எலான் மஸ்குடன் பிரதமர் மோடி ஆலோசனை

அமெரிக்க தொழிலதிபரும், உலகப் பணக்காரர்களில் ஒருவருமான எலான் மஸ்க் உடன் தொலைபேசியில், பிரதமர் நரேந்திர மோடி நேற்று பேசினார்.

அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல தொழிலதிபரும், உலகப் பணக்காரர்களில் ஒருவருமான எலான் மஸ்க், ‘டெஸ்லா, எக்ஸ், ஸ்பேஸ் எக்ஸ்’ நிறுவனங்களின் தலைமை செயல் அதிகாரியாக உள்ளார்.

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் அரசில், அரசு செலவினங்கள் துறையின் தலைமை பொறுப்பிலும் அவர் உள்ளார்.

இந்நிலையில், எலான் மஸ்க் உடன் தொலைபேசியில் பிரதமர் மோடி நேற்று பேசினார்.

அப்போது, இந்தியா – அமெரிக்கா இடையே தொழில்நுட்பம், புத்தாக்க கண்டுபிடிப்புகளில் ஒத்துழைப்பு உள்ளிட்டவை குறித்து இருவரும் விவாதித்தனர்.

இது குறித்து, சமூக வலைதளத்தில் பிரதமர் மோடி வெளியிட்ட பதிவு:

எலான் மஸ்க் உடன் பேசினேன். இந்தாண்டு துவக்கத்தில், வாஷிங்டனில் சந்தித்த போது பேசிய பல்வேறு விவகாரங்கள் குறித்து அவரிடம் கலந்துரையாடினேன்.

தொழில்நுட்பம், புத்தாக்க கண்டுபிடிப்பு ஆகிய துறைகளில், ஒத்துழைப்புக்கான மகத்தான வாய்ப்புகள் குறித்து விவாதித்தோம்.

இந்த துறைகளில் அமெரிக்காவுடனான ஒத்துழைப்பை மேம்படுத்த இந்தியா உறுதிபூண்டுள்ளது.

இவ்வாறு அவர் குறிப்பிட்டார்.

எலான் மஸ்கின் டெஸ்லா மின்சார கார் நிறுவனம், நம் நாட்டில் கால் பதிக்க உள்ளதாகக் கூறப்படும் நிலையில், இந்த உரையாடல் நடந்துள்ளது.

கடந்த பிப்ரவரியில் அமெரிக்கா சென்ற பிரதமர் மோடி, எலான் மஸ்கை சந்தித்து பேசியது குறிப்பிடத்தக்கது.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

நமது ட்ரோன், ஏவுகணைகளால் தூக்கம ...

நமது ட்ரோன், ஏவுகணைகளால் தூக்கம் தொலைத்த பாக்.,: பிரதமர் மோடி ''நமது ட்ரோன்கள், ஏவுகணைகளை நினைத்து நீண்ட காலத்திற்கு பாகிஸ்தானால் ...

ஆதம்பூர் விமானப்படை தளத்தில் ப� ...

ஆதம்பூர் விமானப்படை தளத்தில் பிரதமர் மோடி; வீரர்களுடன் கலந்துரையாடல் எல்லையோர மாநிலமான பஞ்சாபில் உள்ள ஆதம்பூர் விமானப்படை தளத்தில் ...

ராணுவத் தலைவர்களுடன் ராஜ்நாத் � ...

ராணுவத் தலைவர்களுடன் ராஜ்நாத் சிங் முக்கிய ஆலோசனை டில்லியில் ராணுவத் தலைவர்களுடன், பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் ...

எல்லைப் பகுதிகளில் அமைதியான சூ� ...

எல்லைப் பகுதிகளில் அமைதியான சூழ்நிலை: உறுதி செய்தது இந்திய ராணுவம் ''சர்வதேச எல்லையில் போர்நிறுத்த மீறல்கள் எதுவும் நடக்கவில்லை. எல்லைப் ...

இந்தியா நிகழ்த்திய சாதனை உலகத்� ...

இந்தியா நிகழ்த்திய சாதனை உலகத்துக்கே ஒரு பாடம் பாகிஸ்தானுக்கு எதிரான, 'ஆப்பரேஷன் சிந்துார்' துவங்கிய பின், நாட்டு ...

மீண்டும் சீண்டினால் பாகிஸ்தான� ...

மீண்டும் சீண்டினால் பாகிஸ்தான் இருக்காது ''மீண்டும் ஒரு பயங்கரவாத தாக்குதல் நடந்தால் நாம் யார் ...

மருத்துவ செய்திகள்

நெல்லிக்காயின் மருத்துவக் குணம்

இதன் சுவை இனிப்பு, புளிப்பு, துவர்ப்பு. இது குளிர்ச்சியை உடலுக்கு உண்டாக்கும். சிறுநீரை ...

இயற்கையான வாழ்வு சில நியதிகள்

பசி இல்லையேல் சாப்பிடக்கூடாது. உண்ணப்போகும் முன்பு ஒவ்வொரு வேளையிலும் சிறுநீர் கழிக்க வேண்டும். மதிய உணவுக்கு ...

வயிற்றுவலி குணமாக

நற்சீரகம் 100 கிராம், ஓமம் 100 கிராம் இரண்டையும் இளம் வறுப்பாய் வறுத்து ...