வெள்ளைக்காரனிடம் பெற்ற சுதந்திரம் காலாவதியாகிவிட்டது

 வெள்ளையன், கொள்ளையர்களிடம் நாட்டை ஒப்படைத்து விட்டு போன தினம் இன்று சுதந்திர தினம். 66 வருடங்களுக்கு முன் வெள்ளையன், கொள்ளையர்களிடம் நாட்டை ஒப்படைத்து விட்டு போன தினம்.

கோடிக் கணக்கான அப்பாவிகள் ரத்தம் சிந்தி, உயிர் கொடுத்து போராடி

பெற்ற சுதந்திரம் இன்று இந்தியாவின் மிகப் பெரும்பான்மையான, தனிமனித ஒழுக்கம் இல்லாத, லஞ்ச மற்றும் ஊழல் மலிந்த பெருச்சாளிகளுக்கு பயன் படுகிறது.

தன்னலம் இன்றி சேவை ஆற்றுவது என்பது இன்று பைத்தியக் காரத்தனமாக மாறிவிட்டது. ஒரு சிறு உதவி செய்தால் கூட பெரும்பான்மை மக்கள், அதை விளம்பரப்படுத்திக் கொண்டுதான் செய்கிறார்கள். தேசப்பற்றுக் கூட பகட்டுக்காக செய்யப்படும் பொருளாக மாறிவிட்டது. இந்தியன் என்கிற உணர்வு கூட கிரிக்கெட்டை தாண்டி வெளி வருவதில்லை.

பள்ளிக் கூடங்களில் கடனே என்று சுதந்திர தினம் கொண்டாடப் படுகிறது. மனப்பாடம் செய்யப்பட்ட தேசிய கீதம், உணர்வுகள் இல்லாமல் உளரப்ப‌டுகிறது. பல கோடி மக்களுக்கு சுதந்திரம் என்பது கொலைஞர் டீவியில் சொல்வது போல் வெறும் விடுமுறை தினமாக மாறிவிட்டது.

அன்று இந்திய தேசிய காங்கிரஸ் என்கிற ஒரு அற்புதமான தன்னலமற்ற இயக்கம் ஆட்சி பொறுப்பை ஏற்றது. இன்று அது இந்திய இத்தாலிய காங்கிரஸாக மாறி நாட்டை சூரையாடிக் கொண்டிருக்கிறது. ஜாதி, மதம், இனம் என மக்களை இந்த காங்கிரஸ் அரக்கன் பிரித்து மேலும் மேலும் ஊழல்களில் உலக சாதனை புரிந்துக் கொண்டிருக்கிறது. ஜாதியால், மொழியால், மதத்தால், இனத்தால் பிரிந்துள்ள பெரும்பான்மை மக்கள், இந்த அரக்கனை ஏறெடுத்தும் பார்க்காமல் கூட்டுப் புழுக்களாய் சுருங்கி கிடக்கிறார்கள்.

வெள்ளைக்காரனிடம் பெற்ற சுதந்திரம் காலாவதியாகிவிட்டது. இந்த காங்கிரஸ் கொள்ளைக்காரர்களிடம் இருந்து நாம் பெறப்போகும் சுதந்திரமே உண்மையான சுதந்திரம். தேசப்பற்றும், தேசிய சிந்தனையும் உள்ள கட்சியை தேந்தெடுத்து நாட்டை ஒப்படைப்பதே இன்று நம் தலையாய கடமை. அவ்வாறு செய்வதன் மூலமாகவே நாம் நிஜமான விடுதலையை பெற்றோம் என்று சொல்லிக் கொள்ளலாம்.

Thanks; Enlightened master

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

வக்பு மசோதாவுக்கு எதிரான தீர்ம ...

வக்பு மசோதாவுக்கு எதிரான தீர்மானத்திற்கு பாஜக எதிர்ப்பு – பாஜக வெளிநடப்பு வக்ஃப் சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிரான தனித் தீர்மானத்துக்கு ...

ரம்ஜானுக்காக 32 லட்சம் பரிசுத்த ...

ரம்ஜானுக்காக 32 லட்சம் பரிசுத்தொகுப்பு உத்தரப்பிரதேசத்தில் ரம்ஜானை முன்னிட்டு முஸ்லிம்களுக்காக 32 லட்சம் பரிசுத் ...

நீண்ட கால காத்திருப்புக்கு பிற ...

நீண்ட கால காத்திருப்புக்கு பிறகு காஷ்மீர் முதல் ரயில் சேவையை பெறுகிறது நீண்ட காத்திருப்புக்குப் பிறகு, காஷ்மீர் பள்ளத்தாக்கு அதன் முதல் ...

பிரதமரின் ஆலோசனைக் குழுவில் மு ...

பிரதமரின் ஆலோசனைக் குழுவில் முன்னாள் ஈ டி இயக்குனர் பிரதமர் நரேந்திர மோடியின் பொருளாதார ஆலோசனைக் குழுவின் முழுநேர ...

உணர்வுடன் செயல்பட உறுதிபூணுவோ ...

உணர்வுடன் செயல்பட உறுதிபூணுவோம் – முகம்மது யூனுஸீக்கு பிரதமர் மோடி கடிதம் இந்தியா - வங்கதேசம் இடையேயான பகிரப்பட்ட வரலாற்றுக்கும், தியாகத்துக்கும் ...

பாஜக – வுக்கு ராகுல் காந்தி உத ...

பாஜக – வுக்கு ராகுல் காந்தி உதவுகிறார் – யோகி ஆதித்யநாத் ராகுல் காந்தி ஒரு 'சோதனை மாதிரி' என்றும் பாஜகவின் ...

மருத்துவ செய்திகள்

சிசுவின் வளர்ச்சியில் ஏதேனும் குறைபாடுகள் உள்ளதா என்று அறியமுடியுமா ?

சிசுவின் வள்ர்ச்சி குறைபாட்டை இருவகையாக பிரிக்கலாம் - (1) உடல் குறைபாடு ( ...

நீரிழிவுநோய் தாக்குதலுக்கு அதிக வாய்ப்புள்ளவர்கள்

தாய் அல்லது தந்தை – இருவரில் யாராவது ஒருவருக்கு நீரிழிவுநோய் இருந்தால், அவர்களுடைய ...

மிளகாயின் மருத்துவக் குணம்

பசி தூண்டியாகவும், குடல் வாயு அகற்றியாகவும் செயல்படுகிறது.