சிலர் எல்லா விஷயங்களையும் அரசியல் ஆக்குகின்றனர்

“மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை குறித்து எதிர்க் கட்சிகள் பிழையான தகவல்களைத் தந்து, அவையை தவறாக வழிநடத்துகின்றன” என்று மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்தார்.

மக்களவையில் கேள்வி நேரத்தின்போது பேசிய திமுக நாடாளுன்ற உறுப்பினர் டி.ஆர்.பாலு, “எத்தனை மருத்துவக்கல்லூரிகள் முறையான உள்கட்டமைப்பு வசதிகள் இல்லாமல் செயல் படுகின்றன? பிரதமர் மோடி அடிக்கல் நாட்டிய எத்தனை மருத்துவ கல்லூரிகள் இன்னும் தொடங்கப் படாமல் உள்ளன?” என்று கேள்விஎழுப்பினார். அப்போது, “மதுரையில் இன்னும் எய்ம்ஸ் மருத்துவமனை தொடங்கப்படவில்லை” என்று திமுக உறுப்பினர்கள் தெரிவித்தனர்.

இந்தக் குற்றச்சாட்டை மறுத்த மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா, “மதுரை எய்ம்ஸில் மருத்துவபடிப்புகள் நடைபெற்று வருகின்றன. அடிப்படை கட்டமைப்பு வசதிகளை உருவாக்க ரூ.1,900 கோடி ஒதுக்கப் பட்டுள்ளது. மதுரை எய்ம்ஸ் மருத்துவனை தொடர்பாக எதிர்க் கட்சிகள் பிழையான தகவல்களைக் கூறி அவையை தவறாக வழிநடத்து கின்றன.

சிலர் எல்லா விஷயங்களையும் அரசியல் ஆக்குகின்றனர். அவர்கள் ஏன்இவ்வாறு செய்கிறார்கள் என்று எனக்கு தெரியும். நான் உள்கட்டமைப்பு, ஆசிரியர்கள், நோயாளிகள் இல்லாத மருத்துவக்கல்லூரிகள் மீது கடும் நடவடிக்கை எடுத்துள்ளேன். அதற்கான எதிர் வினைதான் இது. இது போன்ற சட்ட விரோத நடவடிக்கைகளை மோடி அரசு அனுமதிக்காது. இது போன்ற மருத்துவ கல்லூரிகளுக்கு எதிராக நாங்கள் எங்களது நடவடிக்கைகளை தொடர்வோம்”.

“பிரதமர் மோடி தலைமையிலான அரசு, நாட்டில் மருத்துவ படிப்புகளை விரிவாக்கம்செய்ய நடவடிக்கையை எடுத்துவருகிறது. இதனால், மாணவர்கள் வெளிநாடுசென்று மருத்துவம் படிக்க வேண்டிய தேவை இல்லை. கடந்த 2014-ம் ஆண்டு நாட்டில் மொத்தம் 387 மருத்துவக் கல்லூரிகள் இருந்தன. தற்போது அவை 657 ஆக அதிகரித்துள்ளது.

மாநில அரசு அல்லது தனியார் அமைப்புகள் மருத்துவக்கல்லூரி தொடங்கு வதற்கான விதிகளை மத்திய அரசு தளர்த்தியுள்ளது. கடந்த 2022-ம் ஆண்டில் மட்டும் 37 மருத்துவக் கல்லூரி தொடங்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இன்னும் 89 மனுக்கள் பரிசீலனையில் உள்ளன” என்று மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் தெரிவித்தார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

மாற்றம் வேண்டும் என்பதில் மக்க ...

மாற்றம் வேண்டும் என்பதில் மக்கள் உறுதி தமிழக பாஜக தலைவர் அண்ணா மலை என் மண், ...

ஒட்டுமொத்த உலகமும் இந்தியாவை த ...

ஒட்டுமொத்த உலகமும் இந்தியாவை தனது நண்பன் என கூறுகிறது ஒட்டுமொத்த உலகமும் இந்தியாவை நண்பனாக கருதுகிறது’ என பிரதமா் ...

அயோத்தி என்றால் நினைவுக்கு வரு ...

அயோத்தி என்றால் நினைவுக்கு வருவது அசோக் சிங்ஹல் அயோத்தி என்றால் ஶ்ரீ ராமனுக்கு அடுத்து நினைவுக்குவருவது அசோக் ...

அடுத்த 25 ஆண்டுகளில் இந்தியா வளர ...

அடுத்த 25 ஆண்டுகளில் இந்தியா வளர்ந்த நாடாக மாறும் அடுத்த 25 ஆண்டுகளில் இந்தியா வளர்ந்தநாடாக மாறும் என்று ...

111 பதக்கங்கள் என்பது சிறிய எண்ணி ...

111 பதக்கங்கள் என்பது சிறிய எண்ணிக்கை அல்ல ஆசியபாரா விளையாட்டில் இந்தியாபெற்ற 111 பதக்கங்கள் என்பது சிறிய ...

தேசியக் கொடி அவமதிப்பு திமுக ம ...

தேசியக் கொடி அவமதிப்பு  திமுக மன்னிப்பு கேட்க வேண்டும் சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்திற்கு இந்திய தேசியக் கொடியை கொண்டு ...

மருத்துவ செய்திகள்

நீரிழிவு நோய்

உங்களுக்கு நீரிழிவு என வைத்தியர் கூறியிருக்கிறார். இது உங்கள் மனத்தில் உங்கள் உடல்நிலை ...

அறுசுவை உணவின் பயன்

உணவில் சிறந்தது அறுசுவை உணவாகும். சுவைகள் ஆறு வகைப்படும். கசப்பு, துவர்ப்பு, இனிப்பு, ...

குடல்வால் தேவையா?

மனிதனின் உடலில் சிறுகுடல் மற்றும் பெருங்குடல் இணையும் இடத்தில் குடல்வால் எனும் ஒரு ...