மகத்தான சாதனையாக இல்லந் தோறும் மூவர்ணக் கொடி வலைதளத்தில் 5 கோடிக்கும் மேற்பட்ட மூவர்ணக்கொடி செல்பி படங்கள் பதிவேற்றப் பட்டுள்ளன.
இந்தியா சுதந்திரத்தின் 76வது ஆண்டைத் தொடங்கும் வேளையில்,விடுதலையின் அமிர்தப்பெருவிழா என்னும் 75 வார கவுன்ட் டவுன் மத்திய சுற்றுலா அமைச்சகத்தால் மேற்கொள்ளப்பட்ட இல்லந்தோறும் மூவர்ணக் கொடி இயக்கத்துடன் 2022ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15ஆம் தேதியுடன் முடிவடைந்துள்ளது.
இந்த இயக்கத்தில் மாலை 4 மணிவரை 5 கோடி செல்பி படங்கள் வலைதளத்தில் பதிவேற்றம் செய்யப் பட்டுள்ளன. இது இந்திய வரலாற்றில் சிறப்புமிக்க தருணமாகும்.
இந்தசாதனை பற்றி குறிப்பிட்டுள்ள கலாச்சாரம் மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சம் திரு கிஷன் ரெட்டி, கடமை உணர்வுகொண்ட இந்தியர்களின் நாடு முதலில் என்ற கூட்டு முயற்சியை இது பிரதிபலிப்பதாக கூறியுள்ளார். அனைவருக்கும் அவர் சுதந்திரதின வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
குளிர்ச்சியின் காரணத்தால் ஏற்படும் சுரம், இருமல், அஜீரணத்தால் ஏற்படும் தொல்லைகள், வயிற்று உப்பிசம், ... |
நன்கு முற்றிய வெண்பூசணிகாயை தோல் பகுதிகளை நீக்கி விட்டு, சதைப்பற்றை மட்டும் எடுத்து ... |
உணவைச் சீரணிக்க புளிப்புச்சுவை உதவுகிறது. புளிப்புச் சுவை அரிக்கும் தன்மையுள்ளது. இரத்தத்தில் உள்ள ... |