பாராளுமன்ற தேர்தலைமுன்னிட்டு வேட்பாளர்களை தேர்வுசெய்வதில் பாஜக தீவிரம்

 பாராளுமன்ற தேர்தலைமுன்னிட்டு தனது கட்சிசார்பில் போட்டியிடவிருக்கும் வேட்பாளர்களை தேர்வுசெய்வதில் பாஜக இப்போதே மும்முரம்காட்டி வருகிறது.

பாராளுமன்றத்தின் பதவிக் காலம் வருகிற மேமாதம் 31ம் தேதியுடன் முடிவடைவதால் ஜூன் 1ம் தேதி புதிய அரசு பதவி ஏற்றாகவேண்டும். இந்த தேர்தலுக்கு இன்னும் 5மாதங்களே உள்ளன. தேர்தலுக்கான ஏற்பாடுகளை தலைமைதேர்தல் கமிஷனும் தொடங்கிவிட்டது. மாணவர்களின் தேர்வுமுடிந்த பின்னர் ஏப்ரல்_மே மாதம் வாக்கில் நாடுமுழுவதும் 7 கட்டங்களாக தேர்தலை நடத்திமுடிக்க ஆணையம் திட்டமிட்டுள்ளது. தேர்தல் ஏற்பாடுகள் குறித்து மாநிலவாரியாக தேர்தல் அதிகாரிகளின் ஆய்வுக் கூட்டமும் தற்போது நடத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில் பா.ஜ.க., பாராளுமன்ற தேர்தல்பணிகளை தொடங்கிவிட்டது. 5 மாநிலதேர்தலில் 3 மாநிலங்களை பாஜக கைப்பற்றிவிட்ட நிலையில் பாராளுமன்ற தேர்தலிலும் இந்தவெற்றி தொடரவேண்டும் என்று பாஜக தீவிரமாக செயல்பட்டு வருகிறது .

அதனால் வேட்பாளர்தேர்வில் மிகுந்த கவனம்செலுத்த பாஜக. முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக மாநில வாரியாக கட்சி பொறுப்பாளர்களுடன் கட்சிதலைவர் ராஜ்நாத்சிங் பொதுச் செயலாளர் ராம்லால் ஆகியோர் வேட்பாளர்தேர்வு மற்றும் கூட்டணி தொடர்பாக ஆலோசனை நடத்துகிறார்கள். அடுத்த 4 நாட்களுக்கு இந்தகூட்டங்கள் நடைபெறும். இந்நிலையில் பாஜக மத்தியதேர்தல் கமிட்டி கூட்டம் வருகிற 24ம் நடக்கிறது. இதில் வேட்பாளர்கள் மற்றும் கூட்டணி குறித்து இறுதிசெய்யப்படும். இந்த பணிகள் எல்லாம் முடிந்ததும் ஜனவரி 3வது வாரத்தில் பாஜக தேசியசெயற்குழு டெல்லியில்கூடி அடுத்தக்கட்ட ஆலோசனையில் ஈடுபடும். பாஜக. பிரதமர்வேட்பாளர் நரேந்திரமோடி பிப்ரவரி மாதமே பிரசாரத்தில் குதிக்கிறார். உபி.,யில் தொடங்கி நாடுமுழுவதும் 100_க்கும் அதிகமான தேர்தல்பிரசார கூட்டங்களில் அவர் பேசுகிறார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

நிலவேம்புவின் மருத்துவக் குணம்

காய்ச்சல் அகற்றியாகவும், பசி உண்டாக்கியாகவும், தாது பலம் உண்டாக்கியாகவும் செயல்படுகிறது.

தர்ப்பூசணியின் மருத்துவக் குணம்

வயிறு எரிச்சல், அடிவயிற்றுக் கோளாறுகளை உடனடியாகச் சரி செய்யும். சிறுநீரகக் கோளாறுகளையும், சிறுநீர்ப்பைக் ...

பள்ளி செல்லுகின்ற குழந்தைகளுக்கான உணவு

பள்ளிக்குச் செல்லுகின்ற குழந்தைகளுக்கு நல்ல சத்தான ஆரோக்கியமான உணவு கிடைத்தால்தான் அந்தக் குழந்தைகள் ...