தெய்வீக‌ மொழியாம் ஸ‌ம்ஸ்க்ருத‌ம்

 தெய்வீக‌ மொழியாம் ஸ‌ம்ஸ்க்ருத‌ம்தெய்வ‌மொழி என‌ வ‌ழ‌ங்க‌ப்ப‌டும் ஸ‌ம்ஸ்க்ருதம், இறைவனை மனிதன் அடைய ஒரு வழியாக அருளப்பட்டது. இதைப் புரிந்துகொள்ளாத நன்றிகெட்ட மனிதர்கள், குறிப்பாகச் சில ஆட்சியாளர்கள், இதனை அழிக்கக் கங்கணம் கட்டிக்கொண்டு இருக்கின்றனர்.

இவர்களது இந்த செயல்களின் விபரீத விளைவுகளைச் சாமானிய மக்கள் அறிந்துகொள்ளவில்லை. ஒட்டுமொத்த‌ மனித இனத்தின் நன்மைக்காக இறைவனால் உருவாக்கப்பட்ட இந்த மொழி நமது அறியாமையினால் அழிந்துபோக விட்டுவிடக்கூடாது.

எனவே, இந்த தெய்வீக மொழியை சமுதாயத்தில் அனைவரும் அறிந்துகொள்ளும் விதத்தில் நமது முயற்சிகள் இருந்தாக வேண்டும். இது நமது தலையாய கடமை. இந்தக் கட்டுரையில் சொல்லியிருக்கும் செய்தியை அனைவரும், குறிப்பாக இந்துக்கள் அனைவரும்,இதன் மேன்மையை நன்கறிந்து, இது மீண்டும் தழைக்க முன்வரவேண்டுமென குருவருள் நாடி அவரடி பணிவோம்.

1. ஸம்ஸ்க்ருத மொழியின் தோற்றம்:

1.1 'பிரபஞ்சம் தோன்றும் முன்னரே இறைவன் ஸம்ஸ்க்ருத மொழியைப் படைத்தார். குரு தத்தாத்ரேயா த்ரேதா யுகத்தில் இதனை மீண்டும் தோற்றுவித்தார்.'

ஸம்ஸ்க்ருத மொழியின் தோற்றுவாயைப் பற்றி ஆராய்ச்சி செய்த மேலை நாட்டினர் சிலர், தத்தாத்ரேயா த்ரேதா யுகம் 'ஒலி என்பது முதன் முதலில் அவர்களது வாயிலிருந்து கிளம்பி, அவையே சங்கேதங்களாகவும், சப்தங்களாகவும் பிறகு எழுத்துகளாகவும் ஆரம்பித்து, பின்னர், ' இவையே பலவிதமாக உருமாறின' எனச் சொல்லுகின்றனர். இது முற்றிலும் தவறான கருத்து.

ஸம்ஸ்க்ருதம் இறைவனின் ஆணையால் உருவானது. மனித குலத்தைப் படைத்த இறைவன், அவர்களுக்குத் தேவையான அனைத்தையுமே கூடவே படைத்தார். எவையெல்லாம் மனிதனுக்கு வேண்டியிருக்கும் என முடிவு செய்து அவற்றையும் முன்னமே படைத்திருந்தார். அப்படித்தான், முக்தி அடைய மனிதனுக்குத் தேவையானது எனக் கருதி, இந்தத் தெய்வீக மொழியையும் படைத்தார். இதுவே ஸம்ஸ்க்ருதம். த்ரேதா யுகத்தில், மொழிக்கும் அப்பாற்பட்ட ஞானத்தை அறிய இயலாமல் தவித்தனர். இந்தக் கால கட்டத்தில்தான், குரு தத்தாத்ரேயர் மனித குலம் முக்தி பெறவென ஸம்ஸ்க்ருத மொழியை மீண்டும் உயிர்ப்பித்தார்.

1.2 'துவாபர யுகத்தின் முடிவு வரையில், ஸம்ஸ்க்ருத மொழியே பிரபஞ்சத்தின் ஒரே மொழியாக இருந்தது!'

ஸ‌த்ய‌, த்ரேதா, துவாப‌ர‌ யுக‌ங்க‌ளில் ஸ‌ம்ஸ்க்ருத‌ மொழி ம‌ட்டுமே அகில‌ உல‌க‌த்துக்கும் பொதுவான‌ மொழியாக‌ இருந்த‌து. என‌வேதான், இது 'உல‌க‌ மொழி' என‌ அழைக்க‌ப்ப‌ட்ட‌து. கௌர‌வ‌, பாண்ட‌வ‌ர்க‌ள் கால‌த்தில்கூட‌ இந்த‌ மொழியே பிர‌தான‌ மொழியாக‌ இருந்த‌து.

