துவங்கியது பயங்கரவாதிகளுக்கு எதிரான வேட்டை; பிரதமர் மோடி தலைமையில் ஆலோசனை

சவுதி அரேபியாவில் இருந்து நேற்று டில்லி திரும்பிய பிரதமர் மோடி, விமான நிலையத்திலேயே, காஷ்மீர் பயங்கரவாத தாக்குதல் தொடர்பாக அவசர ஆலோசனை நடத்தினார்.

இதைத் தொடர்ந்து நேற்று மாலை பிரதமர் இல்லத்தில் நடந்த அமைச்சரவை கூட்டத்தில், பயங்கரவாதிகளை வேட்டையாடுவது குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது.

காஷ்மீரின் தெற்கு பகுதியில் உள்ள சுற்றுலா தலமான ‘மினி சுவிட்சர்லாந்து’ எனப்படும் பசுமை பள்ளத்தாக்குகள் நிறைந்த பஹல்காமில், பாகிஸ்தான் பயங்கரவாதிகள் நேற்று முன்தினம் நடத்திய தாக்குதலில், சுற்றுலா பயணியர், 26 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

இதையடுத்து, மேற்கு ஆசிய நாடான சவுதி அரேபியா சென்றிருந்த நம் பிரதமர் மோடி, தன் பயணத்தை ரத்து செய்து விட்டு, நாடு திரும்பினார். சவுதி அரேபியாவின் ஜெட்டாவில் இருந்து நேற்று காலை அவர், டில்லி விமான நிலையம் வந்தார்.

உடனடியாக, விமான நிலையத்திலேயே, காஷ்மீர் நிலைமை குறித்து பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார்.

அதில், வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் ஆகியோர் பங்கேற்றனர்.

காஷ்மீர் பயங்கரவாத தாக்குதல் தொடர்பாக முக்கிய விஷயங்கள் பேசப்பட்டன. அடுத்து எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் அவர்கள் ஆலோசித்தனர்.

இதற்கிடையே, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, நேற்று முன்தினம் இரவு ஸ்ரீநகர் சென்றார்.

உடனடியாக, ராணுவம், துணை ராணுவம், உளவுத்துறை, காஷ்மீர் போலீஸ் உள்ளிட்ட அனைத்து துறைகளின் உயர் அதிகாரிகளுடன் உயர்மட்ட ஆலோசனை நடத்தினார். அப்போது, பயங்கரவாதிகளின் தாக்குதல் குறித்து ஜம்மு — காஷ்மீர் டி.ஜி.பி., நளின் பிரபாத், விளக்கினார்.

இந்நிலையில், தாக்குதல் குறித்து விசாரணை நடத்துவதற்காக, என்.ஐ.ஏ., எனப்படும் தேசிய புலனாய்வு அமைப்பின் அதிகாரிகளும் காஷ்மீர் சென்றனர்.

என்.ஐ.ஏ., அமைப்பின் ஐ.ஜி., தலைமையிலான குழு ஒன்று ஸ்ரீநகரில் இருந்து நேற்று பஹல்காம் சென்றது. பஹல்காமில், பயங்கரவாதிகளால் கொல்லப்பட்டவர்களின் உடல்கள், ஸ்ரீநகர் அரசு மருத்துவமனையில் இருந்து நேற்று மாநில போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு கொண்டு செல்லப்பட்டது.

அங்கு, அவர்களுக்கு அமித் ஷா இறுதி அஞ்சலி செலுத்தினார்.

பயங்கரவாதத்திற்கு பாரதம் அடிபணியாது; உயிரிழந்தவரின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய அமித்ஷா உறுதி
உயிரிழந்தவர்களின் உறவினர்களுக்கு ஆறுதல் கூறினார். மேலும், தாக்குதலில் காயமடைந்து சிகிச்சை பெறுபவர்களையும் மருத்துவமனையில் நேரில் சென்று பார்த்தார். அப்போது, ‘குற்றவாளிகள் ஒருவரைக் கூட தப்பிக்க விட மாட்டோம்,’ என அவர்களிடம் அமித் ஷா உறுதி அளித்தார்.

பின்னர், சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்ட அவர், ‘பயங்கரவாதத்துக்கு பாரதம் ஒருபோதும் அடிபணியாது. இந்த கொடூர பயங்கரவாத தாக்குதலில் ஈடுபட்ட குற்றவாளிகள் ஒருவர்கூட, தப்பிக்க முடியாது என உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கும் இந்த நாட்டுக்கும் நான் உறுதியளிக்கிறேன்.

