திட்டமிட்டு உழைத்தால் ஆட்சி நமதே

 திட்டமிட்டு உழைத்தால் ஆட்சி நமதே ஊழலை சகித்துக்கொள்ளாத நிலைப்பாட்டினை பாஜக எடுக்கவேண்டும், திட்டமிட்டு உழைத்தால் மத்தியில் காங்கிரசுக்கு மாற்றான அரசியல்சக்தியாக பா.ஜ.க.,வால் மீண்டும் உருப்பெறமுடியும் என புதுதில்லியில் ஞாயிற்றுக் கிழமை நடந்த தேசிய கவுன்சில் கூட்டத்தில் பாஜக மூத்த தலைவர் அத்வானி பேசியுள்ளார்.
தேசிய கவுன்சில் கூட்டத்தில் இது தொடர்பாக அவர் மேலும் பேசியதாவது:

1980-ஆம் ஆண்டில் பாஜக தொடங்கப்பட்டபோது பேசிய வாஜ்பாய் “பாஜக வித்தியாசமான கட்சியாகத் திகழவேண்டும்’ என்றார். அதை தொடர்ந்து மிகுந்த கட்டுக் கோப்புடனும் விழிப்புடனும் செயல்படும் கட்சியாக பா.ஜ.க திகழ்ந்தது. ஆனால், சில வருடங்களாக வித்தியாசம் நிறைந்த கட்சியாக பா.ஜ.க விளங்கிவருகிறது. அரசியல் கட்சியில் கருத்துவேறுபாடுகள் எழுவது சகஜம்தான் . கட்சி வளர்ச்சிக்கான மாறுபட்ட கருத்துக்களை வரவேற்க வேண்டும்.

வாரிசு அரசியல் பாஜகவில் கிடையாது; உள் கட்சி ஜனநாயம் ஊக்குவிக்கப் படுகிறது. ஆனால், இந்த அடையாளங் களுக்கு பாதகமாக உள்கட்சிபூசல்கள் உள்ளன. இனிவரும் காலங்களில் இந்த பிரச்னை எழாமல் தடுக்க கட்சியின் மத்திய-மாநில தலைமைகளுடன் ராஜ்நாத்சிங் ஒருங்கிணைந்து செயல்படவேண்டும்.

தங்களுக்கு மாற்றாக மத்தியில் வேறு அரசு அமையாது என்ற மேதப்பில் காங்கிரஸ் இருக்கிறது . ஆனால், ஊழல்நிறைந்த காங்கிரஸ் கூட்டணிஅரசு மீது மக்களின் என்ன ஓட்டமோ வேறு மாதுரி உள்ளது . அதனால், எந்த சூழலிலும் ஊழலை சகித்துக்கொள்ளாத கட்சியாக பா.ஜ.க திகழவேண்டும்.

சிறுபான்மையினர் நலன்களுக்காக பா.ஜ.க தந்துள்ள வாக்குறுதிகளை நிறைவேற்ற ஈடுபாடு காட்டவேண்டும். திட்டமிட்டு உழைத்தால் மத்தியில் காங்கிரசுக்கு மாற்றான அரசியல்சக்தியாக பா.ஜ.க.,வால் மீண்டும் உருப்பெறமுடியும் என அத்வானி பேசினார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

உணவை எளிதில் ஜீரணமாக்கும் பெருங்காயம்

நம்ம தமிழ் நாட்டுல ரசத்தையும், சாம்பாரையும் 'கமகமக்க' வைப்பதில் பெருங்காயத்தின் பங்கு அதிகம் ...

முருங்கையின் மருத்துவக் குணம்

மலமிளக்கியாகவும் சிறுநீர் பெருக்கியாகவும் காமம் பெருக்கியாகவும், கோழையகற்றியாகவும் செயல்படுகிறது.

நம் உடலில் இரத்தத்தில் சர்க்கரை இருக்க வேண்டிய அளவு

உணவு உண்ணும் முன்பாக 60 – 110 மில்லிகிராம்% (வெறும் வயிற்றில் எடுக்க ...