காங்கிரசை வாக்குவங்கி வைரஸ் தாக்கி உள்ளது – பிரதமர் மோடி

அண்மையில் நிறைவேற்றப்பட்ட வக்பு சட்ட திருத்த மசோதாவை காங்கிரஸ் கட்சி எதிர்க்க காரணம் ‘வாக்கு வங்கி’ அரசியல்தான் என பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார். காங்கிரஸை வாக்கு வங்கி வைரஸ் தாக்கியுள்ளதாக அவர் விமர்சித்துள்ளார். மேலும், அம்பேத்கரின் சமூக நீதியை தங்களது சுய லாபத்துக்காக காங்கிரஸ் கட்சி குலைத்தது என்றும் அவர் கூறியுள்ளார்.

ஹரியானாவில் ஹிசார் விமான நிலைய திறப்பு விழாவில் பங்கேற்று பிரதமர் மோடி பேசுகையில், “ஆட்சி அதிகாரத்தை பெறுவதற்கான அஸ்திரமாக புனிதமான அரசியலமைப்பை பயன்படுத்தியது காங்கிரஸ் கட்சி. ஆட்சி அமைக்க முடியாது என உணர்ந்த போதெல்லாம் அதை காங்கிரஸ் கட்சி செய்துள்ளது.

இந்திய சமூகத்தில் சமத்துவத்தை அம்பேத்கர் எதிர்பார்த்தார். ஏழை எளிய மக்கள், பிற்படுத்தப்பட்ட மக்கள் என அனைவரும் கண்ணியத்துடனும், தலை நிமிர்ந்தும் வாழ வேண்டும் என்ற கனவினை கொண்டிருந்தார் அம்பேத்கர். ஆனால், காங்கிரஸ் கட்சி அதை குலைத்தது.

இஸ்லாமியர்கள், பட்டியலின மக்கள், பட்டியல் பழங்குடியின மக்கள், இதர பிற்படுத்தப்பட்ட மக்களை நாட்டின் 2-ம் தர குடிமக்களாகவே காங்கிரஸ் கட்சி கருதியது. அந்த கட்சியின் தலைவர்கள் நீச்சல் குளத்தில் நீராடி மகிழ்ந்தனர். அதே நேரத்தில் வீடுகளுக்கான குடிநீர் இணைப்பு குறித்து கண்டும் காணாமல் இருந்தனர்.

ஏழைகள் நலன் மற்றும் சமூக நீதியை உறுதி செய்ய மத்திய அரசு செயல்பட்டு வருகிறது. வக்பு வாரியம் வசம் லட்சக்கணக்கான ஹெக்டேர் நிலங்கள் உள்ளன. உண்மையாகவே அந்த சொத்துகளின் சலுகைகள் தேவைப்படுபவர்களுக்கு வழங்கப்பட்டிருந்தால், நிச்சயம் அது அவர்களுக்கு பயன் தந்திருக்கும். ஆனால், நில மாஃபியாக்கள் தான் இந்த சொத்துக்களால் பயனடைந்தனர்” என்றார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

இளைஞர்களுக்கான வேலைவாய்ப்புகள ...

இளைஞர்களுக்கான வேலைவாய்ப்புகள் அதிகரிப்பு; பிரதமர் மோடி பெருமிதம் இளைஞர்களுக்கான வேலைவாய்ப்புகள் அதிகரித்து வருவதை அரசு உறுதி செய்கிறது'' ...

பாகிஸ்தான் மக்கள் வெளியேறலாம் & ...

பாகிஸ்தான் மக்கள் வெளியேறலாம் – மத்திய அரசின் முடிவை அமல்படுத்திய டில்லி பாகிஸ்தானியர்கள் இந்தியாவை விட்டு வெளியேற வேண்டும் என்ற மத்திய ...

இந்திய ராணுவம் பதிலடி

இந்திய ராணுவம் பதிலடி காஷ்மீர் எல்லைக்கோட்டுப் பகுதியின் பல்வேறு இடங்களில் நள்ளிரவில் பாகிஸ்தான் ...

பயங்கரவாத தாக்குதலை தாண்டி அமர� ...

பயங்கரவாத தாக்குதலை தாண்டி அமர்நாத் யாத்திரை வெற்றிகரமாக நடைபெறும்; மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் பஹல்காம் பயங்கரவாத தாக்குதலை தாண்டி, அமர்நாத் யாத்திரை வெற்றிகரமாக ...

இனி பயங்கரவாதிகள் தான் நடுங்க வ ...

இனி பயங்கரவாதிகள் தான் நடுங்க வேண்டும் ''பஹல்காமில் பயங்கரவாதிகள் எந்த பயமும் இல்லாமல் அப்பாவி மக்களை ...

நக்சல்களை சுற்றி வளைத்த 10,000 வீரர ...

நக்சல்களை சுற்றி வளைத்த 10,000 வீரர்கள் சத்தீஸ்கர் - தெலுங்கானா - மஹாராஷ்டிரா எல்லையில், நக்சல்களுக்கு ...

மருத்துவ செய்திகள்

இளநீரின் மருத்துவ குணம்

காலராவின்போது, வாந்திபேதி இருப்பதால் உடலிலுள்ள நீர்ச்சத்து குறையும். கூடவே முக்கியமான தாதுஉப்புகளும் வெளியேறிவிடும். ...

மிளகாயின் மருத்துவக் குணம்

பசி தூண்டியாகவும், குடல் வாயு அகற்றியாகவும் செயல்படுகிறது.

ஊமத்தை இலையின் மருத்துவ குணம்

அகன்ற இலைகளையும், புனல் போன்ற நீண்ட மலர்களையும், முள் நிறைந்த காயையும் உடைய ...