2026-ம் ஆண்டிற்குள் நக்சலிசம் முடிவுக்கு வரும் அமித் ஷா உறுதி

வரும் 2026ம் ஆண்டு மார்ச் மாதத்திற்குள் நக்சலிசம் முடிவுக்கு வரும்’ என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உறுதி அளித்தார்.

சத்தீஸ்கர் மாநிலத்தில் நக்சல் வன்முறையால் பாதிக்கப்பட்ட 55 பேரிடம் அமித்ஷா பேசியதாவது: வன்முறையை கைவிட்டு, மாவோயிஸ்டுகள் சரண் அடைய வேண்டும். நாட்டில் நக்சலைட் தாக்குதல் 2026ம் ஆண்டு மார்ச் மாதம் 31ம் தேதிக்குள் முடிவுக்கு கொண்டு வரப்படும். இல்லையென்றால் அதற்கு முன்னதாகவே, நக்சலைட் தாக்குதலுக்கு முற்றுப்புள்ளி வைப்போம். மாவோயிஸ்டுகளுக்கு எதிரான நடவடிக்கைகளில் பாதுகாப்புப் படையினர் குறிப்பிடத்தக்க வெற்றியைப் பெற்றுள்ளனர்.

ஒரு காலத்தில் சத்தீஸ்கரில் பல்வேறு மாவட்டங்களில் நக்சலைட் தாக்குதல் சம்பவங்கள் நடந்தன. தற்போது, நான்கு மாவட்டங்களில் மட்டுமே சில நேரங்களில் நக்சலைட் தாக்குதல்கள் நடக்கிறது. சத்தீஸ்கரில் நக்சல் வன்முறையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு, மாநில அரசுடன் நெருக்கமான ஒருங்கிணைப்புடன் ஒரு நலத்திட்டத்தை விரைவில் வெளியிடுவோம். வேலைவாய்ப்புகள், சுகாதாரம் உள்ளிட்டவற்றில் நடவடிக்கைகள் எடுப்பதில் கவனம் செலுத்தி மக்களுக்கு நாங்கள் உதவுவோம்.

பாதுகாப்புப் படைகள் நக்சல் எதிர்ப்பு நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தியுள்ளனர், இந்த ஆண்டு பாதுகாப்புப் படையினரின் நக்சல் எதிர்ப்பு நடவடிக்கைகளில் 164 மாவோயிஸ்டுகள் கொல்லப்பட்டனர். எங்களது போராட்டம் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது என்று நான் நம்புகிறேன். ஏற்கனவே ஏற்பட்ட சேதத்தை என்னால் திரும்ப பெற முடியாது. ஆனால் அப்பாவி மக்கள் நக்சலைட் தாக்குதல்களை எதிர்கொள்ள வேண்டியதில்லை என்பதை உறுதிப்படுத்த முயற்சிப்பேன். கடந்த காங்கிஸ் ஆட்சியின் போது 6,617 பாதுகாப்பு படையினர் கொல்லப்பட்டனர். இப்போது 70 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அமித்ஷா பேசினார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

மோடியை சந்தித்து வாழ்த்து பெற் ...

மோடியை சந்தித்து வாழ்த்து பெற்ற இசைஞானி பிரதமர் நரேந்திரமோடியுடன் இசைஞானி இளையராஜா சந்திப்பு மேற்கொண்டார். இளையராஜாவின் ...

நாட்டின் ஆத்மாவை பிரதிபலித்த ம ...

நாட்டின் ஆத்மாவை பிரதிபலித்த மகா கும்பமேளா உத்தர பிரதேச மாநிலம் பிரயாக் ராஜில் நடைபெற்ற நாட்டின் ...

அமெரிக்க அதிபர்கள் யாருமே செய் ...

அமெரிக்க அதிபர்கள் யாருமே செய்யாத செயல் – பிரதமர் மோடி தேர்தல் பிரசாரத்தின் போது துப்பாக்கியால் சுடப்பட்ட டிரம்ப், தற்போது ...

வளர்ச்சியை நோக்கி இந்தியா – ஐ ...

வளர்ச்சியை  நோக்கி இந்தியா – ஐநா அறிக்கை நடப்பு நிதியாண்டின் 4ம் காலாண்டில் இந்தியா, சீனா ...

டாஸ்மாக் ஊழல் முற்றுகை போராட்ட ...

டாஸ்மாக் ஊழல் முற்றுகை போராட்டம் – பாஜக தலைவர் அண்ணாமலை கைது சென்னையில் டஸ்மாக் தலைமை அலுவலகத்தில், ரூ.1000 கோடி ...

பயங்கரவாதம்ம் பிரிவினைவாதம் ச ...

பயங்கரவாதம்ம் பிரிவினைவாதம் செயல்களுக்கு எதிராக போராடுவோம் – பிரதமர் மோடி 'பயங்கரவாதம், பிரிவினைவாதம் மற்றும் தீவிரவாத சக்திகளுக்கு எதிராக போராட ...

மருத்துவ செய்திகள்

பெரும்பாடு குணமாக

நாகப்பட்டை, அத்திப்பட்டை, ஆவாரம்பட்டை மூன்றையும் ஒரு பிடி வீதம் எடுத்து மண் சட்டியிலிட்டு ...

முருங்கைப் பட்டை | முருங்கை பட்டை மருத்துவ குணம்

முருங்கை பட்டையை நன்றாக சிதைத்து அதனுடன் சிறிது உப்பு சேர்த்து வீக்கங்களின் மீது-வைத்து ...

உடல் உறுப்புகளின் சீனக் கடிகாரம்

சீன தேசத்தில் தோன்றிய அக்குபஞ்சர் மருத்துவத்தில் கூறியபடி மனித உடலில் உள்ள முக்கியமான ...