பிடிஆர் மீது வழக்கு பதிவு செய்ய கோரி பாஜக புகார் மனு

மதுரை விமான நிலைய சம்பவம் தொடர்பாக நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன்மீது வழக்குப் பதிவு செய்யக்கோரி பாஜக சார்பில் போலீஸில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

மதுரை உசிலம்பட்டியைச் சேர்ந்த ராணுவவீரர் லெட்சுமணன். காஷ்மீரில் நடந்த தீவிரவாத தாக்குதலில் கொல்லப்பட்ட அவரது உடல் மதுரை விமான நிலையத்துக்கு இன்று (ஆக.13) கொண்டு வரப்பட்டது. விமான நிலையத்தில் லெட்சுமணன் உடலுக்கு தமிழக அரசு சார்பில் நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாக ராஜன், மதுரை மாவட்ட ஆட்சியர் ஆகியோர் மலர்வளையம்வைத்து அஞ்சலி செலுத்தினர்.

இந்த நிகழ்வுமுடித்து விமான நிலையத்தை விட்டு சென்ற அமைச்சர் கார்மீது அங்கிருந்த பாஜகவினர் திடீர் தாக்குதல் நடத்தினர். பெண் ஒருவர் காலணியை எடுத்து அமைச்சர் காரின்மீது வீசினர். அந்தக் காலணி, காரின் முன் கண்ணாடியில் விழுந்தது. சிலர் காரை கைகளால் ஓங்கி தட்டினர். அவர்களை போலீஸார் அப்புறப்படுத்தினர்.

இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாக ராஜன் மீது வழக்கு பதிவு செய்யக்கோரி பாஜக சார்பில் மதுரை மாநகர் காவல் ஆணையரிடம் புகார் அளிக்கபட்டுள்ளது.

இதுதொடர்பாக மதுரை மாநகர் மாவட்ட பாஜக பொருளாளர் ஜி.ராஜ்குமார், மதுரை மாநகர் காவல் ஆணையரிடம் அளித்துள்ள புகார் மனுவில் கூறியிருப்பதாவது: மதுரைவிமான நிலையத்தில் ராணுவ வீரர் உடலுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக வந்த பாஜக தலைவர் அண்ணாமலை, மதுரை மாநகர் தலைவர் சரவணன் ஆகியோரை அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் மிகவும் மரியாதைக் குறைவாக பேசியுள்ளார்.

அங்கிருந்த அதிகாரிகளிடம், ‘அஞ்சலி செலுத்த இவர்களுக்கு (பாஜக தலைவர்களுக்கு) என்ன தகுதியுள்ளது. இவர்களை யார்விமான நிலையத்துக்குள் விட்டது’ எனக் கேட்டுள்ளார். இதனை விமான நிலையத்துக்கு வெளியே நின்றிருந்த பாஜக.,வினர்க்கு தெரியவர அஞ்சலி செலுத்திவிட்டு திரும்பி சென்ற அமைச்சரின் காரை நிறுத்தி பாஜகவினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அப்போது அமைச்சரின் கார் ஓட்டுநர், பாஜகவினர் மீது காரை ஏற்றுவதுபோல் சென்றுள்ளார். அமைச்சரின் பாதுகாப்புக்காக வந்திருந்த போலீஸாரும் பாஜகவினர் மீது தடியடி நடத்தி யுள்ளனர்.

அமைச்சரின் தூண்டுதல்பேரில் திமுகவினரும், போலீஸாரும் பாஜகவினர் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில் பாஜகவினர் பலர் காயமடைந் துள்ளனர். இதனால் அமைச்சர் மற்றும் திமுகவினர் மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று அந்தப் புகார் மனுவில் கூறப்பட்டுள்ளது.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

இந்தியாவில் முதலீடு செய்வது லா ...

இந்தியாவில் முதலீடு செய்வது லாபகரமானது – புதின் மாஸ்கோரஷ்யாவின் மாஸ்கோவில் நேற்று நடந்த முதலீட்டு அமைப்பின் கூட்டத்தில், ...

மேக் இந்த இந்தியா திட்டம் -இந்த ...

மேக் இந்த இந்தியா திட்டம் -இந்தியாவுக்கு ரஷ்ய அதிபர் பாராட்டு சிறு,குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் ...

உலகின் சாமர்த்தியமான தலைவர்கள ...

உலகின் சாமர்த்தியமான தலைவர்களில் பிரதமர் மோடியும் ஒருவர் குவைத் வெளியுறவுத்துறை அமைச்சர் புகழாரம் உலகில் உள்ள சாமர்த்தியமான தலைவர்களில் பிரதமர் மோடியும் ஒருவர் ...

பல்லாவரம் கழிவு நீர் சம்பவம் கு ...

பல்லாவரம் கழிவு நீர் சம்பவம் குறித்து அண்ணாமலை கேள்வி பல்லாவரம் உட்பட்ட பகுதிகளில் 20க்கும் மேற்பட்டோருக்கு வாந்தி , ...

மத்திய அரசு மீது வெளிநாட்டு நித ...

மத்திய அரசு மீது வெளிநாட்டு நிதியின் கீழ் அவதூறு பரப்புவதாக புகார் மத்தியஅரசு மீது வெளிநாட்டு நிதி உதவியின் கீழ் அவதூறு ...

ராகுல் காந்தி ஒரு நப்பிக்கை துர ...

ராகுல் காந்தி ஒரு நப்பிக்கை துரோகி – சம்பித் பத்ரா விமர்சனம் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை துரோகி என்று பாஜக ...

மருத்துவ செய்திகள்

எள்ளுச் செடியின் மருத்துவக் குணம்

கண்ணில் எப்பொழுதும் எரிச்சல் இருந்து கொண்டே இருக்கும். அப்பொழுது எள்ளுப் பூவைக் கொண்டுவந்து, ...

சர்க்கரை நோயாளிகளின் காயங்களை ஆற்றக்கூடிய மருந்து தேன்

சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்ப்படும் காயங்கள் சீக்கிரத்தில் ஆறுவதில்லை. ஆனால் தற்ச்சமயம் விஞ்ஞானிகள் வெளியிட்டிருக்கும் ...

தியானம் என்றால் என்ன?

தியானம் என்றால் எண்ணுதல் அல்லது நினைத்தல் என்று பொருளாகும். மனம் ஒரே பொருளின் மேலேயே ...