தஞ்சாவூரில் அதுவும் ஒரேதெருவைச் சேர்ந்த இருவர் ஆளுநர்

தஞ்சாவூரிலிருந்து அதுவும் ஒரே தெருவைச் சேர்ந்த இருவர் பாஜகவால் ஆளுநராக தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளனர்..இந்தியாவில் வேறு எங்கும் இதுபோல் இதுவரை நிகழ்ந்ததில்லை..இன்று மணிப்பூர் ஆளுநராக தேர்ந்தெடுக்கப் படுள்ள இல கணேசன் அவர்களின் சொந்த ஊர்(எங்கள்) தஞ்சாவூர். இவர் பிறந்து வளர்ந்து படித்தெல்லாம், இங்குள்ள நாணயக்கார செட்டி தெரு. இதே தெருவைச் சேர்ந்த இரண்டு நபர்கள் ஆளுநராகி உள்ளார்கள் என்பது சுவாரஸ்யமானது.

சில ஆண்டுகளுக்கு முன்பு மேகாலயா ஆளுநராக இருந்த சண்முகநாதனும் இதே தெருவைச் சேர்ந்தவர்தான்.இந்த இரண்டு பேருமே, தஞ்சை தெற்கு வீதியில் உள்ள வீரராகவா மேல்நிலைப்பள்ளியில் படித்தவர்கள்.

இவர்கள் இருவரோடும் இளம் வயதில் பழகிய பாஜக பிரமுகரான வி.எஸ். ராமலிங்கம் அவர்கள் இவர்கள் குறித்து கூறிய போது ”மேலாகாலய ஆளுநராக இருந்த சண்முகநாதன், இப்போது மணிப்பூர் ஆளுநராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள இல.கணேசன், இவங்க இரண்டு பேரோடு வீடுமே நாணயக்கார செட்டித் தெருவுலதான் இருந்துச்சு.

இல.கணேசனுக்கு ஐந்து சகோதரர்கள், மூன்று சகோதரிகள். அவரோட தந்தை, ஒரு பள்ளிக்கூடத்தில் ஆசிரியராரக இருந்தார். அவங்களோட குடும்பத்தினர், இதே பகுதியில் ஒரு புத்தக கடையும் நடத்திக்கிட்டு இருந்தாங்க. தஞ்சாவூர்ல அதுதான் முதல் புத்தக கடை. இல.கணேசன் சின்ன வயசாக இருக்கும்போதே, அவங்க அப்பா இறந்துட்டார். அண்ணன்கள் அரவணைப்புலதான் அவர் வளர்ந்தார்.

இல.கணேசனும், இதே பகுதியில் வசித்த, சண்முகநாதனும் சின்ன வயசுலயே ஆர்.எஸ்.எஸ்-ஸில் தீவிர ஈடுபாட்டுடன் இருப்பாங்க. அப்போ தஞ்சாவூர் சிவகங்கை பூங்காவில் ஆர்.எஸ்.எஸ் வகுப்புகள் நடக்கும். இவங்களோடு நானும் சேர்ந்து சைக்கிளை தள்ளிக்கிட்டே அந்த வகுப்புகளுக்கு போயிட்டு வருவேன்.

சாயங்கால நேரத்துல மேலவீதியில் உள்ள காமாட்சி அம்மன் கோயிலுக்கு போயி சாமி கும்பிட்டுட்டு வெளியில் உட்கார்ந்து பேசிக்கிட்டு இருப்போம். 1970-களின் தொடக்கத்தில் இவங்க இரண்டு பேருமே அடுத்தடுத்து ஆர்.எஸ்.எஸ் முழுநேர பிரசாரகராக ஆகிட்டாங்க. அதன் பிறகு இரண்டு பேருமே தஞ்சாவூரில் வசிக்கலைனாலும்கூட, அடிக்கடி இங்க வந்து போயிக்கிட்டு இருக்காங்க.

தஞ்சாவூரில் இருந்து, அதுவும் ஒரே பகுதியைச் சேர்ந்த இரண்டு பேர், ஆளுநர் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டது , வேறு எங்கும் நிகழ்ந்திக்க வாய்ப்பில்லை” என தெரிவித்துள்ளார்.
நானும் தஞ்சாவூர்காரன் என்பதால்..எங்கள் ஊர்காரர்கள் இருவரை ஆளுநராக நியமித்து தஞ்சைக்கு மேலும் பெருமை சேர்த்த மத்திய பாஜக அரசுக்கு நன்றி…! நன்றி!!

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

தூண்டிவிடும் பாகிஸ்தான்: பயங்க ...

தூண்டிவிடும் பாகிஸ்தான்: பயங்கரவாதம் வீழ்த்தப்படும்: மோடி உறுதி பயங்கரவாதத்தை பாகிஸ்தான் தூண்டி விடுகிறது. அதனை இரும்புக்கரம் கொண்டு ...

9-வது நிர்வாக கூட்டத்திற்கு மோட ...

9-வது நிர்வாக கூட்டத்திற்கு  மோடி தலைமை தாங்குகிறார் பிரதமர் திரு நரேந்திர மோடி ஜூலை 27, 2024 ...

இந்தியாவின் கிராமப்புறங்களில் ...

இந்தியாவின் கிராமப்புறங்களில் வறுமை ஒழிப்பு திட்டம் கிராமப்புற மக்களின் பொருளாதார நிலையை மேம்படுத்துவதற்காக, வாழ்வாதார வாய்ப்புகளை ...

கார்கில் வெற்றி தின வெள்ளிவிழா ...

கார்கில் வெற்றி தின வெள்ளிவிழாவையொட்டி நினைவு தபால்தலை வெளியிடப்பட்டது கார்கில் வெற்றி தின வெள்ளிவிழாவையொட்டி நினைவு தபால்தலை இன்று ...

25-வது கார்கில் தினத்தையொட்டி பி ...

25-வது கார்கில் தினத்தையொட்டி பிரதமர் மரியாதை 25-வது கார்கில் வெற்றி தினத்தை முன்னிட்டு லடாக்கில் இன்று ...

பிரதமரின் வீட்டுவசதி திட்டம்

பிரதமரின் வீட்டுவசதி திட்டம் நாடு முழுவதும் நகர்ப்புறங்களில் அடிப்படை வசதி கொண்ட வீடுகளை ...

மருத்துவ செய்திகள்

மலச்சிக்கல் நீங்க உணவு முறைகள்

புரோட்டீன் தினமும் இவர்கள் ஒரு கிலோ எடைக்கு 1கிராம் வீதம் புரோட்டீன் உணவைச் சாப்பிடலாம்.

தொட்டாற்சுருங்கியின் மருத்துவ குணம்

தொட்டாற்சுருங்கி இலைச் சாற்றை எடுத்துக் காலையிலும், மாலையிலும் தேமலின் மேல் தடவி வைத்துக் ...

அம்மான் பச்சரிசியின் மருத்துவ குணம்

இது கொடி வகையைச் சேர்ந்தது. கீரைவகையைச் சேர்ந்தது இல்லை. எனினும் இதன் இலைகள் ...