பாகிஸ்தானுடன் உறவு துண்டிப்பு – தாக்குதலுக்கு தயாராகிறது இந்தியா

பஹல்காம் பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து, பாக்., உறவை துண்டித்துக் கொள்வதாக இந்தியா அறிவித்துள்ளது.

சவுதி அரேபியா பயணத்தை பாதியில் முடித்துக் கொண்டு, கடும் கோபத்துடன் இந்தியா திரும்பிய பிரதமர் மோடி தலைமையில் நேற்று இரவு நடந்த மத்திய அமைச்சரவை பாதுகாப்பு குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் வருமாறு:

இந்தியா — பாக்., இடையே, 1960-ல் மேற்கொள்ளப்பட்ட சிந்து நதி நீர் ஒப்பந்தம் உடனடியாக ரத்து செய்யப்படுகிறது

பாக்., உடனான வாகா — அட்டாரி எல்லை உடனடியாக மூடப்படுகிறது. பாகிஸ்தானைச் சேர்ந்த யாருக்கும், இந்தியாவில் பயணம் செய்ய அனுமதி கிடையாது. வாகா — அட்டாரி எல்லை வழியாக பாகிஸ்தானியர்கள் யாராவது வந்திருந்தால், தகுந்த ஆவணங்களை காட்டி, மே 1ம் தேதிக்குள் திரும்ப வேண்டும்

‘சார்க்’ கூட்டமைப்பு நாடுகளுக்கான ‘விசா விதி விலக்கு’ பாகிஸ்தானுக்கு ரத்து செய்யப்படுகிறது. அந்த விசாவில் இந்தியாவில் இருக்கும் பாகிஸ்தானியர்கள் 48 மணி நேரத்துக்குள் வெளியேற வேண்டும்

டில்லியில் உள்ள பாக்., துாதரகம் செயலற்றதாக அறிவிக்கப்படுகிறது. அங்குள்ள ராணுவ, கடற்படை, விமானப்படையினர் உட்பட அனைத்து பாக்., அதிகாரிகளும் ஒரு வாரத்தில் வெளியேற வேண்டும்

பாக்., தலைநகர் இஸ்லாமாபாதில் உள்ள இந்திய துாதரகம் உடனடியாக மூடப்படுகிறது. அங்குள்ள ராணுவ, கடற்படை, விமானப்படை ஆலோசகர்கள் பதவிகள் ரத்து செய்யப்பட்டு, இந்திய அதிகாரிகள் அனைவரும் நாடு திரும்ப உத்தரவிடப்படுகிறது.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

இன்று மாலை 5 மணி முதல் போர் நிறு ...

இன்று மாலை 5 மணி முதல் போர் நிறுத்தம்; மே 12ல் பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை! இன்று மாலை 5 மணி முதல் போர் நிறுத்தத்தை ...

ராணுவத்திற்கு உதவ தயார்

ராணுவத்திற்கு உதவ தயார் பாகிஸ்தான் தாக்குதல் நடத்தி வரும் நிலையில் இந்திய ராணுவ ...

போரை நிறுத்துவதற்கு உதவ தயார் ; � ...

போரை நிறுத்துவதற்கு உதவ தயார் ; ஜெய்சங்கரிடம் அமெரிக்கா அமைச்சர் பேச்சு 'இந்தியா பாகிஸ்தான் இடையிலான போரை நிறுத்த உதவி செய்ய ...

போர் பதற்றம் உச்சம்; பிரதமர் மோ� ...

போர் பதற்றம் உச்சம்; பிரதமர் மோடியுடன் தேசிய பாதுகாப்பு துறை ஆலோசகர் ஆலோசனை போர் பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், டில்லியில் பிரதமர் ...

பாகிஸ்தானின் சதித்திட்டங்களை � ...

பாகிஸ்தானின் சதித்திட்டங்களை தொடர்ந்து முறியடிப்போம்; இந்திய ராணுவம் உறுதி ''பாகிஸ்தானின் சதித்திட்டங்களை தொடர்ந்து முறியடிப்போம்'' என இந்திய ராணுவம் ...

ஊடகங்கள் பொறுப்புடன் செயல்பட வ� ...

ஊடகங்கள் பொறுப்புடன் செயல்பட வேண்டும் – ராஜ்நாத் சிங் 'இந்திய ராணுவம் மேற்கொண்டு வரும் பாதுகாப்பு நடவடிக்கைகள் மற்றும் ...

மருத்துவ செய்திகள்

வாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர!

1.வாய் , நாக்கு. தொண்டை ரணம் தீர:-பப்பாளிப் பாலைத் தடவி வரத் தீரும். 2.நாக்குப் ...

மாதுளையின் மருத்துவக் குணம்

மார்புவலியைத் தணித்து, இதயத்திற்கு ஊட்டமளிப்பது மாதுளை. வயிற்று எரிச்சலை உடனடியாக குணப்படுத்துகிறது மாதுளைச் ...

உயர் இரத்த அழுத்தம் உருவாக காரணம ?

இரத்த கொதிப்பு (உயர் இரத்த அழுத்தம்) சமீபகாலமாக நம்நாட்டு மக்களில் பெரும்பாலானவர்களை பாதித்து ...