தேசிய பாதுகாப்பு படையினரை ( கறுப்பு பூனை படை), வி.ஐ.பி.களுக்கு பாதுகாப்பு வழங்கும் பணியிலிருந்து முற்றிலுமாக விடுவித்து, பயங்கரவாதத்துக்கு_எதிரான நடவடிக்கைகளில் ஈடுபடுத்த, மத்திய அரசு திட்டமிட்டு உள்ளது.
தேசிய பாதுகாப்பு படை டைரக்டர் ஜெனரல் ஆர் கே மேத்கர் தெரிவித்ததாவது :
உள்நாட்டு பாதுகாப்பு பணிகளில் தேசிய பாதுகாப்பு படையினரை முழுவீச்சில் ஈடுபடுத்த திட்டமிடப்பட்டு இருக்கிறது . குறிப்பாக, தீவிரவாதத்துக்கு எதிரான வேளைகளில் அவர்களை முழுவீச்சில் ஈடுபடுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. எனவே வி.ஐ.பி.களுக்கு பாதுகாப்பு வழங்கும் பணியிலிருந்து தேசிய பதுகாப்பு படையினர் படிப்படியாக விலக்கி கொள்ள படவுள்ளனர்.
ஏற்கனவே 20 விவிஐபி.களுக்கு “இஜட்’ பிரிவின் கீழ், தேசிய-பாதுகாப்பு-படையினர் பாதுகாப்பு தந்து வந்தனர். தற்போது 16 வி.வி.ஐ.பி.களுக்கு மட்டும் இந்த பாதுகாப்பு வழங்கப்பட்டு வருகிறது . வி.ஐ.பி-களுக்கு பாதுகாப்பு அளிக்கும் பணி, மாநில போலீசாரிடம் ஒப்படைக்க பட திட்டமிட பட்டுள்ளது.
வயிற்றில் பூச்சியா - குழந்தையின் வயிற்றில் பூச்சி இருக்கிறது என்ற சந்தேகம் வந்தவுடனேயே ... |
இதன் வேர், இலை, பால், விதை, வெப்பமும் இனிப்பும் கைப்பும் உள்ள சுவகைகளை ... |
Leave a Reply
You must be logged in to post a comment.