இதில் சிற்றரத்தை, பேரரத்தை என்று இரண்டு வகைகள் உண்டு. இந்த இரண்டு வகையும் இந்தியாவில் உஷ்ணப் பிரதேசங்களில் பயிராகும். இதன் சுவை கார்ப்பாக இருக்கும். இதை உண்டால் நெஞ்சுக் கோழையை அகற்றும், நெஞ்சு சளியைப் போக்கும். இருமல், சீதளம், கரப்பான், மார்பு நோய், மூலம், உடம்பில் தோன்றும் வீக்கம், தந்தநோய், தந்த மூலப்பிணி, வாத சோணிதம், தீச்சுரத்தாற் பிறந்த கபம் ஆகிய நோய்களைப் போக்கும், பசியை உண்டாக்கும்.
ஒரு துண்டு சிற்றரத்தையை வாயில் போட்டு சுவைத்தால் சீதளம், கபம் வாந்தி தணியும், இருமல் குறையும்.
பித்த தேகம் உள்ளவர்களுக்கு உண்டாகும் கபகட்டுக்கு இதைக் கொடுக்கும் போது ஒரு துண்டு கற்கண்டுடன் சேர்த்துச் சுவைக்க வேண்டும்.
அதிமதுரம், தாணிச்சப்பத்திரி, திப்பிலி, சிற்றரத்தை வகைக்கு 5 கிராம் எடுத்து அம்மியில் வைத்து தண்ணீர் விட்டு சாந்து போல அரைத்து 25 மில்லி தண்ணீரில் கலக்கி அடுப்பிலேற்றி பொங்கச் செய்து பிறகு வடித்து, தேன் சிறிது சேர்த்துக் கொடுக்க, கப இருமல், கபக்கட்டு, கபதோடம், குற்றிருமல், சுரம், தலைவலி, சீதளம் முதலியவை நீங்கும்.
You must be logged in to post a comment.
தாய் அல்லது தந்தை – இருவரில் யாராவது ஒருவருக்கு நீரிழிவுநோய் இருந்தால், அவர்களுடைய ... |
உங்களுக்குத் தெரியுமா? அலோபதி மருத்துவம் என்பது மேல்நாடுகளில் இருந்து இறக்குமதியான மருத்துவமுறை.இந்த மருத்துவமுறையின் ... |
நாகப்பட்டை, அத்திப்பட்டை, ஆவாரம்பட்டை மூன்றையும் ஒரு பிடி வீதம் எடுத்து மண் சட்டியிலிட்டு ... |
வணக்கம்.எனக்கு சிற்றரத்தை பேரரத்தை இரு மூலிகையின் படமும் வேண்டும்.நன்றி