தஞ்சை மாவட்டம், அதிராம்பட்டினம் அருகே இருக்கும் புதுப்பட்டினம் கிராமத்தில் இந்துக்கள் வழிபடுவதற்காக 400ஆண்டுகள் பழமையான புகழ் பெற்ற சிவன்கோவில் ஒன்று உள்ளது. அதன்-அருகிலேயே சுமார் 100மீட்டர் தூரத்திற்க்குள் பள்ளிவாசல் கட்டப்பட்டுள்ளது.
இந்நிலையில் இந்துக்கள் இந்து முன்னணியை-வைத்து கடந்த சில
நாட்களுக்கு முன்பாக கூட்டம் நடத்தி கொடி ஏற்றினர், இந்த நிலையில் கடந்த மூன்று நாட்களுக்கு முன்பாக இந்து முன்னணியின் கொடிக் கம்பம் வெட்டி சாய்க்கப்பட்டு, கொடி அறுக்கப்பட்டு இருந்ததால், இஸ்லாமியர்கள் மீது இந்துக்கள் புகார் கொடுத்தனர். இந்நிலையில் இந்துக்கள் திண்டுக்கல் சிவன் கோவிலில் ஆலோசனைக்கூட்டம் நடத்தியுள்ளனர்.
கூட்டம் முடிந்து வெளியே வந்தபோது, அங்கு வந்த வெளியூர் இஸ்லாமியர்கள் சிலர், கூட்டம் முடிந்து வெளியே வந்தவர்கள் மீது தாக்கியதில், ஊராட்சி மன்ற தலைவருகு பலத்த அடி-விழுந்தது. அவரின் இருசக்கர வாகனம் சேதப்படுத்தபட்டது. ரவி, ராஜ்குமார், சுப்பையன் மேலும் சிலருக்கு காயம் ஏற்பட்டதால் அவர்கள் பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த மோதல் தொடர்ந்ததால் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் தஞ்சை மாவட்ட பாரதிய ஜனதா தலைவர் முரளிகணேஷ் உளப்பட 37 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது
தினமும் கடுக்காய்ச் சூரணம் செய்து வைத்துக்கொண்டு, உணவுக்குப் பின் திரிகடியளவு சுடுநீரில் கலந்து ... |
மரம் , செடி, கொடி, புல், பூண்டு என்று இயற்கையின் கொடையான அனைத்து ... |
ஒழுங்கான உடற்பயிற்சியாலும் ஆரோக்கியமான உணவு முறையாலும் கிடைக்கும் நன்மைகள் • சிறந்த ஆரோக்கியம் • பார்ப்பதற்கும், உணர்வதற்கும் |
Leave a Reply
You must be logged in to post a comment.