2 நாள் பயணமாக தாய்லாந்து சென்றடைந்த பிரதமர் மோடிக்கு, அந்நாட்டு அதிகாரிகள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
தெற்கு ஆசியா மற்றும் தென்கிழக்கு ஆசியாவில் உள்ள இந்தியா, இலங்கை, வங்கதேசம், நேபாளம், தாய்லாந்து, மியான்மர் மற்றும் பூடான் ஆகிய 7 நாடுகள் சேர்ந்து பல்துறை தொழில்நுட்ப மற்றும் பொருளாதார ஒத்துழைப்புக்கான வங்காள விரிகுடா முன்னெடுப்பு (பிம்ஸ்டெக்) கூட்டமைப்பை உருவாக்கியுள்ளன.
ஆண்டுதோறும் இந்த கூட்டமைப்பில் உள்ள நாடுகள் இணைந்து செயல்படுவது குறித்து மாநாடு நடத்தி, ஆலோசனை நடத்தப்படும். அந்த வகையில், இந்த ஆண்டுக்கான மாநாடு தாய்லாந்தின் பாங்காக்கில் இன்றும், நாளையும் நடக்கிறது. இந்த மாநாட்டில் கடல்சார் பாதுகாப்பு, சுற்றுலா, விண்வெளி ஆய்வு, பயங்கரவாத தடுப்பு உள்ளிட்ட விவகாரங்களில் இணைந்து செயல்படுவது குறித்து ஆலோசனை நடத்தப்படும்.
இந்த நிலையில், பிம்ஸ்டெக் கூட்டமைப்பு மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடி இன்று தாய்லாந்து புறப்பட்டு சென்றார். பாங்காக் விமான நிலையத்திற்கு சென்ற பிரதமரை, அந்நாட்டு அதிகாரிகள் உற்சாகமாக வரவேற்றனர்.
இந்தப் பயணத்தின் போது தாய்லாந்து நாட்டுடன் மட்டுமல்லாது, வங்கதேசம், இலங்கை நாட்டு தலைவர்களுடனும் பிரதமர் மோடி முக்கிய பேச்சுவார்த்தை நடத்த இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், வரும் 4ம் தேதி முதல் 6ம் தேதி வரை பிரதமர் மோடி இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பூக்கும் தாவர இனத்தைச்சேர்ந்த ஓர் பேரினமாகும். தமிழில் இத்தாவரம் கற்றாழை, குமரி, கன்னி. ... |
குப்பைமேனி இலையைக் கசக்கிப்பிழிந்த சாற்றை வயதுக்கு ஏற்றவாறு கொடுக்க வேண்டும். |
பீட்ரூட் சாறு புற்றுநோய்க்கு கொடுத்தால் குணமாகிவிடும். பீட்ரூட்டில் மேலும் பல மருத்துவ பயன்கள் ... |