NPS வாத்சலயா திட்டத்தை நிர்மலா சீதாராமன் தொடங்கி வைத்தார்

மத்திய பட்ஜெட் 2024-25 அறிவிப்பைத்தொடர்ந்து, மத்திய நிதி பெருநிறுவனங்கள் விவகாரங்கள் துறை அமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன், 2024 செப்டம்பர் 18 அன்று புதுதில்லியில் என்பிஎஸ் வாத்சல்யா திட்டத்தை தொடங்கி வைக்கிறார். இந்த தொடக்க  விழாவில் பள்ளி மாணவர்களும் கலந்து கொள்வார்கள்.

என்பிஎஸ் வாத்சல்யாவுக்கு சந்தா செலுத்துதல், திட்ட சிற்றேட்டை வெளியிடுதல் மற்றும் புதிய இளம் சந்தாதாரர்களுக்கு நிரந்தர ஓய்வூதிய கணக்குஎண் அட்டைகளை விநியோகிப்பதற்கான ஆன்லைன் தளத்தையும் மத்திய நிதியமைச்சர் தொடங்கி வைப்பார்.

புதுதில்லியில் இத்திட்டம் தொடங்குவதன் ஒரு பகுதியாக, என்.பி.எஸ் வாத்சல்யா நிகழ்ச்சிகள் நாடு முழுவதும் கிட்டத்தட்ட 75 இடங்களில் ஒரே நேரத்தில்ஏற்பாடு செய்யப்படும். மற்ற இடங்கள் காணொலிக் காட்சி மூலம் தொடக்க நிகழ்ச்சியில் இணையும். மேலும், அந்த இடத்தில் புதிய இளம் சந்தாதாரர்களுக்கு நிரந்தர ஓய்வூதிய கணக்கு எண் உறுப்பினர்அட்டை விநியோகிக்கப்படும்.

என்பிஎஸ் வாத்சல்யா திட்டம் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளின் எதிர்காலத்திற்காக ஓய்வூதிய கணக்கில் முதலீடு செய்வதன் மூலம் சேமிக்க முடியும். குழந்தையின் பெயரில் பெற்றோர்கள் ஆண்டுதோறும் ரூ.1,000 முதலீடு செய்ய அனுமதிக்கிறது,இது அனைத்து பொருளாதார பின்னணியிலிருக்கும் குடும்பங்களுக்கு ஏற்றதாக உள்ளது.

இந்த புதிய முயற்சி குழந்தைகளின் நிதி எதிர்காலத்தை பாதுகாப்பதில் விரைவில் தொடங்க வடிவமைக்கப்பட்டுள்ளது. இது இந்தியாவின் ஓய்வூதியஅமைப்பில் ஒரு முக்கியமான படிநிலையைக் குறிக்கிறது. இந்த திட்டம் ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையத்தின் கீழ் நடத்தப்படும்.

என்பிஎஸ் வாத்சல்யாவின் தொடக்கம், அனைவருக்கும்நீண்டகால நிதித் திட்டமிடல் மற்றும் பாதுகாப்பை ஊக்குவிப்பதற்கான மத்திய அரசின் உறுதிப்பாட்டைஎடுத்துக்காட்டுகிறது. இந்தியாவின் எதிர்கால சந்ததியினரை நிதி ரீதியாக பாதுகாப்பாகவும் சுதந்திரமாகவும் மாற்றுவதற்கான ஒரு பெரிய நடவடிக்கையாகும்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

”உலகின் எந்த மூலையில் இருந்தா ...

”உலகின் எந்த மூலையில் இருந்தாலும் பயங்கரவாதிகளை வேட்டையாடுவோம்” – பிரதமர் மோடி ''உலகின் எந்த மூலையில் இருந்தாலும் பயங்கரவாதிகளை வேட்டையாடுவோம்'' என ...

பயங்கரவாததாக்குதல் உலக தலைவர் ...

பயங்கரவாததாக்குதல் உலக தலைவர்கள் கண்டனம் கவலை அளிக்கிறது! காஷ்மீரில் இருந்து வரும் செய்தி கவலை அளிக்கிறது. ...

பிரதமர் மோடிக்கு ஆறுதல் சொன்ன அ ...

பிரதமர் மோடிக்கு ஆறுதல் சொன்ன அமெரிக்க துணை அதிபர் ஜேடி வான்ஸ் நான்கு நாட்கள் அரசு முறை பயணமாக நம் நாட்டுக்கு ...

துவங்கியது பயங்கரவாதிகளுக்கு ...

துவங்கியது பயங்கரவாதிகளுக்கு எதிரான வேட்டை; பிரதமர் மோடி தலைமையில் ஆலோசனை சவுதி அரேபியாவில் இருந்து நேற்று டில்லி திரும்பிய பிரதமர் ...

பாகிஸ்தானுடன் உறவு துண்டிப்பு & ...

பாகிஸ்தானுடன் உறவு துண்டிப்பு – தாக்குதலுக்கு தயாராகிறது இந்தியா பஹல்காம் பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து, பாக்., உறவை துண்டித்துக் ...

பயங்கரவாத தாக்குதலுக்கு விரைவ ...

பயங்கரவாத தாக்குதலுக்கு விரைவில் பதிலடி – ராஜ்நாத் சிங் ஜம்மு - -காஷ்மீரின் அனந்தநாக் மாவட்டம் பஹல்காமில் உள்ள ...

மருத்துவ செய்திகள்

மிகவும் மெலிந்து காணப்படுகிறவர்களுக்கு உணவு முறை

அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டியவை: இனிப்பு சேர்க்கப்பட்ட பழ ரசங்கள்; பால் சம்பந்தப்பட்ட உணவுகள்; ...

எருக்கின் மருத்துவக் குணம்

இதன் இலையை வதக்கி கட்டிகளுக்குக்கட்ட அவை பழுத்து உடையும். செங்கல்லை பழுக்க காய்ச்சி ...

உறக்கத்தின் முக்கியத்துவம்

மனிதனுக்குக் கிடைத்த மிகப் பெரிய நன்மைகளில் உறக்கம் ஒன்றாகும். ஆழ்ந்த உறக்கம் உடலுக்கு ...