பயங்கரவாதத்திற்கு பாரதம் அடிபணியாது ; உயிரிழந்தவர்களின் உடல்களுக்கு அஞ்சலி செலுத்திய அமித்ஷா உறுதி

காஷ்மீரில் பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்தவர்களின் உடலுக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மரியாதை செலுத்தினார். தொடர்ந்து, அவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார். தொடர்ந்து தாக்குதல் நடந்த பஹல்காம் பகுதியை நேரில் அவர் ஆய்வு செய்தார். பயங்கரவாதத்திற்கு பாரதம் அடிபணியாது என அமித்ஷா திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

ஜம்மு – காஷ்மீரின் பஹல்காம் மாவட்டத்தில் சுற்றுலா தலத்தில், ராணுவ சீருடையில் வந்த பயங்கரவாதிகள், நேற்று நடத்திய தாக்குதலில், வெளிநாட்டவர் இருவர் உட்பட, 26 சுற்றுலா பயணியர் உயிரிழந்தனர். சவுதி அரேபியா சென்ற பிரதமர் மோடி அவசரமாக நாடு திரும்பினார்.

பயங்கரவாதிகளுக்கு தக்க பதலடி கொடுக்க முக்கிய ஆலோசனை நடந்து வருகிறது. ஜம்மு காஷ்மீர் சென்றுள்ள, அமித்ஷா பாதுகாப்பு படை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். தற்போது பாரமுல்லா மாவட்டத்தில் உள்ள சின்னாறு எல்லை பகுதியில் பாதுகாப்பு படையினர் நடத்திய என்கவுன்டரில், பயங்கரவாதிகள் இரண்டு பேர் கொல்லப்பட்டனர்.

இந்நிலையில், காஷ்மீரில் பயங்கரவாதிகளால் படுகொலை செய்யப்பட்டவர்களின் உடல்களுக்கு மத்திய அமைச்சர் அமித்ஷா மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். பிறகு குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார். பின்னர் அமித்ஷா கூறியதாவது: பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு கனத்த இதயத்துடன் இறுதி மரியாதை செலுத்தினேன்.

பயங்கரவாதத்திற்கு பாரதம் அடிபணியாது. இந்த கொடூரமான தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகளை தப்பிக்க விடமாட்டோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

வலிமையான கட்டமைப்பை கொண்டுள்ள � ...

வலிமையான கட்டமைப்பை கொண்டுள்ள பாஜக சொல்கிறார் ப . சிதம்பரம் இண்டி கூட்டணி பலவீனமாக இருப்பதாகக் கூறிய முன்னாள் மத்திய ...

பாகிஸ்தானின் அணு ஆயுதங்களை சர்� ...

பாகிஸ்தானின் அணு ஆயுதங்களை சர்வதேச பாதுகாப்பில் விடவேண்டும்’ அமைச்சர் ராஜ்நாத் சிங் வலியுறுத்தல் ஜம்மு - காஷ்மீரில் உள்ள பாதுகாப்பு நிலவரம் தொடர்பாக, ...

பாகிஸ்தான் முயற்சியை முறியடித� ...

பாகிஸ்தான் முயற்சியை முறியடித்த இந்திய வீரர்கள் பாகிஸ்தானின் முயற்சிகளை முறியடித்து இந்திய விமானப்படை மற்றும் ராணுவ ...

சந்திரயான்-5 திட்டம்: ஜப்பான் வி� ...

சந்திரயான்-5 திட்டம்: ஜப்பான் விஞ்ஞானிகளுடன் இஸ்ரோ தொழில்நுட்ப ஆலோசனை சந்தரயான் -5 திட்டத்தின் கூட்டு முயற்சிகள் குறித்து, இஸ்ரோ ...

பதற்றத்தை தணிக்க இந்தியா பாகிஸ� ...

பதற்றத்தை தணிக்க இந்தியா பாகிஸ்தான் முடிவு இந்தியா பாகிஸ்தான் எல்லையில் நிலவும் பதற்றத்தை குறைக்கும் வகையில், ...

இந்தியாவிடம் பயங்கரவாதிகளை பா� ...

இந்தியாவிடம் பயங்கரவாதிகளை பாகிஸ்தான் ஒப்படைக்க வேண்டும்: ஜெய்சங்கர் இந்தியாவிடம் ஒப்படைக்க வேண்டிய பயங்கரவாதிகள் பட்டியல் பாகிஸ்தானிடம் உள்ளது, ...

மருத்துவ செய்திகள்

புளிப்பு

உணவைச் சீரணிக்க புளிப்புச்சுவை உதவுகிறது. புளிப்புச் சுவை அரிக்கும் தன்மையுள்ளது. இரத்தத்தில் உள்ள ...

தலைக்கு ஷாம்பு அவசியம் தானா?

இயற்கையே நம் தலையில் ஆயிலை சுரக்க வைக்கிறது. அந்த ஆயில் நம் ...

முருங்கை இலைக் காம்பு | முருங்கை இலை காம்பின் மருத்துவ குணம்

முருங்கை இலை காம்புகளை சிறிது சிறிதாக நறுக்கி அதனுடன் சீரகம்,கறிவேப்பிலை,பூண்டு, சோம்பு, சின்ன ...