பிரான்ஸ் அதிபர் அளித்த விருந்தில் பிரதமர் மோடி மகிழ்ச்சி

பிரான்ஸ் சென்றுள்ள பிரதமர் மோடி, அங்கு அந்நாட்டு அதிபர் இமானுவேல் மேக்ரான், அமெரிக்க துணை அதிபர் ஜேடி வேன்ஸ் ஆகியோரை சந்தித்தார்.

3 நாள் அரசு முறை பயணமாக பிரதமர் மோடி பாரிஸ் சென்றார். அங்கு விமான நிலையத்தில் திரண்ட இந்திய வம்சாவளியினர் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். பிரதமரை பார்த்ததும் ‘ மோடி, மோடி’ எனவும், ‘ பாரத மாதாவுக்கு ஜே’ எனவும் கோஷம் எழுப்பினர்.

இது தொடர்பாக அவர் ‘எக்ஸ்’ சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவில் கூறியுள்ளதாவது: என்றும் நினைவில் வைக்கும் வகையில் பாரிஸ் நகரில் வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்தியர்கள் தங்கள் அன்பை வெளிப்படுத்துவதை பனியால் ஒன்றும் செய்ய முடியவில்லை. அவர்களின் அன்பை கண்டு பெருமிதம் கொள்கிறேன் எனக் கூறியுள்ளார்.

இதனைத் தொடர்ந்து பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் அளித்த விருந்தில் பிரதமர் மோடி கலந்து கொண்டார். அப்போது மேக்ரானை சந்தித்து பேசிய அவர், பிறகு அமெரிக்க துணை அதிபர் ஜேடி வேன்சையும் சந்தித்தார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்ட சமூக வலைதளப்பதிவில் கூறியுள்ளதாவது: பாரீசில் எனது நண்பர் இமானுவேல் மேக்ரானை சந்தித்ததில் மகிழ்ச்சி எனக் கூறியுள்ளார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

சாதூரியம், அரவணைப்பு நிதின் நபி ...

சாதூரியம், அரவணைப்பு நிதின் நபின் பா.ஜ.க-விற்கு புதிய தலைவர் நியமிக்கும்திட்டம் நீண்ட நாட்களாக கிடப்பில் ...

கேரளா தேர்தல் களம்: மாறிவரும் ம ...

கேரளா தேர்தல் களம்: மாறிவரும்  முக்கோண அரசியல்! தற்போதைய முக்கோண அரசியல் போட்டி அதிக சுவாரசியத்தை ஏற்படுத்தி ...

மதுரை எய்ம்ஸ் கட்டுமானப் பணிகள் நவ.30 ஆம் தேதிவரை ...

மிரட்டும் எலி காய்ச்சல்

மிரட்டும் எலி காய்ச்சல் கேரளாவில் லெப்டோஸ்பிரோசிஸ் (எலி காய்ச்சல்) தீவிரமாக பரவிவருகிறது. இந்த ...

மார்ச் 31ம் தேதிக்குள் இந்தியா ந ...

மார்ச் 31ம் தேதிக்குள் இந்தியா நக்சலிசத்திலிருந்து விடுபடும் 2026ம் ஆண்டு மார்ச் 31ம் தேதிக்குள் இந்தியா நக்சலிசத்திலிருந்து ...

அன்று அயோத்தி இன்று திருப்பரங் ...

அன்று அயோத்தி இன்று திருப்பரங்குன்றம் திருப்பரங்குன்றம் மலையில் கார்த்திகை அன்று கடந்த பலஆண்டுகளாக ஏற்றப்பட்டு ...

மருத்துவ செய்திகள்

உளுந்தின் மருத்துவக் குணம்

இதை உண்பதால், வயிற்றுவலி, பேதி, சீதபேதி, அஜீரணபேதி, மூத்திரத் தொடர்புடைய நோய்கள், மூலவியாதி, ...

வயிற்றுவலி குணமாக

நற்சீரகம் 100 கிராம், ஓமம் 100 கிராம் இரண்டையும் இளம் வறுப்பாய் வறுத்து ...

மகிழம் பூவின் மருத்துவக் குணம்

மகிழம் பூ குடி தண்ணீர் மகிழம் பூவைச் சுத்தம் பார்த்து எந்தக் கிருமியும் இல்லாமல் ...