இயற்கையான வாழ்வு சில நியதிகள்

 பசி இல்லையேல் சாப்பிடக்கூடாது.

உண்ணப்போகும் முன்பு ஒவ்வொரு வேளையிலும் சிறுநீர் கழிக்க வேண்டும்.

மதிய உணவுக்கு முன்போ, பின்போ அரைமணி நேரம் நடக்க வேண்டும்.

உண்பதற்கு அரைமணிக்கு முன்பும், உண்டபின் ஒரு மணி நேரம் கழித்தும் தண்ணீர் குடிக்க வேண்டும். உணவின் இடையிடையே தண்ணீர் குடிக்கவே கூடாது.

இயற்கையின் சூரியஒளி தரும் வைட்டமின் 'டி' யைப் பெற தினமும் காலையில் சூரியஒளி முன்பு நில்லுங்கள்.

படுக்கையிலிருந்து எழுந்து உட்கார்ந்ததும் இரண்டு அல்லது மூன்று டம்ளர்கள் தண்ணீர் பருகவும். பின்பு நாள் முழுக்க இரண்டு மணி நேரத்திற்கு ஒருமுறை தண்ணீர் குடிக்கவும்.

தினமும் குளிர்ந்த நீரில் குளிக்க வேண்டும்.

தினமும் காலையில் குறைந்தது முக்கால் மணி நேரமாவது சுறுசுறுப்பாக நடக்க வேண்டும்.

ஆறுமணி நேர இடைவெளி விட்டே சாப்பிட வேண்டும்.

உணவை அவசர அவசரமாகச் சாப்பிடக் கூடாது. மென்று சுவைத்துச் சாப்பிட வேண்டும்.

உண்ணும் முன்பு கைகளைக் கழுவ வேண்டும். கழிவறை சென்று வந்தபின் சோப்பு நீரில் கைகளைக் கழுவுவது நல்லது.

நிமிர்ந்து உட்கார்ந்து பணி செய்ய வேண்டும்.

கொழுப்பு எண்ணையைத் தவிர்க்கவும்.

நீராவியில் வேகவைக்க வேண்டும். அரைவேக்காடாக வெந்த காய்கறிகளை உண்ண வேண்டும்.

தினமும் ஒன்றிரண்டு பழங்களைச் சாப்பிட வேண்டும்.

வாரம் ஒருமுறை பட்டினி.

காலந் தாழ்த்திய உணவையும், தூக்கத்தையும் தவிர்க்க.

வெந்த உணவோடு, வேகாத உணவையும் சேர்த்து உண்ணலாகாது.
பதினைந்து நாட்களுக்கு ஒரு தடவையாவது ஒரு நாள் முழுக்க சமைக்காத உணவை – பழங்கள், காய்கறிகளை உண்க.

மலச்சிக்கலுக்கு எனிமா எடுத்துக் கொள்க.

சூரிய ஒளி, வெளிச்சமுள்ள வசிப்பிடம் வேண்டும்.
உடற்பயிற்சி, யோகா செய்க. கூடவே போதிய ஓய்வும் தேவை.
உங்கள் உடலின் குணமாக்கும் சக்தியை நம்புங்கள்.
போதைப் பொருட்களைத் தவிர்த்து மனதில் உறுதியாக இருங்கள்.

நன்றி : நோய்களும் இயற்கை மருத்துவமும்
டாக்டர் க. திருத்தணிகாசலம்

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

கோவில்கள் மீதான தாக்குதல் ஆஸி., ...

கோவில்கள் மீதான தாக்குதல் ஆஸி., பிரதமரிடம் நரேந்திர மோடி வருத்தம். ஆஸ்திரேலியாவில் இந்து கோயில்கள்மீது அடுத்தடுத்து தாக்குதல் நடத்தப்படுவது தொடர்பாக ...

தி.மு.க. என்றால் குடும்ப அரசியல், ...

தி.மு.க. என்றால் குடும்ப அரசியல், பணம், கட்டப்பஞ்சாயத்து கிருஷ்ணகிரி மாவட்டம் குந்தாரப் பள்ளியில் பா.ஜனதா கட்சியின் மாவட்ட ...

அவசரக்குடுக்கை ஆர் எஸ் பாரதி

அவசரக்குடுக்கை ஆர் எஸ் பாரதி நான் இரட்டை வேடம் போடுவதாக, அவசரக்குடுக்கை ஆர் எஸ் ...

திறனற்ற திமுகவுக்கு திராணி இரு ...

திறனற்ற திமுகவுக்கு திராணி இருந்தால் என்னை கைதுசெய்யுங்கள் வடமாநில தொழிலாளர் குறித்து முதல்வர் ஸ்டாலின் பேசிய வீடியோவை ...

திரிபுரா, நாகலாந்து , மேகாலயா மா ...

திரிபுரா, நாகலாந்து , மேகாலயா மாநில முதல்வர்கள் பதவியேற்பு விழாவில் பிரதமர் மோடி பங்கேற்பு திரிபுரா, நாகலாந்து மற்றும் மேகாலயா மாநில முதல்வர்கள் பதவியேற்பு ...

வடமாநிலதவர்கள் மீதான வெறுப்பு ...

வடமாநிலதவர்கள் மீதான  வெறுப்புப் பிரச்சாரத்தை அனுமதிக்கமாட்டோம் தமிழகத்தில் வட இந்தியத் தொழிலாளர்கள் மீது தாக்குதல்கள் நடப்பதாக, ...

மருத்துவ செய்திகள்

அருகன்புல்லின் மருத்துவ குணம்

அருகன்புல்லின் வேர் ஒரு கைபிடியளவும், கானாம் வாழையிலை கைப்பிடியளவு, இதே அளவு அசோக ...

சிறுநீரகக் கோளாறுகள்

உடலின் நலத்தைக் காப்பதில் சிறுநீரகங்கள் மிகவும் சிறப்பு வாய்ந்தவை. சிறுநீரகம் சரியாக செயல்படவில்லை ...

முருங்கைக் காயின் மருத்துவ குணம்

முருங்கைக் காய் மலச்சிக்கலை சரி செய்யும் . வயிற்றுப் புண்ணை போக்கும் மேலும் ...