தேசிய மனித உரிமைகள் கமிஷனின் தலைவராக இருந்த உச்ச நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி ஏ.எம்.மிஸ்ரா சமீபத்தில் ஓய்வு பெற்றார்.
இந்நிலையில், மனித உரிமைகள் கமிஷனின் புதிய தலைவரை தேர்வு செய்வது தொடர்பாக பிரதமர் மோடி தலைமையிலான தேர்வு குழு, பார்லிமென்ட் வளாகத்தில் உள்ள அவரது அலுவலகத்தில் நேற்று கூடியது.
இந்த குழுவில் உறுப்பினர்களாக உள்ள லோக்சபா சபாநாயகர் ஓம் பிர்லா, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுல், ராஜ்யசபா எதிர்க்கட்சி தலைவர் கார்கே ஆகியோரும் பங்கேற்றனர்.
இந்த கூட்டத்தில், தேசிய மனித உரிமைகள் கமிஷனின் புதிய தலைவராக யாரை தேர்வு செய்வது தொடர்பாக விவாதிக்கப்பட்டது. தேசிய முக்கியத்துவம் வாய்ந்த இந்தப் பதவிக்கு, பலரது பெயர்கள் முன்மொழியப்பட்டாலும், சமீபத்தில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிப தியாக இருந்து ஓய்வுபெற்ற டி.ஒய்.சந்திரசூட் தேர்வு செய்யப்பட அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
கல்யாணமுருங்கைக் கீரை, சீரகம் இரண்டையும் நெல்லிச்சாறு சேர்த்து அரைத்து தினமும் அதி காலையில் ... |
குடல் வாயு அகற்றியாகவும், பசி தூண்டியாகவும் நுண்புழுக் கொல்லியாகவும் செயல்படுகிறது. |
தினமும் கடுக்காய்ச் சூரணம் செய்து வைத்துக்கொண்டு, உணவுக்குப் பின் திரிகடியளவு சுடுநீரில் கலந்து ... |