தொழில்நுட்பத்துறையில் இணைந்து செயலாற்ற எலான் மஸ்குடன் பிரதமர் மோடி பேச்சு

மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்பத்தில் அமெரிக்காவுடன் இணைந்து செயல்படுவதில் இந்தியா உறுதியாக உள்ளதாக எலான் மஸ்க்குடன் ஆலோசனை நடத்திய பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

அமெரிக்கா – இந்தியா இடையிலான உறவை பலப்படுத்தும் விதமாக இருநாட்டு தலைவர்களும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில் அதிபர் டிரம்ப் பதவியேற்ற பிறகு, அமெரிக்கா சுற்றுப்பயணம் மேற்கொண்ட பிரதமர் மோடி, இருதரப்பு உறவுகள் குறித்து பேசினார்.

இந்தப் பயணத்தின் போது, அமெரிக்க அரசின் திறனாய்வுத் துறையை (DOGE) நிர்வகித்து வருபவரும், தொழிலதிபருமான எலான் மஸ்க்கை சந்தித்து பேசினார். இந்த நிலையில், எலான் மஸ்க்கிடம் பிரதமர் மோடி இன்று தொலைபேசியில் பேசினார்.

அப்போது, இந்தியாவில் வேகமாக வளர்ந்து வரும் தொழில்நுட்பத்தில், எலான் மஸ்க்கின் அதிநவீன கண்டுபிடிப்புகளுக்கான முயற்சியை ஈடுபடுத்துவது குறித்து இருவரும் ஆலோசனை நடத்தினர்.

இது குறித்து பிரதமர் மோடி எக்ஸ் தளத்தில் விடுத்துள்ள பதிவில், ‘வாஷிங்டனில் நடந்த சந்திப்பின் போது பேசியது உள்பட பல விவகாரங்கள் பற்றி எலான் மஸ்க்குடன் பேசினேன். தொழில்நுட்பம் மற்றும் புதுமை உருவாக்குதலில் இணைந்து செயல்படுவது குறித்து ஆலோசனை நடத்தினோம். இந்தத் துறையில் அமெரிக்காவுடன் இணைந்து செயல்படுவதில் இந்தியா உறுதியாக உள்ளது,’ எனக் குறிப்பிட்டுள்ளார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

குங்குமப்பூ விவசாயம் செய்யும் � ...

குங்குமப்பூ விவசாயம் செய்யும் இளைஞரை பாராட்டிய பிரதமர் மோடி கேரள மாநிலம் வயநாடு மாவட்டம் சுல்தான்பத்தேரி-யை அடுத்த மலவயல் ...

பாகிஸ்தான் மீது தாக்குதல் நடத்� ...

பாகிஸ்தான் மீது தாக்குதல் நடத்த பச்சைக்கொடி பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் தொடர்பான அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து ...

பிரதமர் மோடியுடன் ஆர் எஸ் எஸ் த� ...

பிரதமர் மோடியுடன் ஆர் எஸ் எஸ் தலைவர் மோகன் பகவத் சந்திப்பு மிகவும் பரபரப்பான சூழ்நிலையில், பிரதமர் மோடியை, டில்லியில் உள்ள ...

பாகிஸ்தானுக்கு பதிலடி ; முப்படை ...

பாகிஸ்தானுக்கு பதிலடி ; முப்படைகளுக்கு முழு சுதந்திரம் – பிரதமர் மோடி உறுதி ல்லி: பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி தருவதற்கான உயர்மட்ட ...

கல்வியை நவீனபடுத்தும் மத்திய அ� ...

கல்வியை நவீனபடுத்தும் மத்திய அரசு – பிரதமர் மோடி பெருமிதம் நாட்டின் எதிர்காலத்திற்கு இளைஞர்களை தயார்படுத்த கல்வி முக்கிய பங்காற்றுகிறது. ...

கனடா தேர்தலில் வெற்றி பெற்ற மார ...

கனடா தேர்தலில் வெற்றி பெற்ற மார்க் கார்னிக்கு பிரதமர் மோடி வாழ்த்து கனடா பார்லிமென்ட்டிற்கு நடந்த தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் ...

மருத்துவ செய்திகள்

நீரிழிவுநோய் உள்ளவர்களுக்கான உணவுமுறை

நீரிழிவுநோய்க் கட்டுப்பாட்டில் உணவுமுறை ஒரு முக்கியப்பங்கு வகிக்கிறது. அதனால் நீரிழிவுநோய் உள்ளவர்கள் சரியான, ...

நீரிழிவு விழித்திரை நோய்

கடந்த 1922-ஆண்டில் ஃப்ரெடெரிக் பாண்ட்டிங்க் என்ற விஞ்ஞானி, சார்லஸ்பெஸ்ட் என்பவருடன் இணைந்து ...

வேப்பம் பூவின் மருத்துவக் குணம்

வேப்பமரத்தின் பூக்கள் உடலுக்கு உரமளிக்கும். வயிற்று வலியைக் குணப்படுத்தும். குடற்புழுக்களைக் கொல்லும். இரத்தத்தைச் ...