2. ஸ‌ம்ஸ்க்ருத‌ மொழியிலிருந்து பிற‌ மொழிக‌ள் தொட‌ங்கின‌.::

ம‌ஹாபார‌த‌ப் போர் முடிவ‌டைந்த‌தும், இந்துக்க‌ளின் சாம்ராஜ்ஜிய‌ம் சுருங்க‌த் தொட‌ங்க‌வே, ஸ‌ம்ஸ்க்ருத‌ மொழியும் முறைய‌ற்ற‌ உச்ச‌ரிப்புக‌ளால் சிதைக்க‌ப்ப‌ட்டு, அந்த‌ந்த‌ வ‌ட்டார‌ங்க‌ளில் வெவ்வேறு மொழிக‌ளாக‌ உருமாறிய‌து. இத‌னால்தான், ஆங்கில‌ம் முத‌லான‌ பிற‌ மொழிக‌ளிலும் கூட‌ ஸ‌ம்ஸ்க்ருத‌ மொழியின் சொற்க‌ள் உருமாறி, 'Gow' என்ப‌து cowஎன‌வும், த‌ந்த‌ என்ப‌து tooth என‌வும் வ‌ழ‌க்க‌பெறுகின்ற‌ன‌ என்னும் உதார‌ண‌ங்க‌ளால் அறிய‌லாம்

3. 'வில‌ங்கின‌ம், பொருள், இறைவ‌ன் முத‌லான‌வ‌ற்றிற்கு ஸ‌ம்ஸ்க்ருத‌ மொழியில் ப‌ல்வேறு பெய‌ர்க‌ள்!'::

ஸ‌ம்ஸ்க்ருத‌ மொழியில், ஒரு மிருக‌ம் ப‌ல‌வித‌மான‌ பெய‌ர்க‌ளால் அழைக்க‌ப்ப‌டும் அள‌விற்கு செழுமை வாய்ந்த‌தாக‌ இருந்த‌து. உதார‌ண‌மாக‌, OX என்னும் எருதுக்கு balad, vrushabh, gonath etc.;,என 60-க்கும் மேற்ப‌ட்ட‌ பெய‌ர்க‌ள் இருக்கின்ற‌ன‌. யானைக்கு gaja,kunjar,hastin, dantin, vaaran etc.; என 100-க்கும் மேற்ப‌ட்ட‌, சிங்க‌த்திற்கு vanaraj,kesarin, mrugendra,shardul etc.; என 80-க்கும் மேலாக‌ இருக்கின்ற‌ன‌. இப்ப‌டியே நீர் [jala, jivan, udak, paya, toya, aap;] த‌ங்க‌ம் swarna, kanchan, hem,kanak, hiranya etc;] போன்ற‌வ‌ற்றிற்கும் உண்டு. சூரியக் கடவுளைப் பனிர‌ண்டு நாம‌ங்க‌ளாலும், விநாய‌க‌ர், விஷ்ணு முத‌லான‌ க‌ட‌வுள்க‌ளை ஒவ்வொரு பெய‌ருக்கும் ஒரு குணாதிச‌ய‌மாக‌ வ‌ழ‌ங்கும் 1000 நாம‌ங்‌களாலும் அழைக்கும் துதிக‌ளை அறிந்த‌வ‌ர் ப‌ல‌ருண்டு.

4. இறை நாம‌ங்க‌ள்::

ஒரே க‌ட‌வுள் வேத‌ங்க‌ளில் ப‌ல்வேறு நாம‌ங்க‌ளால் குறிப்பிட‌ப்ப‌டுகிறார். அதேபோல‌ ஒரே பெய‌ரால் ப‌ல்வேறு தெய்வ‌ங்க‌ளும் அறிய‌ப்ப‌ட‌லாம். ம‌ஹாபார‌த‌த்தில் சிவ‌னைக் குறித்து 10,000-க்கும் மேற்ப‌ட்ட‌ நாம‌ங்க‌ள் இருப்ப‌தாக‌வும், அவ‌ற்றுள், 1800 இந்த‌ இதிஹாஸ‌த்தில் குறிப்பிட‌ப்ப‌ட்டிருப்ப‌தாக‌வும் அறிஞ‌ர்க‌ள் கூறுகின்ற‌ன‌ர். ந‌ம‌து ம‌ன‌ம் ஆன்மீக‌ம‌ய‌மாகும்போது, அனைத்துப் பெய‌ர்க‌ளுமே இறை நாம‌ங்க‌ளாக‌த் தோன்றும்' என ஸ்ரீ ராம‌ஸ்வ‌ரூப் க‌ர்க் என்ப‌வ‌ர் கூறுகின்றார்.

5. ஸ‌ம்ஸ்க்ருத‌ மொழியில் ஒரு இழிச்சொல் கூட‌ கிடையாது!::

இந்த‌ அற்புத‌ மொழியின் சிற‌ப்பைப் ப‌ற்றிக் குறிப்பிட‌ வ‌ருகையில், வார்த்தைக‌ளின்றித் த‌விக்கிறோம்! இத்த‌னை ஆயிர‌ம் சொற்க‌ள் இருந்த‌போதும், இந்த‌ ஸ‌ம்ஸ்க்ருத‌ மொழியில் 'பூட்டு' என்ப‌தைக் குறிக்கும் ஒரு சொல் கூட‌ இல்லை என்ப‌தை அறிந்து அதிச‌யிக்கிறோம்! ஏன் இப்ப‌டி? கௌத்ஸ‌ என்ப‌வ‌ர் குருத‌க்ஷிணை அளிப்ப‌த‌ற்கென‌, குபேர‌ன் ர‌குராஜ‌ப் ப‌ட்ட‌ண‌ம் முழுவ‌திலும் த‌ங்க‌க் காசுக‌ளைப் பொழிந்தானாம். ஆனால், ஒரு காசைக் கூட‌ அந்த‌ நாட்டு ம‌க்க‌ள் எடுக்க‌வில்லையாம். அந்த‌ தேச‌த்தில் திருட்டு ப‌ய‌மே இல்லாத‌தால், அவ‌ர்க‌ளுக்கு பூட்டு என்ப‌த‌ன் அவ‌சிய‌மே இருந்திருக்க‌வில்லை!

