ஆயுதம் என்பதன் உண்மையான பயனை உணர்த்த தான் ஆயுதபூஜை கொண்டாடப் படுகிறது எனலாம்.
உயிர்ப் பொருள்கள், உயிரற்ற பொருட்கள் அனைத்திலும் நீக்கமற இறைபொருள் உறைந்துள்ளது. வாழ்வில் நம்உயர்வுக்கு உதவும் ஆயுதங்களை போற்றும்விதம் அவற்றையும் இறைபொருளாக
பாவித்து வணங்குவதே ஆயுத பூஜை எனவும் சொல்லலாம்.
ஆயுத பூஜையன்று சிறியகரண்டி முதல் தொழில் இயந்திரங்கள்வரை எல்லாவகை தொழில் உபகரணங்களையும் கழுவி சுத்தமாக துடைத்து தேவையெனில் வண்ணம்தீட்டி, எண்ணைப்பொட்டு வைத்து பூஜைகள் செய்து அவற்றுக்கு ஓய்வுகொடுப்பதும், பிறகு எடுத்து தொழிலுக்குப் பயன் படுத்துவதும் ஆயுத பூஜையின் சிறப்பம்சமாகும்.
ஆயுதபூஜையன்று எல்லா ஆக்கப் பூர்வமான காரியங்களுக்கு மட்டுமே இந்த உபகரணங்கள், ஆயுதங்களை பயன்படுத்துவோம், மற்ற அழிவுசெய்கைகளுக்கு பயன்படுத்தமாட்டோம் என்று உறுதி எடுத்துக் கொள்வோமே.
தொட்டாற்சுருங்கி இலைச் சாற்றை எடுத்துக் காலையிலும், மாலையிலும் தேமலின் மேல் தடவி வைத்துக் ... |
மார்புவலியைத் தணித்து, இதயத்திற்கு ஊட்டமளிப்பது மாதுளை. வயிற்று எரிச்சலை உடனடியாக குணப்படுத்துகிறது மாதுளைச் ... |
எந்த வகை விஷத்தையாவது, சாப்பிட்டு விட்டதாகத் தெரிந்தால், துளசி இலையைக் கொண்டு வந்து ... |
Leave a Reply
You must be logged in to post a comment.