உ.பி.,யில் பெண்களுக்கு எதிரான வன் கொடுமைகள் அதிகரித்து வரும் நிலையில் இது குறித்து கருத்து தெரிவித்துள்ள ஆளுநர் அஜிஸ் குரேஷி, கடவுளால் கூட பலாத்கார சம்பவங்களை தடுத்து நிறுத்தமுடியாது என்று தெரிவித்து சர்ச்சையில் சிக்கியுள்ளார் .
சமீபத்தில் லக்னோவின் மோகன்லால் கங் பகுதியில் 35 வயது பெண் கொடூரமாக பலாத்காரம் செய்யப்பட்டு, கொலைசெய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக முதல்வர் அகிலேஷ் யாதவ், ஆளுநரை சந்தித்து ஆலோசனை நடத்தியபிறகு இந்த கருத்தை வெளியிட்டுள்ளார்.
“பலாத்காரம் போன்ற குற்றங்களுக்காக அரசாங்கத்தை ஊடகங்கள் கண்டிக்கக்கூடாது. உத்தர பிரதேசத்தில் இத்தகைய குற்றங்களை ஆண்டவனால் கூட தடுத்து நிறுத்த முடியாது. உலகம் முழுவதிலும் இருந்து போலீசாரை கொண்டு வந்து உத்தர பிரதேசத்தில் குவித்தாலும் அவர்களால் பலாத்கார சம்பவங்களை தடுக்கமுடியாது என்றும் அவர் குறிப்பிட்டார். அவரது கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இவரது பேச்சுக்கு பாஜக., கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இவர் நேற்றுடன் (21.07.20#14) பதவி விலகுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த சிலநாட்களுக்கு முன்னர் முதல்வர் அகிலேஷ் தந்தையான சமாஜ்வாதி கட்சியின் தலைவர் முலாயம் சிங், பலாத்காரம் என்பது உபி., மக்கள் தொகையை பார்க்கும்போது குற்றச்செயல்கள் அளவு குறைவுதான் என்றார். இவருக்கு ஆதரவாக இவரதுகட்சி எம்.பி,. ஒருவர் கூறுகையில், பலாத்காரம் வறுமை காரணமாகவும், மக்கள்தொகை அதிகரிப்பு காரணமாகவும் நடக்கிறது என்றார். இதுபோல் மற்றொரு கட்சி நிர்வாகியான ஒருவர், பலாத்காரம் முன் கூட்டியே தடுத்துவிட முடியாது. இதுகுறித்து யாருக்கும் முன்கூட்டியே தகவல்கள் கிடைப்பதில்லை என்றார்.
உடல் கொழுப்பு குறைந்து மெலிய விரும்புவர்களுக்கு பரிந்துரைக்கபடும் உணவு வகையில் முதன்மையாக இடம் ... |
காய்ச்சல் அகற்றியாகவும், பசி உண்டாக்கியாகவும், தாது பலம் உண்டாக்கியாகவும் செயல்படுகிறது. |
100 எறுக்கம் பூக்களை எடுத்து அதை நன்றாக உலர்த்தி, லவங்கம், சாதிக்காய், சாதிப்பத்திரி ... |
Leave a Reply
You must be logged in to post a comment.