ஸ‌ம்ஸ்க்ருத‌ மொழியில் எந்த‌வொரு இழிச்சொல்லும் இல்லை. 'ம‌த்'[பைத்தியம்] எனும் ஒரு சொல் ஏதோ ஓரளவுக்கு வேண்டுமானால் இழிச் சொல்லாகச் சிலர் கருதிக் கொள்ளலாம். மொழியின் சிறப்பால், மக்களின் நன்னடத்தை புரிகிறது. எனவே, நாங்கள் சொல்ல விரும்புவதெல்லாம் இதுவே:: 'ஸம்ஸ்க்ருதம் கற்று நன்னடைத்தையில் உயர்க!'‌

நன்றி : Dr . சங்கர் குமார் வட கரோலினா USA

Tags; சமஸ்கிருதம் என்பதன் பொருள், சமஸ்கிருதம் என்று அழைக்கப்படும், சமஸ்கிருதம் மந்திரம், சமஸ்கிருதம் கற்க, சமஸ்கிருதம் கற்றுக்கொள்வோம்

2 responses to “தெய்வீக‌ மொழியாம் ஸ‌ம்ஸ்க்ருத‌ம்”

  1. Srini says:

    சமஸ்கிருதம் படிக்காதே என்று பிராமணர்கள் தடுத்ததாக தெரியவில்லை. சமஸ்கிருதம் பிராமண பாஷை அது ஆரியர்கள் மொழி ஆரியர்கள் திணித்த மொழி தமிழை அழிக்க வந்த மொழி அது செத்து போன மொழி என்று தடுத்தது திராவிட அரசியல்வாதிகள் தான். அதுவும் நம் தமிழகத்தில் தான். அண்டை மாநிலமான கேரளாவில் பல கிறிஸ்தவர்கள் சமஸ்கிருதத்தில் வல்லவர்களாக உள்ளனர். ஆந்திர கர்நாடகாவிலும் அப்படியே.

  2. palaniswamy says:

    . “இதைப் புரிந்துகொள்ளாத நன்றிகெட்ட மனிதர்கள், குறிப்பாகச் சில ஆட்சியாளர்கள், இதனை அழிக்கக் கங்கணம் கட்டிக்கொண்டு இருக்கின்றனர்.” என்று தாங்கள் குறிப்பிட்டிருந்தீர்கள். ஆனால் பெருமை மிக்க இந்த சமஸ்கிருதத்தை புழக்கத்தில் இருந்து அழித்தது பிராமணர்கள் தான். இப்போது சமஸ்கிருத்தை படி படி என்று உண்மையான பற்றோடு கூறும் இவர்கள் தான், பழங்காலத்தில் சூத்திரர்கள் சமஸ்கிருதம் படித்தால் தீட்டு என்று சொல்லி தடுத்து சமஸ்கிருத்தின் வழக்கொழித்தார்கள். இப்போது கண் கெட்ட பின் சூர்ய நமஸ்காரம் செய்வதுபோல சமஸ்கிருதம் படி படி என்கிறார்கள். மீனவ வம்சத்தில் வந்து வேதங்களை தொகுத்தும், மகாபாரத்தை எழுதியும் சமஸ்கிருதத்துக்கு வளம் சேர்த்தார் வியாசர். வனத்தில் திருடனாக திரிந்த வால்மீகி அற்புதமான இராமாயணம் தந்தார். ஆனால் இந்த பிராமண தெண்டப்பசங்க சமஸ்கிருத்தை படிக்காதே என கூறி வழக்கொழித்தனர். நண்பா வா இந்த பிராமணர்களிடமிருந்து சமஸ்கிருத்தை காப்போம்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

இனிப்பு

இயற்கையான பழ உணவு உடலுக்குத் தீங்கு விளைவிக்காது. நீரிழிவு உள்ளவர்கள் மிகவும் குறைவாகப் ...

மருதாணிப் பூவின் மருத்துவக் குணம்

மணமிக்க சிறு பூக்கள் மலர்வதைப் பார்க்க அழகாக இருக்கும். பூஜைக்கும் உதவும் இப்பூக்கள். ...

உளுந்தின் மருத்துவக் குணம்

இதை உண்பதால், வயிற்றுவலி, பேதி, சீதபேதி, அஜீரணபேதி, மூத்திரத் தொடர்புடைய நோய்கள், மூலவியாதி, ...