முடக்குவாத நோயாளிகளின் ஆரோகியத்தில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை வழங்கும்

முடக்குவாத நோயாளிகளின் ஆரோக்கியத்தில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை  யோகா ஏற்படுத்தும் என்பதை புதுதில்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையின் புதிய ஆய்வு காட்டுகிறது.

முடக்குவாதம் என்பது  மூட்டுகளில் வலி ஏற்பட காரணமாகிறது. இதனால், மூட்டுகளில் வலியும், சேதமும் ஏற்படுவதோடு, நுரையீரல், இதயம், மூளை போன்ற பிற உறுப்புகளுக்கும் பாதிப்பு ஏற்படுகிறது.  பாரம்பரியமாக யோகா பயிற்சி உடலுக்கும், மனதிற்கும் நல்ல பலன்களை  தருகிறது என்பது அறியப்பட்ட ஒன்றாகும்.

எய்ம்ஸ் மருத்துவமனையில் உள்ள பல்வேறு துறைகளில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளில் யோகாப் பயிற்சி வலி நிவாரணியாக  மட்டுமின்றி, செலுலார் மற்றும் மூலக்கூறு நிலையிலும்  பயனளிப்பதாக  கண்டறியப்பட்டுள்ளது.  யோகாப் பயிற்சி செலுலார் சேதத்தைக் கட்டுப்படுத்துவதன் மூலம்   வலியை குறைக்கிறது.

இந்த ஆய்வு முடிவுகள் சயின்டிஃபிக் ரிப்போர்ட்ஸ் 2023-ல் வெளியிடப்பட்டுள்ளன. இதன் விவரங்களை https://www.nature.com/articles/s41598-023-42231-w என்ற இணைப்பில் காணலாம். இந்த ஆய்வு முடக்குவாத நோயாளிகளுக்கு யோகாப் பயிற்சி சிறந்தது என்பதற்கு சான்றளிக்கிறது. வலி, இறுக்கமான தன்மை போன்ற அறிகுறிகளிலிருந்து நிவாரணம் அளிப்பது மட்டுமின்றி, நோயைக் கட்டுப்படுத்துவதற்கும் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதற்கும் பங்களிப்பு செய்கிறது. மருந்துகளை போல் யோகாவில் பக்கவிளைவு இல்லை என்பதோடு, செலவு குறைந்ததாகவும் இருப்பது குறிப்பிடத்தக்கது.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

தமிழகத்தை மீட்போம் நாட்டை காப் ...

தமிழகத்தை மீட்போம் நாட்டை காப்போம் பாசத்துக்குரிய பாஜக.,வின் என் அருமைத் தாமரை சொந்தங்களே உங்கள் ...

தமிழக மக்களிடம் தொடர்பில் இல்ல ...

தமிழக மக்களிடம் தொடர்பில் இல்லாத முதல்வர் – அண்ணாமலை ''முதல்வர் ஸ்டாலின் தமிழக மக்களிடமிருந்து Out of contactல் ...

ஏப்ரல் 22-ல் சவுதி அரேபியா செல்கி ...

ஏப்ரல் 22-ல் சவுதி அரேபியா செல்கிறார் பிரதமர் மோடி சவுதி அரேபியாவின் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மானின் ...

துணை ஜனாதிபதியை சந்தித்து கவர் ...

துணை ஜனாதிபதியை சந்தித்து கவர்னர் ரவி ஆலோசனை டில்லி சென்றுள்ள கவர்னர் ரவி, துணை ஜனாதிபதி ஜெகதீஷ் ...

யுனேஸ்கா பதிவேட்டில் பகவத் கீத ...

யுனேஸ்கா பதிவேட்டில் பகவத் கீதை பிரதமர் மோடி பெருமிதம் 'யுனெஸ்கோ' உலக நினைவகப் பதிவேட்டில், ஸ்ரீமத் பகவத் கீதை ...

எலான் மஸ்குடன் பிரதமர் மோடி ஆலோ ...

எலான் மஸ்குடன் பிரதமர் மோடி ஆலோசனை அமெரிக்க தொழிலதிபரும், உலகப் பணக்காரர்களில் ஒருவருமான எலான் மஸ்க் ...

மருத்துவ செய்திகள்

நந்தியாவட்டையின் மருத்துவ குணம்

ஒரு சுத்தமான கண்ணாடி டம்ளரை எடுத்து, அதில் முக்கால் அளவு சுத்தமான தண்ணீரை ...

சாத்துக்குடியின் மருத்துவக் குணம்

சாத்துக்குடி பழத்தின் சுளைகளை வாயிலிட்டு சுவைத்துத் தின்றால் பற்கள் வலுப்படும். வாய் சுத்தமாகும். ...

வயிற்றுப்போக்குக்கான உணவுமுறைகள்

பல்வேறு வயிற்றுப்போக்கு, பேதி, காலரா, வயிற்றுக்கடுப்பு போன்றவற்றில் பல முறை தொடர்ந்து வயிற்றுப்போக்கு ...