அனைவருக்கும் வங்கிகணக்கு தொடங்கும் திட்டத்தை 28ந் தேதி டெல்லியில் பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்.
பிரதமர் நரேந்திர மோடி சுதந்திர தின உரையில், 'பிரதான் மந்திரி ஜன்–தான் யோஜனா' (பிரதமர் மக்கள்–நிதி திட்டம்) என்ற திட்டத்தை அறிவித்திருந்தார். நாட்டில் உள்ள அனைவருக்கும் வங்கிகணக்கு தொடங்குவதை இத்திட்டம் நோக்கமாக கொண்டது.
இத்திட்டத்தை 28ந் தேதி டெல்லியில் நடைபெறும் நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திரமோடி தொடங்கி வைக்கிறார். அதேநாளில் இத்திட்டம் நாடுமுழுவதும் தொடங்கி வைக்கப்படும்.
மாநில, மாவட்ட அளவில் நடைபெறும் தொடக்க நிகழ்ச்சிகளில், மத்திய மந்திரிகள் கலந்துகொண்டு தொடங்கி வைப்பார்கள்.
மேலும், அனைவருக்கும் வங்கிகணக்கு அளிப்பதற்காக, கிளைகள் தோறும் வங்கிகள்சார்பில் முகாம்கள் நடத்தப்படும்.
இத்திட்டத்தின் கீழ், வங்கிகணக்கு தொடங்குவதற்கு 'ஆதார்' அட்டை இருந்தால், வேறு ஆவணங்கள் தேவையில்லை. வங்கிகணக்கு தொடங்கிய பிறகு, அவர்களுக்கு ஏ.டி.எம். கார்டு வழங்கப்படும். அதைவைத்து நாடு முழுவதும் உள்ள ஏடிஎம்.களில் பணம் எடுத்துக்கொள்ளலாம்.
ஒரு லட்சம் ரூபாய்க்கான விபத்துகாப்பீடும் வழங்கப்படும். ஓய்வூதியம், காப்பீடு போன்ற வசதிகளும் அளிக்கப்படும். மத்திய, மாநில அரசுகள் அளிக்கும் நிதி உதவிகளை, வங்கிகணக்கு மூலம் பெற்றுக்கொள்ளலாம்.
இந்த திட்டம் குறித்து அனைத்து வங்கி அதிகாரிகளுக்கும் பிரதமர் நரேந்திர மோடி இமெயில் மூலம் ஒரு கடிதம் அனுப்பி உள்ளார். அதில் அவர் கூறி இருப்பதாவது:–
நாடுமுழுவதும் 7 கோடி குடும்பத்தினருக்கு நாம் வங்கிகணக்கு தொடங்கவேண்டும். இதை தேசிய முன்னுரிமை பணியாக கருதவேண்டும். இது கடினமான பணியாக இருந்தாலும், இந்த சவாலை சந்திக்கவேண்டும்.
இன்னும் பலருக்கு வங்கிகணக்கு இல்லாததால், வளர்ச்சிபணிகள் பாதிக்கப்படுகின்றன. ஆகவே, இதை அவசரபணியாக கருதி செய்ய வேண்டும். நாட்டில் வங்கி கணக்கு இல்லாதவர்கள் யாரும் விடுபடாதவாறு தாங்கள் பணியாற்ற வேண்டும்.
வங்கிகணக்கு இருந்தால், கடன் வசதியை பெற்று, அந்தமக்கள், வட்டிக்கு பணம் கொடுப்பவர்களின் பிடியில் இருந்து விடுபடுவார்கள்.என்று பிரதமர் மோடி கூறியுள்ளார்.
டீ குடிப்பதினால் சில வகை புற்று நோய்களும், இதய நோய்களும் ஏற்படுவதற்க்கான வாய்ப்புகள் ... |
குடல் வாயு அகற்றியாகவும், பசி தூண்டியாகவும் நுண்புழுக் கொல்லியாகவும் செயல்படுகிறது. |
சுக்கு, மிளகு, திப்பிலி போல இந்த வசம்பு முக்கிய இடத்தைப் பெற்ற மருந்துப் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.