அறிவோம் அரசமரம்

அரசமரம்  நம்நாட்டில் அரசமரத்தினை இறைவனாகவும், வேம்பினை அம்மனின் அம்சமாகவும் கருதி அவற்றை ஒன்றாக நட்டு அதன் அடியில் பிள்ளையார் மற்றும் நாகங்களால் சூழப்பெற்ற சிவலிங்கம் ஆகியவற்றை பிரதிஷ்டை செய்து வழிபடும் பழக்கம் வெகு காலமாக இருந்து வருகிறது.

இறைவனின் அம்சமாக கருதப்படும் அரசமரத்தினை பற்றி இப்போது காண்போம். தெய்வீகத் தன்மையும் ,மருத்துவ குணங்களையும் கொண்ட இந்த அரசமரம் வளர்ந்திடும் இடத்தில் உயிரியல் சம்பந்தப்பட்ட ஒரு மின் காந்த சக்தி நிலவிடுகிறது .

இம்மரத்தினை வலம் வரும் போது , வலம் வருவோரின் உடலில் உள்ள மின் காந்தத்தில் மாறுதல் ஏற்படுகிறது.இதன் விளைவால் உடலில் உள்ள நலமில்லச் சுரப்பிகள் தூண்டப் படுகின்றன. குறிப்பாக குழந்தைப் பேறு இல்லாத மலட்டுத் தன்மை கொண்ட பெகளின் சூலகம் தூண்டப் படுகிறது.இதனால் சூழகத்தில் சுரப்பு நீர்கள் சமப்படுத்தப்படுகிறது. கர்ப்பப்பையும் திடப் பட்டு பக்குவப்படுத்தபடுகிறது. இதனால் கர்பப்பை சம்பந்தமான நோய்கள் நீங்குவதோடு மட்டுமல்லாமல் மலட்டு தன்மையும் அகலுகின்றது .

இம்மரத்தில் பட்டு வீசும் காற்றை பெண்கள் சுவாசிக்கும் போது உடல் நலன் மேம்படுகிறது. கருப்பையில் கருச்சிதைவை உண்டாக்கும் பூசிகளை கொள்ளும் சக்தியை பெற்றது அரசமரம் ஆகும் ..சனிக்கிழமைகளில் அரச மரத்தை வலம் வருவதால் பெண்களுக்கு புத்திரதோஷம் நீங்கும் என்பது நம்பிக்கையாக உள்ளது.

அரசம்பழத்தின் விதையை அரைத்து பாலுடன் கலந்து உட்கொள்ளவும் செய்கின்றனர் .இது ஆயுர்வேத மருத்துவக் கோட்பாடாகும் .இதனால் கருத்தரிக்கும் வைப்புகள் அதிகரிக்கவும் செய்கின்றது.மேலும் அரசமர காற்றுக்கு பித்தம் ,கபம் போன்ற உபாதைகளையும் பிற சரும வியாதிகளையும் போக்கும் மருத்துவ குணங்களும் உண்டு. அரசமரத்தின் பட்டையும். வெறும்,இலையின் சாறும் கர்ப்பைப்பை கோளாறுகளைப் போக்கி குணமளிக்கும் தன்மையை கொண்டது.

பகல் பொழுதில் தன உணவு தயாரிப்பதற்கு உண்டாகும் ஒளிச்சேர்க்கை நிகழ்வின் போது தாவர இயல் ஆய்வின்படி அரசமரம் ஒன்று ,நாளொன்றுக்கு கிட்டத்தட்ட வாயு மண்டலத்தில் உள்ள 1800கிலோ கார்பன் டை ஆக்ஸைடை கிரகித்துக் கொள்கிறது .அது மட்டுமல்லாமல் அந்நிகழ்வின் போது சுமார் 2400 கிலோ ஆக்ஸிஜனை வெளிவிடுகிறது. இதன் விளைவால் அம்மரத்தைச் சுற்றி வரும் மனிதர்களும் பிற உயிரினங்களும் ஆக்ஸிஜனை தடையின்றி சுவசித்திடும் நிலை உருவாகின்றது.வாயு மண்டலத்தை தூய்மை படுத்திடும் பண்பு தாவரங்களில் அரச மரத்திற்கு மட்டுமே அதிகமாக உள்ளதாக தெரியவருகிறது.

