கோழையகற்றியாகவும், சிறுநீர் பெருக்கியாகவும், குடல் வாயு அகற்றியாகவும் செயல்படுகிறது.
இதன் இலை, பூ, காய், பழம், விதை, வேர், சமூலம் இவையாவும் மருந்தாகப் பயன்படும். இதன் சுவை, கார்ப்பு, வெப்பம் உடையது. இதை உண்டால், கோழையகற்றும். சிறுநீர்ப்பெருக்கும். அகட்டுவாய் அகற்றி, மல நீராக்கும்.
இதன் பழம் இருமல், சுவாசம், கபம், பல்லரணை, புடை, நமை, இவைகளைப் போக்கும். பலத்தையும் பசியையுண்டாக்கும்.
இதன் இலைச் சாற்றில் அல்லது கியாழத்தில் எண்ணெய் கலந்து காய்ச்சிப் பூசிவர, தலைவலி, கீல்வாதம், அக்குள் நாற்றம் முதலியவை நீங்கும். இதன் இலை ரசத்தில், ஆளிவிதை நெய் சேர்த்துக் காய்ச்சி வெடிப்புகளில் பூச அவை வெகு சீக்கிரத்தில் மாறும்.
இதன் பழத்தை குழைய வேக வைத்துக் கடைந்து வடிகட்டி எடுத்த அளவு 4க்கு ஒன்று செய்துதான் எண்ணெயும் சேர்த்துக் காய்ச்சிக் கடுகு திரளவடித்து வைத்துக் கொண்டு, வெண்குட்டித்தின் மீது பூசிவர வெண்மை மறைந்து தேகநிற முண்டாகும்.
இதன் விதைகளை எரித்து அதனின்று எழுகின்ற புகையைப் பிடிக்க பல்வலி நீங்கும். புழுக்கள் சாகும்.
இதன் வேரை முறைப்படிக் கஷாயமிட்டு இதில் திப்பிலி சூரணமும் தேனும் சேர்த்துக் கொடுக்க இருமல் நீர் தோஷம் சுகமாகும்.
கண்டங்கத்திரி சமிலம், ஆடாதொடை வகைக்கு ஒரு கைப்பிடி, விஷ்ணுகாந்தி, பற்பாடகம் இரண்டும் சேர்த்து 1 பிடி சீரகம், சுக்கு வகைக்கு 1௦ கிராம் சிதைத்து 2 லிட்டர் தண்ணீரில் போட்டு அரை லிட்டராக சுண்டக்காய்ச்சி 4 முதல் 6 வரை 100 மி.லி வீதம் சாப்பிட புளுசுரம் நிமோனியா சுரம், மண்டைநீர் ஏற்றக் காய்ச்சல் முதலியன குணமாகும்.
கண்டங்கத்திரி பழத்தை உலர்த்தி நெருப்பில் போட்டு வாயில் புகும்படி புகைபிடிக்க பல்வலி, பல்அரணை, பல்பூச்சி நீங்கி குணம் உண்டாகும்.
கண்டங்கத்திரி இலையை 1௦ எண்ணிக்கை அளவில் எடுத்து பதமாகக் காய்ச்சி ஒரு கண்ணாடி சீசாவில் வைத்துக் கொண்டு இரவுப் படுக்கப் போகும்போது காலில் தடவிவர பித்த வெடிப்பு குணமாகும்.
நம்ம தமிழ் நாட்டுல ரசத்தையும், சாம்பாரையும் 'கமகமக்க' வைப்பதில் பெருங்காயத்தின் பங்கு அதிகம் ... |
முருங்கை இலை காம்புகளை சிறிது சிறிதாக நறுக்கி அதனுடன் சீரகம்,கறிவேப்பிலை,பூண்டு, சோம்பு, சின்ன ... |
Leave a Reply
You must be logged in to post a comment.