தேசிய மனித உரிமைகள் ஆணைய தலைவராக நீதிபதி ஜோசப்பை நியமிக்க பாஜக. கடும் எதிர்ப்பு

 தேசிய மனித உரிமைகள் ஆணைய தலைவராக  நீதிபதி ஜோசப்பை நியமிக்க பாஜக. கடும் எதிர்ப்பு தேசிய மனிதஉரிமைகள் ஆணையத்தின் தலைவராக உச்ச நீதிமன்றத்தின் ஓய்வுபெற்ற முன்னாள் நீதிபதி ஜோசப்பை நியமிக்க பாஜக. கடும்எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

தேசிய மனித உரிமை ஆணையத்தின் தலைவராக பதவி வகித்த நீதிபதி மாத்தூர் ஜனவரிமாதம் ஓய்வுபெற்றதை தொடர்ந்து அந்தப்பதவி காலியாக இருந்தது. இந்தபதவிக்கு யாரைநியமிப்பது என்பது குறித்து ஆலோசிக்க பிரதமர் மன்மோகன்சிங் தலைமையில் நேற்றுமுன்தினம் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் எதிர்க்கட்சி தலைவர்களான சுஷ்மாஸ்வராஜ், அருண்ஜெட்லி, சபாநாயகர் மீராகுமார், உள்துறை அமைச்சர் சுஷில் குமார் ஷிண்டே, ராஜ்ய சபா துணைத் தலைவர் பிஜே. குரியன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

இந்த கூட்டத்தில் நீதிபதி ஜோசப்பை நியமிக்க சுஷ்மாஸ்வராஜூம், அருண்ஜெட்லியும் கடும் எதிர்ப்புதெரிவித்து வெளிநடப்பு செய்தனர். இருப்பினும் பெரும்பான்மை உறுப்பினர்களின் முடிவின் அடிப்படையில் நீதிபதி ஜோசப்பையே மனித உரிமை ஆணைய தலைவராக நியமிப்பதில் மத்திய அரசு உறுதியாக உள்ளதாக டெல்லி தகவல்கள் தெரிவிக்கின்றன.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

நாட்டில் ஆயுஷ்மான் பாரத் திட்ட� ...

நாட்டில் ஆயுஷ்மான் பாரத் திட்டத்தில் 58 கோடி மக்களுக்கு இலவச சிகிச்சை ஆயுஷ்மான் பாரத் திட்டத்தில் 58 கோடி மக்களுக்கு இலவச ...

இந்தியாவின் சுகாதார திட்டங்கள� ...

இந்தியாவின் சுகாதார திட்டங்களை பகிர்ந்து கொள்ள தயார் இந்தியாவின் பல்வேறு சுகாதார திட்டங்களின் நடைமுறைகளை உலக நாடுகளுடன் ...

தி.மு.க.,வை வீழ்த்துவதற்கு அனைத்� ...

தி.மு.க.,வை வீழ்த்துவதற்கு அனைத்துக் கட்சிகளும் ஒன்றிணைய வேண்டும் அனைத்து கட்சிகளும் பாகுபாடு இன்றி தி.மு.க.,வை வீழ்த்துவதற்கு ஒன்றிணைய ...

மக்களுக்கு விளக்கம் சொல்வாரா ம� ...

மக்களுக்கு விளக்கம் சொல்வாரா முதல்வர் மத்திய அரசு கடந்த நான்கு ஆண்டுகளில் தமிழகத்துக்கு எந்த ...

பாலியல் குற்ற வழக்குகளில் தி.மு ...

பாலியல் குற்ற வழக்குகளில் தி.மு.க.,வினரின் கீழ்த்தரமான செயல்பாடு 'தி.மு.க.,வின் கீழ்த்தரமான செயல்பாடு, தி.மு.க.,வினர் ஈடுபடும் அனைத்து பாலியல் ...

என் ரத்த நாளங்களில் பாய்வது ரத் ...

என் ரத்த நாளங்களில் பாய்வது ரத்தம் அல்ல; கொதிக்கும் சிந்துார்: பிரதமர் மோடி ஆவேசம் ''என் ரத்த நாளங்களில் பாய்வது ரத்தம் அல்ல; கொதிக்கும் ...

மருத்துவ செய்திகள்

காதில் வரும் நோய்கள்

காதில் என்ன நோய் வந்துவிடப் போகிறது என்று யாரும் நினைக்க வேண்டாம். வாய் ...

காட்டாமணக்கு இலையின் மருத்துவக் குணம்

இலை தாய்ப்பால், உமிழ்நீர் பெருக்கியாகவும், பல் இரத்தக் கசிவை நிறுத்தவும், வீக்கத்தை குறைப்பதாகவும் ...

முருங்கை கீரை , முருங்கை கீரையின் மருத்துவ குணம்

முருங்கை கீரையால் உட்சூடு, மந்தம், தலைநோய், மூர்ச்சை, வெறிநோய், கண்ணோய் போன்ற நோய்கள் ...