காங்கிரஸூக்கு அளிக்கப்பட்டுள்ள தேசியக்கட்சி அங்கீகாரத்தை ரத்துசெய்ய வேண்டும்

 தேர்தல் நடத்தை விதி முறைகளை தொடர்ந்து மீறிவரும் காங்கிரஸூக்கு அளிக்கப்பட்டுள்ள தேசியக்கட்சி அங்கீகாரத்தை ரத்துசெய்யக் கோரி, தேர்தல் ஆணையத்திடம் பாஜக துணைத் தலைவர் முக்தார் அப்பாஸ்நக்வி தலைமையிலான குழுவினர் முறையிட்டுள்ளனர்.

அவர்கள் அளித்த புகார் மனுவில் கூறியிருப்பது:

கடந்த 16ம்தேதி நடைபெற்ற, சத்தீஸ்கர் பேரவைத்தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பேசிய காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி, பாஜக.,வினரைத் திருடர்கள் என்றும், கொள்ளையர்கள் என்றும் தரக் குறைவாகப் பேசினார்.

அதே போல, கடந்த 17ஆம் தேதி தில்லியில் நடைபெற்ற தேர்தல்பிரசாரக் கூட்டத்தில் பேசுகையில், கர்நாடகத்திலும், மகாராஷ் டிரத்திலும் சமூகரீதியான பதற்றத்தை பா.ஜ.க ஏற்படுத்தியது என்றுவிமர்சித்தார்.

சத்தீஸ்கரில் கடந்த மே 25ஆம் தேதி மாவோயிஸ்டுகள் நடத்தியதாக்குதலில் மாநில காங்கிரஸ் தலைவர் நந்தகுமார் படேல் உள்பட அந்தக்கட்சியின் பல தலைவர்கள் உயிரிழந்தனர். இந்தச்சம்பவத்துக்கு நக்ஸலைட்டுகள் தான் முழுப் பொறுப்பு. ஆனால், இந்த சம்பவத்துக்கு பாஜக.,தான் காரணம் என்பது போல ராகுல்காந்தி பேசி வருகிறார்.

இப்படி பா.ஜ.க மீது எந்த ஆதாரமும் இல்லாத, பொய்யான, அவதூறானபுகார்களை அவர் பரப்பிவருகிறார். அவரது இத்தகைய தரம்குறைந்த பேச்சுக்கு அவர் சார்ந்த காங்கிரஸ் கட்சி எதிர்ப்புதெரிவித்திருக்க வேண்டும். கண்டித்திருக்க வேண்டும். ஆனால், மாறாக அவரதுபேச்சை ஊக்குவிக்கும் வகையில் ஆதரித்துவருகிறது.

ராகுல்காந்தியின் பொய்யான பிரசாரத்தால் பாஜக குறித்து மக்கள்மனதில் தவறான எண்ணம் உருவாக வாய்ப்புள்ளது. அவரது பொறுப்பற்றபிரசாரம் தேர்தல் ஆணையத்தை அவமதிப்பதாகவும் உள்ளது. எனவே, தொடர்ந்து தேர்தல்நடத்தை விதிமுறைகளை மீறிவரும் காங்கிரஸ் கட்சிக்கு அளிக்கப்பட்டுள்ள தேசியக்கட்சி அங்கீகாரத்தை தேர்தல் ஆணையம் ரத்துசெய்ய வேண்டும்.

அந்தக்கட்சிக்கு எதிராக நடவடிக்கை எடுக்க இதுவே சரியானதருணம் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பா,ஜ,க,,வின் பிரதமர்வேட்பாளர் நரேந்திர மோடியை பொய்யர் என்று சித்திரிக்கும்வகையில், மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ்கட்சி விளம்பர பலகைகளை வைத்துள்ளது. அதில், “மோடியின் பொய்களை ரசிக்கமட்டும் செய்யுங்கள்; வாக்குகளை காங்கிரஸக்கு அளியுங்கள்’ என்றவாசகமும் இடம் பெற்றுள்ளது.

