக்கப்பட்டனர். ஜன்தன், ஆதார், மொபைல் மூலம் நேரடிமானியம் வழங்குவதை துவக்கினோம்.முந்தைய அரசுகள் ஊழலில் திளைத்து போயிருந்தன. முந்தைய காலங்களில் ஊழல் குறித்த விஷயங்கள் தலைப்புச்செய்தியாக வந்தது. ஆனால், இன்று ஊழல் இல்லாத காரணத்தினால் கோடிக் கணக்கான பணம் சேமிக்கப்படுகிறது. நாங்கள் சொகுசு மாளிகைகட்ட மக்களின் பணத்தை பயன்படுத்தவில்லை.

கடந்த 10 ஆண்டுகளில் மத்தியில் எந்தஊழலும் நடக்கவில்லை என்பதை உறுதி செய்துள்ளோம். தே.ஜ., கூட்டணி ஆட்சியில் உள்கட்டமைப்பு திட்டங்களுக்கு அதிக நிதி ஒதுக்கப்படுகிறது. வளர்ச்சிக்கான வலுவான அடித்தளத்தை நாம் அமைத்துள்ளோம். வரியைகுறைத்து நடுத்தர மக்களின் சேமிப்பை அதிகரித்து உள்ளோம். இனிமேல் ரூ.12 லட்சம் வரையிலான வருமானத்திற்கு வரி கிடையாது.

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீது  பிரதமர் மோடி பேசியது

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

இளைஞர்களுக்கான வேலைவாய்ப்புகள ...

இளைஞர்களுக்கான வேலைவாய்ப்புகள் அதிகரிப்பு; பிரதமர் மோடி பெருமிதம் இளைஞர்களுக்கான வேலைவாய்ப்புகள் அதிகரித்து வருவதை அரசு உறுதி செய்கிறது'' ...

பாகிஸ்தான் மக்கள் வெளியேறலாம் & ...

பாகிஸ்தான் மக்கள் வெளியேறலாம் – மத்திய அரசின் முடிவை அமல்படுத்திய டில்லி பாகிஸ்தானியர்கள் இந்தியாவை விட்டு வெளியேற வேண்டும் என்ற மத்திய ...

இந்திய ராணுவம் பதிலடி

இந்திய ராணுவம் பதிலடி காஷ்மீர் எல்லைக்கோட்டுப் பகுதியின் பல்வேறு இடங்களில் நள்ளிரவில் பாகிஸ்தான் ...

பயங்கரவாத தாக்குதலை தாண்டி அமர ...

பயங்கரவாத தாக்குதலை தாண்டி அமர்நாத் யாத்திரை வெற்றிகரமாக நடைபெறும்; மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் பஹல்காம் பயங்கரவாத தாக்குதலை தாண்டி, அமர்நாத் யாத்திரை வெற்றிகரமாக ...

இனி பயங்கரவாதிகள் தான் நடுங்க வ ...

இனி பயங்கரவாதிகள் தான் நடுங்க வேண்டும் ''பஹல்காமில் பயங்கரவாதிகள் எந்த பயமும் இல்லாமல் அப்பாவி மக்களை ...

நக்சல்களை சுற்றி வளைத்த 10,000 வீரர ...

நக்சல்களை சுற்றி வளைத்த 10,000 வீரர்கள் சத்தீஸ்கர் - தெலுங்கானா - மஹாராஷ்டிரா எல்லையில், நக்சல்களுக்கு ...

மருத்துவ செய்திகள்

தொப்புள் கொடி உயிர் அணு (Stem Cord Cells)

Stem Cord Cells (தொப்புள் கொடி உயிர் அணு) சேமிப்பு பற்றி இப்பொழுது ...

தாமரையின் மருத்துவக் குணம்

செந்தாமரை மலரின் இதழ்களை மட்டும் ஆய்ந்து எடுத்து, 5௦ கிராம் இதழ்களை ஒரு ...

அவக்கேடோவின் மருத்துவக் குணம்

ஆங்கிலத்தில் இப்பழம் 'Avocado' என்றும் தமிழில் ஆனைக் கொய்யா என்றும் அறியப்படும். இப்பழம் ...