முசாஃபர் நகரில் லஷ்கர்-இ தொய்பா

 பாகிஸ்தானை சேர்ந்த லஷ்கர்-இதொய்பா பயங்கரவாத இயக்கத்தினர் தங்களது இயக்கத்துக்கு ஆள்சேர்ப்பதற்காக, உத்தரப் பிரதேசத்தில் அண்மையில் கலவரம் நடந்த முசாஃபர் நகரில் உள்ளவர்களைத் தொடர்புகொண்டதாக தில்லி போலீஸார் தெரிவித்துள்ளனர்.

தில்லி காவல் துறை பயங்கரவாதிகள் தடுப்புப்பிரிவின் சிறப்பு ஆணையர் எஸ்என். ஸ்ரீவாஸ்தவா செய்தியாளர்களிடம் செவ்வாய்க் கிழமை இதுபற்றி கூறியதாவது:

முசாஃபர் நகரில் வசித்துவரும் ஜமீர், லியாகத் ஆகிய இருஇளைஞர்களை தில்லி போலீஸார் அண்மையில் கைதுசெய்தனர். மசூதிகட்டுவதற்கு பணம் சேர்ப்பதாக கூறிக்கொண்டு இருவரும் ஆள்கடத்தல், வழிப்பறி ஆகியசெயல்களில் ஈடுபட்டு வந்துள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

இவர்கள் இருவர் உள்ளிட்ட முசாஃபர் நகர்வாசிகள் சிலரிடம், இந்தியாவுக்கு எதிராக நாச வேலையில் ஈடுபட வேண்டும் என்று அடையாளம் தெரியாதநபர்கள் மூளைச்சலவை செய்ய முயன்றதாக கூறப்படுகிறது. குறிப்பாக, தங்களுக்கு ஒத்துழைப்பாக நடந்துகொண்டால் செல்வச்செழிப்புடன் கூடிய வசதிகள் செய்துதரப்படும் என்று ஆசைவார்த்தைகளை சில நபர்கள் கூறியுள்ளதாக ஜமீரும், லியாகத்தும் விசாரணையில் தெரிவித்துள்ளனர். இவர்களிடம் விசாரணை நடத்திய பிறகு தில்லி பாடியாலா நீதிமன்ற வளாகத்தில் உள்ள மாஜிஸ்திரேட் முன்னிலையில் வாக்கு மூலம் பதிவுசெய்யப்பட்டது என்றார்.

இதுபற்றி பா.ஜ.க தேசிய தலைவர் ராஜ்நாத்சிங் கூறுகையில், இது தேசிய முக்கியத்துவம் வாய்ந்த பிரச்னை. ஆகையில் இந்தவிவகாரம் குறித்து முழுமையான விசாரணைதேவை” என்றார்.

பா.ஜ.க செய்தித்தொடர்பாளர் பிரகாஷ் ஜாவடேகர் கூறுகையில், பாகிஸ்தானின் உதவிபெறும் லஷ்கர்-இ-தொய்பா அமைப்பு, எந்த அளவுக்கு உத்தரப்பிரதேசத்தில் வேறூன்றியிருக்கிறது என்பது இதன்மூலம் தெளிவாகியுள்ளது. இது ஒரு தேசியபிரச்னை. இந்த விவகாரத்தில் இதுவரை யாரும் கைதுசெய்யப்படவோ, கண்டுபிடிக்கப்படவோ இல்லை. இது ஏற்றுக்கொள்ளப்பட முடியாதது” என்று கூறினார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

தியானம் ஏன் வேண்டும்?

ஆன்மீகக் கண்ணோட்டத்தை ஒதுக்கிவிட்டுப் பார்த்தால் கூட தியானம் முதன்மைத் தன்மை வாய்ந்த வாழ்வியல் ...

ஆகாச கருடன் கிழங்கு

கோவைக்கொடி இனத்தை சேர்ந்த இந்தமூலிகைக்கு பொதுவாக கருடன் கிழங்கு, பேய் சீந்தில், ...

கருத்தரித்த முதல் 3 மாதங்களில் என்ன செய்யலாம், என்ன செய்யக் கூடாது ?

கருத்தரிப்பு என்பது வியாதியில்லை. அது ஒரு உடல் ரீதியான மாற்றம். இதைச் ...