இந்தியாவில் நுழைகிறது டெஸ்லா நிறுவனம்

பிரதமர் மோடி – எலான் மஸ்க் சந்திப்பைத் தொடர்ந்து, டெஸ்லா நிறுவனம் இந்தியாவில் சில பணியிடங்களுக்கு ஆட்களை தேர்வு செய்வதற்கான அறிவிப்பை வெளியிட்டு உள்ளது.

இந்தியாவில் மின்னணு வாகனங்கள் மீதான ஆர்வம் அதிகரித்து உள்ளது. இதனையடுத்து, இந்தியாவில் நுழைய டெஸ்லா நிறுவனம் ஆர்வம் காட்டி பேச்சுவார்த்தை நடந்தது. ஆனால், விரி விகிதம் காரணமாக பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்படவில்லை. சமீபத்தில் கார்கள் மீதான சுங்கவரியை 110 சதவீதத்தில் இருந்து 70 சதவீதமாக மத்திய அரசு குறைத்தது.

மேலும், கடந்த வாரம் அமெரிக்கா சென்றிருந்த பிரதமர் மோடி, டெஸ்லா நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி எலான் மஸ்க்கை சந்தித்து பேசியிருந்தார். இதனைத் தொடர்ந்து, இந்தியாவில் நுழைவதற்கான ஆரம்பக் கட்ட பணிகளை டெஸ்லா நிறுவனம் துவக்கி உள்ளது.

இதன்படி 13 வகையான பணிகளுக்கு ஆட்களை தேர்வு செய்வதற்கான அறிவிப்பை ‘லிங்க்ட் இன்’ சமூக வலைதளத்தில் அந்த நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதில் ஐந்து வகையான பணிகளுக்கு தேர்வு செய்யப்படுபவர்கள் டில்லி மற்றும் மும்பையிலும், எஞ்சிய பணிகளுக்கு மும்பையில் பணியாற்ற வேண்டும் என அந்த விளம்பரத்தில் கூறப்பட்டு உள்ளது.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பாஜக கூட்டணி வெற்றிக்கான காரணம ...

பாஜக கூட்டணி வெற்றிக்கான  காரணம் பீகார் சட்டமன்ற தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் ...

பீகார் ஆட்சியைத் தக்கவைத்த தேச ...

பீகார் ஆட்சியைத் தக்கவைத்த தேசிய ஜனநாயகக் கூட்டணி பீகார் சட்டமன்ற தேர்தலில் பாஜக தலைமை யிலான தேசிய ...

நான் தொழில் செய்வதில் என்ன தவறு

நான் தொழில் செய்வதில் என்ன தவறு "நான் தொழில் செய்வதில் என்ன தவறு இருக்கிறது? எனக்கு ...

பழைய சாமான்களை விற்று Rs.4,100 கோடி ச ...

பழைய சாமான்களை விற்று Rs.4,100 கோடி சம்பாதித்தது மத்திய அரசு மத்திய அரசு கடந்த ஐந்துஆண்டுகளில் தனது அலுவலகங்களில் இருந்து ...

வீடுதோறும் இ-ஸ்கூட்டர் புதிய வே ...

வீடுதோறும் இ-ஸ்கூட்டர் புதிய வேரியண்ட்டை அறிமுகப்படுத்திய நிதின் கட்கரி ஹீரோ மோட்டோகார்ப் (Hero Motocorp) நிறுவனத்தின் துணைநிறுவனமான விடா ...

பொருத்தமற்ற விஷயங்களில் நேரத் ...

பொருத்தமற்ற விஷயங்களில் நேரத்தை வீணடிக்க வேண்டாம் வாக்குதிருட்டு தொடர்பாக ராகுல் காந்தி முன்வைத்த குற்றச் சாட்டுக்கு ...

மருத்துவ செய்திகள்

தரைப்பசலையின் மருத்துவக் குணம்

தரைப்பசலைக் கீரையை அரைத்து, கொட்டைப் பாக்களவு எடுத்து, மறுபடி அதே அளவு சீரகத்தையும் ...

தொடர்ந்து ஓரிரு முறை கருச் சிதைவு ஏற்பட்டிருந்தால் என்ன செய்ய வேண்டும்?

இயற்கையில் 30% - 40% கருச்சிதைவு முதல் 3 மாதத்திற்குள் ஆகிவிடும். ஒருவருக்கு ...

உணவை எளிதில் ஜீரணமாக்கும் பெருங்காயம்

நம்ம தமிழ் நாட்டுல ரசத்தையும், சாம்பாரையும் 'கமகமக்க' வைப்பதில் பெருங்காயத்தின் பங்கு அதிகம் ...