இந்நிலையில், இந்த விளம்பரத்தின் புகைப் படத்தையும் தலைமைத்தேர்தல் ஆணையரை சந்தித்த போது அதை அளித்து நடவடிக்கை எடுக்கக்கோரினர்.

இதைத் தொடர்ந்து, முக்தார் அப்பாஸ்நக்வி செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது சத்தீஸ்கர் மாநில தேர்தல் பிரசாரக்கூட்டதில் நரேந்திரமோடி பேசுகையில், “ரத்தக் கறை படிந்த கரம் சத்தீஸ்கரில் ஆட்சிக்கு வந்துவிடக்கூடாது. அதற்கு மக்கள் இடமளிக்க கூடாது’ என்று பேசினார்.

அவர் யாரையும் தனிப்பட்டரீதியில் விமர்சிக்கவில்லை. காங்கிரஸ் சின்னத்தையே (“கை’) விமர்சித்தார். இது குறித்து தேர்தல் ஆணையத்துக்கு தெளிவுபடுத்தி விட்டோம். தேர்தல்பிரசாரத்தில் எந்த ஒருகட்சியின் சின்னத்தை விமர்சிப்பதில் தவறில்லை.

காங்கிரஸ் விரும்பினால் பா.ஜ.க.,வின் சின்னத்தையும் விமர்சிக்கட்டும். அதற்கு அந்தக்கட்சிக்கு சுதந்திரம் உண்டு என்றார் முக்தார் அப்பாஸ்நக்வி.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

நாட்டில் ஊழலை முற்றிலும் ஒழிக் ...

நாட்டில் ஊழலை முற்றிலும் ஒழிக்க பாஜக உறுதிபூண்டுள்ளது மக்களிடம் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட பணத்தை திரும்பக் கொண்டு வருவதற்காக ...

ஆளுநராக இருந்த நான், உங்கள் அக் ...

ஆளுநராக இருந்த நான், உங்கள் அக்காவாக வந்திருக்கின்றேன் நாடாளுமன்ற தேர்தலில் பாஜக சார்பில் தென்சென்னை தொகுதியில் தமிழிசை ...

டீ குடிப்பது என்றாலும் சொந்தக் ...

டீ குடிப்பது என்றாலும் சொந்தக்காசில் குடிப்போம் 2019 தேர்தலில் அளித்த 295 வாக்குறு திகளையும் பாஜக ...

கன்னியாகுமரி மாவட்டத்தில் 48 ஆய ...

கன்னியாகுமரி மாவட்டத்தில் 48 ஆயிரம் கோடிக்கான திட்டங்களை  கொண்டுவந்துள்ளோம் தமிழகத்தில் அமைந்துள்ள தேசிய ஜனநாயக கூட்டணியின் வெற்றி, தமிழகத்தினுடைய ...

ஒரு லட்சம் பெண்களுக்கு வேளாண் ப ...

ஒரு லட்சம் பெண்களுக்கு வேளாண் பணி சார்ந்த ட்ரோன் மத்திய அரசு சார்பில் கடந்த2022-ம் ஆண்டு ‘நமோ ட்ரோன் ...

மருத்துவ செய்திகள்

தலை முடி உதிர்வதை தடுக்க குறிப்புகள்

முடி அதிகம் கொட்டினால் உணவில் அதிகம் முருங்கைகீரைக்கு அதிகம் இடம் கொடுங்கள்.இரும்பு சத்து ...

புற்றுநோய்க்கான மருத்துவம்

பெண்களுக்கு கருப்பையில் ஏற்படும் புற்றுநோயை குணமாக்கும் வழி பெண்களுக்கு கருப்பையில் புற்று நோய் ஏற்பட்டு ...

முருங்கை கீரை , முருங்கை கீரையின் மருத்துவ குணம்

முருங்கை கீரையால் உட்சூடு, மந்தம், தலைநோய், மூர்ச்சை, வெறிநோய், கண்ணோய் போன்ற நோய்கள் ...