”இந்த துயரமான நேரத்தில் பிரான்ஸ், இந்தியாவுடனும் அதன் மக்களுடனும் உறுதியாக நிற்கிறது ” என பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரோன் தெரிவித்துள்ளார்.
பஹல்காம் தாக்குதல் குறித்து, பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரோன் கூறியதாவது: நான் பிரதமர் மோடியிடம் இப்போதுதான் பேசினேன். கடந்த செவ்வாய்க்கிழமை நடந்த பயங்கரவாத தாக்குதலைத் தொடர்ந்து, அப்பாவி மக்கள் பலர் தங்கள் உயிர்களை இழந்தனர்.
இந்த துயரமான நேரத்தில் பிரான்ஸ், இந்தியாவுடனும் அதன் மக்களுடனும் உறுதியாக நிற்கிறது. தேவைப்படும் இடங்களில் பிரான்ஸ், அதன் நட்பு நாடுகளுடன் சேர்ந்து, பயங்கரவாதத்திற்கு எதிரான போராட்டத்தைத் தொடரும். பிரான்சின் ஒற்றுமை மற்றும் நட்பை அவர்கள் நம்பலாம்.
பயங்கரவாதத்தை அதன் அனைத்து வடிவங்களிலும் எதிர்த்துப் போராடுவதில் நாங்கள் எப்போதும் ஒற்றுமையாக இருந்துள்ளோம். எப்போதும் ஒற்றுமையாக இருப்போம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
பல்வேறு வயிற்றுப்போக்கு, பேதி, காலரா, வயிற்றுக்கடுப்பு போன்றவற்றில் பல முறை தொடர்ந்து வயிற்றுப்போக்கு ... |
இதை பல ஊர்களில் பல பெயர்களில் வழங்குகிறார்கள். இது வெதுப்படக்கி, பேய்மருட்டி பேய்வருட்டி ... |
வேப்பமரத்தின் பூக்கள் உடலுக்கு உரமளிக்கும். வயிற்று வலியைக் குணப்படுத்தும். குடற்புழுக்களைக் கொல்லும். இரத்தத்தைச் ... |