இதனால் பெண்கள் இம்மரத்தை வலம்வருவதால் இதயம், ஜீரண உறுப்புகள் ,மற்றும் கர்ப்பப்பை கோளாறுகள் நெஞ்சி புத்துணர்வு பெறுகின்றனர்.அரசமரத்து பட்டையை நன்றாக உலர்த்தி இடித்துச் சூரணம் செய்து முறைப்படி உட்கொண்டு வருவதால் சரும வியாதிகள் நீங்கும் .அரசமரத்தின் அடிபகுதியில் அதன் பட்டியால் கீறினால் அம்மரத்தில் பால் வடியும் அதனை காலில் உண்டாகும் பித்த வெடிப்புகளில் தடவினால் பித்த வெடிப்புகள் குறையும்.

அதுபோல் மூளையின் செயல்பாடுகளை தூண்டி, மன அமைதியைக் கொடுக்கும் குணமும் இதற்கு உண்டு.

அரசமரமானது பேரு வயிறு ,கண்டமாலை,
உதரவலி ,அண்டவாயு ,ப்ரம்மிய நோய்,கிராந்தி நோய்,தலை நோவு,சூலை நோய்,இருமல்,தந்த வாயு,குருடு,செவிடு போன்ற நோய்களைப் போக்கும் மருத்துவ குணம் உடையது.அது மட்டுமல்லாமல் அம்மரத்தை வழிபடுவோர் வறுமை விலகி சந்ததி யோகமும் செல்வா வளமும் பெற்று நலமுடன் வாழ்ந்திடுவர் .

புராதான காலம் தொட்டே அரச மரம் இந்தியாவில் இருந்து வந்துள்ளது. இதன் பூர்வீகத்தை இந்தியா, இலங்கை, மியான்மர், நேபாளம், பாகிஸ்தான் போன்ற நாடுகள் போட்டி போட்டுக்கொண்டு தங்களுடையது என்கின்றனர். ஆனால் இதன் பூர்வீகம் பாரத பூமிதான்.

இதே போல் திருமணம் நடைபெறும்போது அரசாணிக்கால் நட்ட பிறகு தான் திருமணச் சடங்குகள் நடைபெறத் தொடங்கும் .இது எதற்கு என்றால் அம்மரத்தில் பிரம்ம,விஷ்ணு ,பரமசிவன் என மும்மூர்த்திகளும் குடியிருப்பர்.அதன் கிளைகளிலும் ,இலைகளிலும் தேவர்கள் தங்கிடுவார்.இவர்கள் யாவரும் கலைபோழுதினில் அதில் தங்கி இருக்கின்றனர் .மாலை பொழுதில் யட்சர்,ராட்சதர்,சித்தர் என பலரும் தங்கிடுவர்.இதனால் ஒரு அரசமரம் நடுவது தேவர்கள் குடிபுக வீடு கட்டிக் கொடுப்பது போன்ற புண்ணியமாகும்.இவ்வாறு திருமான் சடங்குகள் தொடங்குவது முன்னால் அம்மரத்தினை கோவில்களில் நட்டுவைத்து விட்டு பின்னர் திருமண சடங்கை தொடங்கலாம் .இவ்வாறு நாடும் மாற கன்றுகள் விருட்சமானால் பலருக்கும் பலனளிக்கும் புண்ணியம் வந்து நம்மை சேரும்.

அதிகளவு ஆக்ஸிஜனை உற்பத்தி செய்யும் மரங்களுள் அரச மரமும் ஒன்று. எனவே அரச மரத்தை நட்டு அதன் பயனை நாமும், நம் சந்ததியினரும் பெற வழி செய்வோம்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

சூரியகாந்திப் பூவின் மருத்துவக் குணம்

சூரியகாந்திப் பூக்களிலிலுருந்து பெறப்படும் எண்ணெய் ஆரோக்கியத்திற்கும், நரம்புத் தளர்ச்சி நீங்குவதற்கும் மிகச் சிறந்ததாகப் ...

நீரிழிவுநோய் உடையவர்களுக்கு உணவு முறை

நீரிழிவுநோய் உடையவர்களுக்கு இந்த அட்டவணையில் சில மாற்றங்களைச் செய்து கொள்ள வேண்டும். அதற்கு ...

இஞ்சியின் மருத்துவ குணங்கள்

வயிற்றுஉப்பிசம், வயிற்றுவலி ஏற்பட்டிருந்தால் 1௦ கிராம் இஞ்சியை நைத்து ஒரு சட்டியில் போட்டு, ...