‘பஹல்காமில், தங்கள் அன்பிற்குரியவர்களை பறிகொடுத்தவர்களின் வேதனையை ஒவ்வொரு இந்தியர்களும் உணர்கின்றனர்; அதை வார்த்தைகளால் கூற முடியாது’ என குறிப்பிட்டுள்ளார்.

பஹல்காமில் பயங்கரவாதிகளால் கொல்லப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு தலா 10 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்குவதாக ஜம்மு — காஷ்மீர் முதல்வர் ஒமர் அப்துல்லா நேற்று அறிவித்தார்.

படுகாயமடைந்தவர்களுக்கு தலா 2 லட்சம் ரூபாயும், லேசான காயமடைந்தவர்களுக்கு தலா ஒரு லட்சம் ரூபாயும் வழங்குவதாக அறிவிக்கப்பட்டது.

இதற்கிடையே, ராணுவ விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவை கூட்டம் பிரதமர் மோடி இல்லத்தில் நேற்று மாலை நடந்தது.

அதில், அமைச்சர்கள் அமித் ஷா, ராஜ்நாத் சிங், ஜெய்சங்கர், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இந்த கூட்டத்தில், தாக்குதலுக்கு காரணமான பயங்கரவாத அமைப்புக்கும், அவர்களை பின்னால் இருந்து இயக்கியவர்களுக்கும் விரைவில் தக்க பதிலடி தருவது குறித்து ஆலோசிக்கப்பட்டது.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

நமது ட்ரோன், ஏவுகணைகளால் தூக்கம ...

நமது ட்ரோன், ஏவுகணைகளால் தூக்கம் தொலைத்த பாக்.,: பிரதமர் மோடி ''நமது ட்ரோன்கள், ஏவுகணைகளை நினைத்து நீண்ட காலத்திற்கு பாகிஸ்தானால் ...

ஆதம்பூர் விமானப்படை தளத்தில் ப� ...

ஆதம்பூர் விமானப்படை தளத்தில் பிரதமர் மோடி; வீரர்களுடன் கலந்துரையாடல் எல்லையோர மாநிலமான பஞ்சாபில் உள்ள ஆதம்பூர் விமானப்படை தளத்தில் ...

ராணுவத் தலைவர்களுடன் ராஜ்நாத் � ...

ராணுவத் தலைவர்களுடன் ராஜ்நாத் சிங் முக்கிய ஆலோசனை டில்லியில் ராணுவத் தலைவர்களுடன், பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் ...

எல்லைப் பகுதிகளில் அமைதியான சூ� ...

எல்லைப் பகுதிகளில் அமைதியான சூழ்நிலை: உறுதி செய்தது இந்திய ராணுவம் ''சர்வதேச எல்லையில் போர்நிறுத்த மீறல்கள் எதுவும் நடக்கவில்லை. எல்லைப் ...

இந்தியா நிகழ்த்திய சாதனை உலகத்� ...

இந்தியா நிகழ்த்திய சாதனை உலகத்துக்கே ஒரு பாடம் பாகிஸ்தானுக்கு எதிரான, 'ஆப்பரேஷன் சிந்துார்' துவங்கிய பின், நாட்டு ...

மீண்டும் சீண்டினால் பாகிஸ்தான� ...

மீண்டும் சீண்டினால் பாகிஸ்தான் இருக்காது ''மீண்டும் ஒரு பயங்கரவாத தாக்குதல் நடந்தால் நாம் யார் ...

மருத்துவ செய்திகள்

அலரியின் மருத்துவக் குணம்

இதில் வெண்மை, செம்மை, அரக்கு மஞ்சள், மஞ்சள் நிறமாகவும் பூக்கும் தன்மையுடையது. வெண்மையாகப் ...

கரு கூடாதவர்களுக்கு எதேனும் சிகிச்சை உண்டா?

பெண்ணிடம் பிரச்சனை என்றால் சிகிச்சை அளித்துச் சரி செய்யலாம், ஆணிடம் பிர்ச்சனை என்றால் ...

தலைக்கு ஷாம்பு அவசியம் தானா?

இயற்கையே நம் தலையில் ஆயிலை சுரக்க வைக்கிறது. அந்த ஆயில் நம் ...