காஷ்மீர் தாக்குதல் எதிரொலியாக பாகிஸ்தானியர்களுக்கான விசா சேவையை நிறுத்தி வைத்துள்ள மத்திய வெளியுறவு அமைச்சகம், ஏற்கனவே வழங்கப்பட்ட அனைத்து விசாக்களும் வரும் 27 ம் தேதி முதல் ரத்து செய்யவதாகவும் அறிவித்து உள்ளது. அதேபோல், பாகிஸ்தான் சென்றுள்ள இந்தியர்கள் அனைவரும் உடனடியாக தாயகம் திரும்ப உத்தரவிட்டு உள்ளது.
பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலைத் தொடர்ந்து பாகிஸ்தான் உடனான உறவுகளை துண்டித்துக் கொள்வதாக இந்தியா அறிவித்து உள்ளது. ‘ சார்க் ‘கூட்டமைப்பு நாடுகளுக்கான ‘விசா விதி விலக்கு’ பாகிஸ்தானுக்கு ரத்து செய்யப்படுகிறது. அந்த விசாவில் வந்து இந்தியாவில் இருக்கும் பாகிஸ்தானியர்கள் 48 மணி நேரத்தில் வெளியே வேண்டும் என அதிரடி உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. வாகா – அட்டாரி எல்லை உடனடியாக மூடவும், பாகிஸ்தானை சேர்ந்த யாருக்கும் இந்தியாவிற்குள் பயணம் செய்ய அனுமதி கிடையாது. வாகா – அட்டாரி எல்லை வழியாக பாகிஸ்தானியர்கள் யாராவது வந்து இருந்தால், தகுந்த ஆவணங்களை காட்டி மே 1ம் தேதிக்குள் திரும்பவும் மத்திய அரசு உத்தரவிட்டு உள்ளது.
இந்நிலையில், இந்த உத்தரவை பின்பற்றி மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் பல அதிரடி உத்தரவுகளை பிறப்பித்து உள்ளது
*பாகிஸ்தானியர்களுக்காக வழங்கப்பட்டு வந்த விசா சேவை உடனடியாக நிறுத்தி வைக்கப்படுகிறது.
*ஏற்கனவே வழங்கப்பட்டு பாகிஸ்தானியர்களுக்கு இந்தியா வழங்கிய விசா அனைத்தும் வரும் 27 ம் தேதி முதல் ரத்து செய்யப்படும்.
*மருத்துவ காரணங்களுக்காக வழங்கப்பட்ட விசா அனைத்தும் ஏப்., 29 வரை மட்டுமே செல்லுபடியாகும்
*இந்தியாவில் உள்ள பாகிஸ்தானியர்கள் அனைவரும், விசா காலாவதியாகும் முன்னர் நாட்டை விட்டு வெளியேற வேண்டும்.
*பாகிஸ்தான் செல்வதை இந்தியர்கள் தவிர்க்க வேண்டும்.
*பாகிஸ்தானில் வசிக்கும் இந்தியர்கள் உடனடியாக தாயகம் திரும்ப வேண்டும். இவ்வாறு அந்த உத்தரவில் கூறப்பட்டு உள்ளது.
இந்தியாவில் தங்கி உள்ள பாகிஸ்தானியர்கள் ஏராளமானோர், தங்கள் நாட்டிற்கு திரும்ப வாகா – அட்டாரி எல்லையில் குவிந்துள்ளனர்.
அதேபோல், தமிழகத்தில் தங்கி உள்ள பாகிஸ்தானியர்களை நாளைக்குள் வெளியேற்ற போலீசார் நடவடிக்கை எடுத்து உள்ளனர். தொழில் மற்றும் மருத்துவ காரணங்களுக்காக தமிழகம் வந்துள்ள பாகிஸ்தானியர்களை கணக்கெடுக்கும் பணியை போலீசார் துவக்கி உள்ளனர்.
சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்ப்படும் காயங்கள் சீக்கிரத்தில் ஆறுவதில்லை. ஆனால் தற்ச்சமயம் விஞ்ஞானிகள் வெளியிட்டிருக்கும் ... |
காய்ச்சல் அகற்றியாகவும், பசி உண்டாக்கியாகவும், தாது பலம் உண்டாக்கியாகவும் செயல்படுகிறது. |
நன்கு முற்றிய வெண்பூசணிகாயை தோல் பகுதிகளை நீக்கி விட்டு, சதைப்பற்றை மட்டும் எடுத்து ... |