வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில், 2023ம் ஆண்டு மே மாதத்தில் கூகி – மெய்டி பழங்குடியின சமூகங்களுக்கு இடையே மோதல் வெடித்தது.
ஆயுதமேந்திய போராட்டக்காரர்களால் ஆங்காங்கே வன்முறை சம்பவங்கள் தெடர்ந்து அரங்கேறி வருகின்றன.
இதற்கிடையே, பா.ஜ.,வைச் சேர்ந்த பைரேன் சிங், முதல்வர் பதவியில் இருந்து விலகினார்.
தற்போது மணிப்பூரில் ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டுள்ளது
இந்த சூழலில், பாதுகாப்புப் படையினரிடம் இருந்து கொள்ளை அடிக்கப்பட்ட ஆயுதங்களை போராளி குழுக்கள், கலவர கும்பல்கள் அரசிடம் ஒப்படைத்து வருகின்றனர்.
ஒரே வாரத்தில் 300க்கும் மேற்பட்ட துப்பாக்கிகள் உள்ளிட்ட ஆயுதங்கள் ஒப்படைக்கப்பட்டன.
இந்நிலையில், அங்குள்ள சட்டம் – ஒழுங்கு நிலவரம் குறித்து, ‘வீடியோ கான்பரன்ஸ்’ வாயிலாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நேற்று ஆய்வு செய்தார். இதில், மணிப்பூரின் தற்போதைய நிலை குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது.
அப்போது, ”மணிப்பூரில் உள்ள அனைத்து சாலைகளிலும் மக்கள் சுதந்திரமாக நடமாடுவதை உறுதி செய்யுங்கள்,” என, பாதுகாப்புப் படையினருக்கு அமித் ஷா உத்தரவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
நோய்களுக்கு பிரதான காரணங்கள் இரண்டு. சரீரத்தில் ஏற்படும் மிதமிஞ்சிய வெப்பம் அல்லது மிதமிஞ்சிய ... |
இதன் சுவை இனிப்பு, புளிப்பு, துவர்ப்பு. இது குளிர்ச்சியை உடலுக்கு உண்டாக்கும். சிறுநீரை ... |